கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, October 30, 2013

    தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார்



    தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அமைச்சரவை அடிக்கடி மாற்றியமைக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் இதுவரை 5 அமைச்சர்கள் மாறிவிட்டனர்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது : விசாரணை ஒத்திவைப்பு

    தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை கோரிய மனு மீதான விசாரணையில், முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்தியநாராயணா கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    Tuesday, October 29, 2013

    தொடக்க பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்

    மக்கள் கல்விக் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் மாநிலம் முழுவதும் தொடக்க பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை நடைமுறைப்படுத்தும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், ஆங்கில கல்வி திட்டத்தை திரும்ப பெற வேண்டும், கிராமப்புற மாணவர்களுக்கு இட ஓதுக்கீடு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கி, 25 சதவிகித ஓதுக்கீட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஆங்கில வழி கல்வியால் தமிழ்மொழிக்கு பாதிப்பில்லை: கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

    அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டதால் தமிழ்மொழிக்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழக சட்டப்பேரவையில் விளக்கம் அளிக்கப்பட்டது. 


    இந்திய தேசிய கொடியை அவமதித்தால் 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேசிய கொடியை கையாள வேண்டிய வழிமுறைக்களை விளக்கி தமிழக அரசு உத்தரவு

    click here to download the govt letter of instruction of prevention of national flag from insult reg

    டி.ஆர்.பி. தேர்வில் பிழையான கேள்வித்தாள்: மறுதேர்வு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை

    முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்தும் உத்தரவுக்கு உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. 


    மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழகத்திலும் ஊதியம் - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

    மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 


    எஸ்எம்எஸ்சுக்கு ஏற்ப கட்டணம்:ரிசர்வ் வங்கி

    வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ்களின் எண்ணிக்கைக்கேற்ப கட்டணம் வசூலிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 


    தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பரிசீலனை

    அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 34 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் அவதிபட்டு வரும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு அளிக்க, பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.
    தமிழகத்தில் உள்ள, 2,595 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1,605 பள்ளிகளில் மட்டும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், தொழிற்கல்விப் பிரிவு இயங்கி வருகிறது. 



    இறந்தவர்களுக்கு ஓய்வூதியம்: அரசுக்கு மாநில கணக்காயர் கடிதம்

    முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது

    முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய, டி.ஆர்.பி., நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் பாடத்திற்கு மறுதேர்வு நடத்த அளிக்கப்பட்ட உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.


    Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Call Letter for Candidates in Additional List

    கோர்ட் அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராக உத்தரவு

    கோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக மாநில உயர்கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


    RTI - 2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்

    RTI - TRB - B.ED., WITH OTHER OPTION ELIGIBLE TO GET BT APPOINTMENT REG TRB LETTER CLICK HERE

    TET தேர்வு - மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை,அமைச்சர் சட்டசபையில் தெரிவித்தார்

    திருச்சி மாவட்டத்தில் SMS ATTENDANCE நாளை முதல் (29.10.2013) - மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு

    திருச்சி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் தினசரி வருகையை நாளை முதல் (29.10.2013) SMSமூலம் உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 9.40 மணிக்குள் SMS மூலமும்,மாலை எழுத்து பூர்வமாகவும் தெரிவிக்க வேண்டும். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் காலை 10.00 மணிக்குள் ஆசிரியர்களின் வருகையை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.

    ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மாணவரே அட்டெஸ்ட் செய்யலாம்: மத்திய மனித வளத்துறை அனுமதி

    ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை தாங்களே அட்டெஸ்ட் செய்து கொள்ளலாம்; அதற்காக கெசட்டட் அதிகாரிகளை அணுகத் தேவையில்லை என, மத்திய மனித வளத் துறை அறிவித்துள்ளது. 


    தொடக்கக் கல்வி - நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் முகாம் நாளானது சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனுசரிக்க உத்தரவு

    CLICK HERE to download -DEE - GRIEVANCE DAY POSTPONED FOR NOV'2013 DUE TO DEEPAVALI HOLIDAY REG

    அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர், ஊழியர்களின் சான்றிதழ்கள் உண்மை தன்மை கண்டறியும் பணி

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கல்வி சான்றிதழ்கள் உண்மை தன்மை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 1300 பேருடையை சான்றிதழ்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. 

    டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு

    சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள்,டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது;6.5லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக உள்ளன. தற்போது,சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முடிவு வெளியாவது தள்ளிப்போவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளையுடன், சட்டசபை கூட்டத்தொடர் முடிகிறது. அதன்பின், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகும் என,எதிர்பார்க்கப்படுகிறது

    Friday, October 25, 2013

    ஒன்பதாம் வகுப்பிற்குறிய Text Books Online - Standard IX - Term II Books

    Latest additions :Std. IX - II Term (Trimester Pattern) Text Books  and
    Revised edition II Term text books for Class 6 to 8
       



    Class 1 Class 2 Class 3 Class 4 Class 5 Class 6
               
    Class 7 Class 8 Class 9 Class 10 Class 11 Class 12
               
        Diploma in Teacher Education - First Year Diploma in Teacher Education - Second Year

    Thursday, October 24, 2013

    இந்திய அரசின் RTE சட்டப்படி D.T.Ed + BA / B.SC படித்தால் 1 to 8 வரை ஆசிரியராக பணியாற்றலாம்

    Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Click here for Additional Provisional List for Certificate Verification

    Click here-TRB-PG-ADDITIONAL PROVISONAL LIST FOR CERTIFICATE VERIFICATION

    பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரிப்பு: கேள்விக்குறியான இலவச கட்டாயக் கல்வி

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பிச்சை எடுக்க வைப்பதால் பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், இலவச கட்டாயக் கல்வியை முழுமையாக அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


    PG TRB certificate verification stay order - clarification.

    TN PG TRB announced the exams in the month of april 2013. Then it conducted the exam over all Tamilnadu in July 21,2013. Nearly 1.59 candidates appeared for the exam. The total vacancies are 2881.

    After valuation TRB released the Final Answer keys and marks. But the Tamil candidates were not get any solution till today. They are worried about whether the Teacher Recruitment Board conduct re-exam (or) re-valuation the answers of 110.



    TRB- ஆசிரியர் தேர்வு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு - அமைச்சர் பழனியப்பன்


    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 தேர்வில் வினாக்கள் முறையில் மாற்றம்

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 தேர்வில் வினாக்கள் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டதாரிகளின் அறிவுத்திறனையும் ஆற்றலையும் சோதிக்க கட்டுரைகள் எழுதும் வகையில் வினாக்கள் கேட்கப்பட இருக்கிறது.


    பத்துக்கும் குறைவாக மாணவர்: பள்ளிகளை மூட உத்தரவு : கேரள அரசு அதிரடி

    கேரளாவில், 10க்கும் குறைவான மாணவர்களை உடைய, அரசு பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. அதனால், மாநிலத்தில் குழந்தைகள் இல்லா பள்ளிகளை மூட, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 12 பள்ளிகள் மூடப்பட்டன.


    மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி - அக்., 26 முதல் பி.எட்., வகுப்புகள்

    மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் நடைபெறும் பி.எட்., படிப்பிற்கான வகுப்புகள் அக்.,26 முதல் 2ம் ஆண்டு (13ஏ) மாணவர்களுக்கும், நவ.,9 முதல் முதலாம் ஆண்டு (14ஏ) மாணவர்களுக்கும் நடக்கின்றன.சென்னை, மதுரை, கரூர், பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் இவ்வகுப்புகள் நடக்கின்றன என, கூடுதல் இயக்குனர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பரிசீலனை

    அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 34 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் அவதிபட்டு வரும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு அளிக்க, பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.


    புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு : ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை

    ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது. வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந் ததும், தேர்வர்களுடைய ஆவணங்கள் அனைத்தும், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு கொண்டு வரப்படும்.


