கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, February 27, 2013

    தனியார் பள்ளிகளின் தரம் அடிப்படையில் "கிரேடு' வகை திட்டம் அறிவிப்பு

    தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த தரத்தின் அடிப்படையில், "ஏ.பி.சி.டி.,' என, நான்கு வரையான, "கிரேடு' அங்கீகாரம் வழங்கப்படும் என, தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது.பள்ளிகள் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு....இணையாக சம்பளம் வழங்கப்படுகிறதா, விளையாட்டு, இதர கற்பித்தலில் ஈடுபாடு, ஆசிரியர்-மாணவர் விகிதாசாரம், நூலக வசதி, பள்ளியின் சுற்றுச்சூழல், வெளிப்படையான நிர்வாகம் உள்ளிட்ட, 10 வகைகளில், ஒவ்வொன்றுக்கும், புள்ளிகள் தரப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில், பள்ளிகள் பெறும் புள்ளிகள் அடிப்படையில், "கிரேடு' வழங்கப்படும்.
    அதன்படி, 76 புள்ளிகள் முதல், 100 வரை பெறும் பள்ளிகள், "ஏ' கிரேடு, 51-75 வரையிலான புள்ளிகளைப் பெறும் பள்ளிகளுக்கு, "பி' கிரேடு, 26-50 வரை பெறும் பள்ளிகளுக்கு, "சி' கிரேடு மற்றும் 26 புள்ளிகளுக்கு கீழே பெறும் பள்ளிகளுக்கு, "டி' கிரேடும் வழங்கப்படும் என, கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது. புதிய கட்டணங்களை நிர்ணயிக்க, தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்கும்போது, மேற்கண்ட புள்ளி விவரங்களை, விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கட்டண நிர்ணயக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

    No comments:

    Post a Comment