தமிழக கல்வித்துறை வரலாற்றில் மாவட்டங்களில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளே அரசு பொது தேர்வுக்குரிய சூப்ரவைசர்கள், பறக்கும்படை உறுப்பினர்களை அந்தந்த மாவட்டத்திற்கு நியமனம் செய்து வந்தனர்.
கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Wednesday, December 18, 2013
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல். அனைத்து ஆசிரியர்களும், 2016க்குள்,தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென,மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவு
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் ,பள்ளிகளில்10ம் வகுப்பு வரை,தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010ஆக., 23க்கு பிறகு,நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,695 ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி.
அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
பணியிடங்கள் விவரம் வருமாறு:
பள்ளிக்கல்வித்துறையில்
PG. -981
BT TAMIL. -115
BT OTHERS -417
PET -99
ஓவிய ஆசிரியர் -57
இசை ஆசிரியர் -31
தையல் ஆசிரியர் -37
தொடக்கக் கல்வித்துறையில்
இடைநிலை ஆசிரியர் -887
மேற்கண்ட காலிப்பணியிடங்களின் பட்டியல் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு
வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இப்பணியிடங்கள் அண்மையில் நடந்து
முடிந்துள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர்
போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படுமா? அல்லது புதிய தேர்வுகள் வைத்து
நிரப்பப்படுமா? என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம்தான் முடிவு செய்யும் என
பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.இராமேஸ்வரமுருகன் தெரிவித்துள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன
Tuesday, December 17, 2013
குளறுபடி கேள்விகளுக்கு மதிப்பெண் எங்கே?: ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் குமுறல்
தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாததால் லட்சக்கணக்கான தேர்வர்கள் தங்களது பணி வாய்ப்பை இழந்துள்ளனர்.
ஆகஸ்ட் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு நடை பெற்றது.
ஆகஸ்ட் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு நடை பெற்றது.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கு ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான TATA பொதுச்செயலாளர் திரு.கிப்சன் அவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 11ஆம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாராணைக்கு வந்த போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞ்சர் இரண்டு வார கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து,
6 முதல் 8ம் வகுப்பு வரை உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு
பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும், கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
10, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பார் கோடுடன் கூடிய தேர்வுத்தாள் அறிமுகம்
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ள 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் விடைகளை எழுதும் தாள்களை புத்தக வடிவில் வழங்கும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய அரசு தேர்வுகள் துறை முடிவு செய்துள்ளது.
Monday, December 16, 2013
Saturday, December 14, 2013
புதிய நியமனத்தில் பி.இ.டி., (PET)ஆசிரியர் புறக்கணிப்பு: வெறும் 17 இடங்கள் தந்ததால் அதிருப்தி
நடப்பு கல்வி ஆண்டில், நியமிக்கப்பட உள்ள, 3,525 ஆசிரியரில், வெறும், 17 இடங்கள் மட்டும், உடற்கல்வி ஆசிரியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பி.இ.டி., ஆசிரியர் பணியிடங்களை புறக்கணிக்கும் வகையில், கல்வித் துறை நடவடிக்கை எடுத்திருப்பதாக, உடற்கல்வி ஆசிரியர், அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
புதிய குரூப் 1 தேர்வு அறிவிப்பு 17ம் தேதி வெளியாகிறது
துணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 தேர்வு அறிவிப்பு, 17ம் தேதி வெளியாகிறது.துணை கலெக்டர், 3; வணிக வரித்துறை அலுவலர், 30; ஊரக வளர்ச்சித் துறையில், 30 பணியிடம் உட்பட பல்வேறு துறைகளில், 70 முதல் 80 பணியிடங்கள் வரை, அறிவிப்பில் இடம்பெறும் என, தெரிகிறது. 17ம் தேதிக்குள், மேலும் கூடுதல் காலி பணியிடங்கள், அரசு துறைகளில் இருந்து, தேர்வாணையத்திற்கு வரும் பட்சத்தில், காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
கூடுதலாக 3,500 ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி: நடப்பாண்டில் புது ஆசிரியர்கள் 18,500 ஆக உயர்வு
நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் இருந்து, தேர்வு செய்யப்பட உள்ள, 15 ஆயிரம் பேர் நியமனத்துடன் சேர்த்து, இந்த, 3,500 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், ஒட்டுமொத்தமாக, 18,500 ஆசிரியர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
Friday, December 13, 2013
மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு
மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
தனியார் மூலம் கணினி மயமாகும் அரசு ஆவணங்கள்: ரகசியம் பறிபோகும் அபாயம் - நாளிதழ் செய்தி
அரசு ஆவணங்களை, தனியார் மூலம், கணினி மயமாக்கும் திட்டத்தால், அரசின் முக்கியமான ரகசிய தகவல்கள் திருடப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதில் மாற்றம்: மத்திய அரசு திட்டம்
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு, யு.ஜி.சி.,மூலம், மத்திய அரசு நிதியுதவி அளிப்பதை தவிர்த்து, அந்தந்த, மாநில உயர்கல்வி கவுன்சில்கள் மூலம் அளிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டு வருகிறது. அதே போல, மாநில தர மதிப்பீட்டு கவுன்சில் அமைக்கவும் பரிந்துரைத்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம்: தமிழக அரசுக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழக அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது.