    மழைக்காலம் துவங்கியுள்ளதால் பழுதான கட்டடத்தில் வகுப்பு வேண்டாம் : பள்ளி கல்வி துறை உத்தரவு

    மழைக்காலம் துவங்கியுள்ளதால், பழுதடைந்த கட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாம்' என, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

    மாணவர்களை "டீ' வாங்க பயன்படுத்தும் ஆசிரியர்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    மாணவர்களை டீ மற்றும் சாப்பாடு வாங்க அனுப்பும் ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், சமீப காலமாக, வகுப்பில் படிக்கும் மாணவர்களை சாப்பாடு, டீ, தின்பண்டங்களை வாங்கும் வேலைக்கு பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்களும், 


    IGNOU TERM END EXAM 2013-DECEMBER EXAM SHEDULE

    Es 331-9.12.13
    332_ 10/12
    333 _11/12
    341 _12/12
    342 _13/12
    343 _14/12

    எம்.எட்., படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

      click here & get apply to online

    குருக்சேத்ரா பல்கலைக்கழகத்தில் எம்.எட்., படிப்பில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க இளங்கலை பி.எட் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

    Wednesday, October 23, 2013

    2,276 பேருக்கு பதில், 1.6 லட்சம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்க்க முடிவு: இப்போதைக்கு வராது முதுகலை ஆசிரியர் தேர்வுப பட்டியல்

    ஒரு இடத்திற்கு, ஒருவர் வீதம், வெறும், 2,276 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியலை,
    விரைந்து வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்த நிலையில், ஐகோர்ட், மதுரை கிளை வெளியிட்ட உத்தரவு காரணமாக, தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த உள்ளது. இதனால், இறுதி தேர்வுப் பட்டியல், இப்போதைக்கு வராது என, தேர்வர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.



    Tuesday, October 22, 2013

    TET தேர்வு முடிவு எப்போது? வாரிய உறுப்பினர் அறிவொளி பதில்

           

    முதுகலை ஆசிரியர் நியமனத் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு முடிவு வெளியிட தடை

    முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு, ஆனால் இறுதிப்பட்டியல் வெளியிட தடை .இன்று (22.10.2013) மற்றும் நாளை (23.10.2013) நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுத்துள்ளது. ஆனால் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு பின் வெளியிடவுள்ள இறுதிப்பட்டியலுக்கு தடை விதித்துள்ளது.

    Sunday, October 20, 2013

    தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தனியார், அரசு பள்ளிகளிடம் போட்டியை ஊக்குவிப்பதற்காக சிறந்த பள்ளிகளுக்கு சுழற்கேடயம்

    மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்புத்திறன், செயல்வழி கற்றல், கணிதம் அடிப்படை திறன், குடிநீர், கழிப்பறை வசதி, கம்யூட்டர் பயன்பாடு, விளையாட்டு, பதிவேடு பராமரிப்பு உள்ளிட்ட 14 வகைப்பாடுகளின் அடிப்படையில் மாவட்ட அளவில் தலா மூன்று பள்ளிகளை தேர்வு செய்து அனுப்ப தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநரை கொண்ட தேர்வுக்குழு சிறந்த பள்ளிகளுக்கான பட்டியலை தயாரித்து வருகிறது.

    ஆசிரியர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வருகிறார்களா என்பதைக் கண்டறிய மாவட்டத்தில் 300-க்கும் அதிகமான அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் தினமும் காலை 9.10 மணிக்கு தொடங்கி மாலை 4.10 மணிக்கு முடிவடைகிறது. ஆனால் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர், காலையில் வகுப்புகள் தொடங்கிய பின்னர் பணிக்கு வந்துவிட்டு, மாலையில் வகுப்புகள் முடிவதற்கு முன்னதாகவே சென்று விடுவதாகவும் அதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் அரசுக்குப் புகார்கள் சென்றன.


