இவர்கள், அரசின் மற்ற துறைகளில் பணியில் சேர்வதை விட, கல்வித்துறையில் "டைப்பிஸ்ட்' இளநிலை உதவியாளர்களாக விரும்பி சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. பி.எட்., அல்லது ஆசிரியர் பயிற்சி முடித்து, கல்வித்துறையில் பணியாற்றுவோருக்கு 2 சதவீதம் ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆண்டுதாறும் இந்த 2 சதவீத பணியிடத்தை
நிரப்பும்போது,வாய்ப்பு கிடைத்தால் ஆசிரியர் பணிக்கு சென்று விடலாம் என்ற நம்பிக்கையில் கல்வித்துறை பணியில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.கல்வித்துறையினர் கூறுகையில், ""கடந்த காலங்களில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் டி.என். பி.எஸ்.சி., போன்ற போட்டித் தேர்வு எழுதுவது மிக குறைவு. தற்போது, பி.இ.,முடித்தவர்கள் கூட, 10ம் வகுப்பு தகுதியான குரூப் 4 தேர்வை எழுதுகின்றனர். அதிர்ஷ்டவசமாக தேர்ச்சி பெறும்போது, அரசு பணி என்ற ஒரே காரணத்தால் பணியில் சேருகின்றனர். கல்வித்துறையில் பணி மூப்பில் 2 சதவீத ஆசிரியர் வாய்ப்பு இருப்பதால் ஆசிரியர் பயிற்சி முடித்தோர் இத்துறையை விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர்,'' என்றனர்.
No comments:
Post a Comment