8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
click here download to APPLICATION FOR NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP EXAMINATION, 2014
தேசிய திறன் தேர்வுதேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு என்.எம்.எம்.எஸ். தேர்வு அனைத்து வட்டார அளவில் நடைபெறவுள்ளது.
மீண்டும் இரட்டைப்பட்டம் வழக்கு ஜனவரி 2 க்கு ஒத்திவைப்பு
இன்று (13.12.2013 )சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் 69வது வழக்காக பிற்பகல் 1.10 மணியளவில் விசாரணைக்கு வந்தது.மேலும் அரசு தரப்பில் AFFIDAVIT தாக்கல் செய்தனர்.
Thursday, December 12, 2013
இரட்டைப்பட்டம் வழக்கு இன்று (13.12.13) விசாரணை நிறைவடையுமா?
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் 69வது வழக்காக வருகிறது. விசாரணையை எட்டிப்பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சிறப்பு அமர்வு என்பதால் வழக்கு இன்று நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம்.
பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு பணியில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க திட்டம்
பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுப் பணியில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி, முதுகலை ஆசிரியர் மட்டும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தவறாக அச்சிடப்பட்ட வினா: ஒரு மதிப்பெண்ணில் வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர் கண்ணீர்
ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரே கேள்வி எண்ணில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில வழி கேள்விகள் வேறுபட்டு இருப்பதுடன், இதற்கான பதில்களும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது புதிய புகார் எழுந்துள்ளது.
பள்ளிக்கூட வளாகத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு பாதுகாப்பு அவசியம் தேவை என்றும் வெளியாட்கள் சம்பந்தம் இல்லாமல் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கக்கூடாது என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் - மேற்பார்வையாளர்களுக்கு தலைமை ஆசிரியர் பணிமாற்றம் கவுன்சலிங் ஒன்றிரண்டு நாட்களில் நடைபெறும் என எதிர்பார்பு
மேற்பார்வையாளர்களை, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பணி மாற்றம் செய்வது தொடர்பாக (அரசாணை எண்: 212/10.12.2013) உத்தரவு நேற்று வெளியாகியுள்ளதாக கல்வித் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நம்பத்தகுந்த செய்தி:
மேற்பார்வையாளர்களுக்கு தலைமை ஆசிரியர் பணிமாற்றம் கவுன்சலிங் ஒன்றிரண்டு நாட்களில் நடைபெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்பத்தகுந்த செய்தி:
மேற்பார்வையாளர்களுக்கு தலைமை ஆசிரியர் பணிமாற்றம் கவுன்சலிங் ஒன்றிரண்டு நாட்களில் நடைபெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும், வட்டார வள மைய ஆசிரியர், 4,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் தர மத்திய அரசு மறுப்பு தமிழக கல்வி துறை அவசர ஆலோசனை
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும், வட்டார வள மைய ஆசிரியர், 4,500 பேருக்கு, சம்பளமாக, 148 கோடி ரூபாய் வழங்க, மத்திய அரசு மறுத்துள்ளது. இதனால், இந்த ஆசிரியரை, மாநில அரசின் சம்பள கணக்கிற்கு மாற்றுவது குறித்து, கல்வித் துறை அவசரமாக ஆலோசித்து வருகிறது.
Subscribe to:
Posts (Atom)

