கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Thursday, November 22, 2012

    பணி நியமனத்திற்கான பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

    டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களில், பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
    இறுதி தேர்வுப் பட்டியலில், இடம்பெறும், 22 ஆயிரம் பேருக்கு, விரைவில் வேலை வழங்கப்பட உள்ளது. டி.இ.டி.,தேர்வு அடிப் படையில்,

    இடைநிலை, பட்டதாரி ஆசிரியர், 25 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவர் என, டி.ஆர்.பி., அறிவித்தது.


    இந்த ஆண்டு, ஜூலையில் நடந்த முதல் டி.இ.டி., தேர்வில், 2,448 பேரும், அக்டோபரில் நடந்த மறு தேர்வில், 19 ஆயிரம் பேரும், தேர்வு பெற்றனர். ஆசிரியர் நியமன புதிய வழிகாட்டி விதிமுறைகளின்படி, இவர்கள் அனைவருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    தற்போது, இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் இரு நாட்களில் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உரிய சான்றிதழ் இல்லாதவர்கள், பாடத்திற்குரிய கல்வித்தகுதி இல்லாதவர்கள் குறித்து டி.ஆர்.பி., அதிகாரிகள், கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

    டிசம்பர் இறுதிக்குள்...

    முதல் தகுதி தேர்வுக்கு, தனி இறுதி தேர்வுப் பட்டியலும், மறு தேர்வுக்கு, தனி இறுதி தேர்வுப் பட்டியலும், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பட்டியல் வெளியானதும், 22 ஆயிரம் பேரும், துறை வாரியாக பிரித்து, சம்பந்தபட்ட துறைகளுக்கு, தேர்வுப் பெற்றவர்களின் பட்டியலை,டி.ஆர்.பி., அனுப்பும்.முதலில், பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, அதன்பின் மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகள், சமூக நலத்துறை பள்ளிகள் என, படிப்படியாக ஆசிரியர் பிரித்து, பணி நியமனம் செய்யப்படுவர். அடுத்த மாத இறுதிக்குள், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    400 பேர் தகுதியிழப்பு?

    டி.இ.டி., மறுதேர்வில் தேர்வு பெற்ற, 19 ஆயிரம் பேரில், 2 சதவீதம் பேர் வரை, தகுதி இழக்க நேரிடும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, 380 பேர் வரை, தேர்வுப் பட்டியலில் இருந்து, நீக்கப்படுவர் என, தெரிகிறது.

    இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: சிலர், சரியான கல்வித்தகுதியை பெற்றிருந்தாலும், உரிய சான்றிதழ்கள் இல்லாமல் உள்ளனர். சிலர், "கிராஸ் மேஜர்" பாடங்களை படித்துள்ளனர். இன்னும் சிலருக்கு, கல்வி தகுதிக்குரிய சான்றிதழ்கள் இருந்தாலும், சாதி சான்றிதழ் உள்ளிட்ட இதர சான்றிதழ்கள் இல்லாமல் உள்ளனர்.

    அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் படித்து, பட்டம் பெற்றவர்களும் உள்ளனர். இப்படி, பல்வேறு காரணங்களால், இரண்டு சதவீதம் பேர் வரை, பாதிக்கப்படலாம். இவர்கள் குறித்த சரியான புள்ளி விவரம், ஓரிரு நாளில் தெரியும். இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தகுதியில்லாதவர்களின் பட்டியலை, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    No comments:

    Post a Comment