கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Tuesday, November 27, 2012

    வி.ஏ.ஓ., தேர்வு முடிவை வெளியிட தடை கோரி மனு

    வி.ஏ.ஓ. தேர்வு முடிவை வெளியிட தடை கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

    முதுகுளத்தூர் அருகே கீழகன்னிசேரி சரவணன் உட்பட, 4 பேர்தாக்கல் செய்த மனு: வி.ஏ.ஓ.,க்கள், 3488 பேரை நியமனம் செய்ய, 2011 பிப்., 20 ல் தேர்வு நடந்தது. இதில், ஆதி திராவிடர்களுக்கான, 1077 பின்னடைவு பணியிடங்கள் அடங்கும். நாங்கள் தேர்வுஎழுதினோம். 2011 ஜூலை, 19 ல் முடிவு வெளியிடப்பட்டது.

    பின்னடைவு பணியிடங்களில், 270 பேர் காத்திருப்போர் பட்டியலில்வைக்கப்பட்டனர். பணியில் சேராதவர்கள், பணியிலிருந்துவிலகியவர்கள், வேறு வேலைகளுக்குச் சென்றவர்களால் ஏற்படும்,காலிப் பணியிடங்களில் எங்களை நியமிப்பதாக, அரசு தெரிவித்தது.மேலும், 1870 வி.ஏ.ஓ.,க்களை நியமிக்க, 2012 ஜூலை, 9 ல் அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    ஏற்கனவே, பணியில் சேராமல் ஏற்பட்ட, காலி இடங்களையும் சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.குரூப் 2 தேர்வில், ஏற்கனவே வி.ஏ.ஓ.,தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் பங்கேற்றுள்ளனர். இதனால்,காலிப் பணியிடங்கள் ஏற்படும். முதலில், வி.ஏ.ஓ., தேர்வு முடிவு வெளியிட்டால், எங்களது உரிமை,பணிவாய்ப்பு பாதிக்கப்படும்.

    No comments:

    Post a Comment