    அனுமதி பெறாமல்உயர் கல்வி பயின்றாலும்ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் ஆனால் துறை ரீதியாகதுறைத் தலைவர் நடவடிக்கை எடுக்கலாம். ஊக்க ஊதியம் அனுமதிக்கமாட்டேன் என துறை அலுவலர் மறுக்கக் கூடாது எனும் தொ.க.இ கடிதம்

    தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 23061/இஐ2/96,நாள்.5.99- உயர் கல்வி பயில துறை ரீதியான விவரங்கள் சார்ந்து

    ஆறு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.41 கோடி

    ஆறு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு, 2012-13, 13-14ம் கல்வி ஆண்டுக்கு, ரூ.41 கோடியை சிறப்பு கட்டணமாக (ஸ்பெஷல் பீஸ்) அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.


    பகுதி நேர ஆசிரியர்களை சிறப்பு வகுப்புகளில் பயன்படுத்த உத்தரவு

     பள்ளி தேர்வு விடுமுறை நாட்களில், சிறப்பாசிரியர்கள், "ஆப்சென்ட்' ஆவதை தவிர்க்கும் பொருட்டு, விடுமுறை நாட்களில், அவர்களை சிறப்பு வகுப்புகள் எடுக்க, பயன்படுத்தி கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.


    அரசு உயர்நிலை ,மேல் நிலை பள்ளிகளில் பணி புரியும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குருவளமைய பயிற்சியில் கலந்து கொள்ளும் நாட்களுக்கு ஈடு செய் விடுப்பு வழங்குவது குறித்த அரசாணை

    பள்ளிகல்வித் (சி 2) துறை அரசாணை (நிலை)எண் 128 ,நாள் -07.05.2010-விடுமுறை நாட்களில் நடைபெறும் குருவளமைய பயிற்சியிக்காக ஈடு செய் விடுப்பு ( மற்றும் ) வேலை நாட்களாக கருதும் அரசாணை .

    ஆசிரியருக்கு வழங்கிய தேர்வு நிலை அந்தஸ்தை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

    அரசுப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்தை ரத்து செய்த உதவி தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 


    Friday, October 18, 2013

    சிறுமிகள் திருமணத்தை தடுக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள்

    13 முதல் 18 வயது வரையான மாணவிகள், பள்ளியில் திடீரென மாற்று சான்றிதழ் கேட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தகவல் தரவேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். 


    Phone Nomber ( நம்பரை ) வைத்து Adress ஐ கண்டு பிடிக்கலாம் வாங்க

    எமக்கு வரும் Wrong  Call ஐ எங்கிருந்து வந்தது என்று இலகுவாக கண்டு பிடிக்கலாம்.
    யாராவது Wrong Call பண்ணி எம்மை தொந்தரவுகள் செய்தால் அவருடைய நம்பரை வைத்து   அவர் யார்அவருடைய விலாசம் என்ன என்பதை
    கண்டு பிடிக்கலாம்.
    இது Sri Lanka Telecom டைய நம்பர். இது எல்லோருக்கும் பயன் தரக்கூடியதாக உள்ளது. இதை Install பண்ணத் தேவையில்லை அதனால் பயன்படுத்துவது இலகு.
    இது ஒரு சிறிய Aplication ஆகும். இதை இன்ஸ்டால் பண்ணாமல் உபயோகிக்கலாம். இதை சிலபேர் அறிந்திருக்கலாம். இருந்தாலும் கூட அநேகமானோருக்கு  தெரியாது என்பதால் அதை உங்களுக்கு இப்பொழுது நாம் வழங்குகிறோம்.
     கீழுள்ள link ஐ அழுத்தி அந்த மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள். அதை உங்களது கணணியில் நிறுவிக்கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது Phone நம்பரை மாத்திரம் கொடுத்தால் உரியவருடைய விலாசம் என்பவற்றை கண்டுபிடிக்கலாம்.
    எவ்வாறு Download செய்வது?

    1. click here to Download SOFTWARE

    தமிழகத்தில் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு

    அண்மையில் நடந்து முடிந்த தகுதித் தேர்வு மூலம் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக பாட வாரியான காலியிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 


    அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் அடிப்படை நிலை (Foundation Programme )தமிழக அரசுத் தேர்வுத்துறையால் நடத்தப்படும் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு இணையானதா ? RTI-செய்தி

    click here-State board plus two equal to foundation programme Annamalai university for RTI Letter

    3.11.2013 மற்றும் 4.12.2013 ஆகிய தேதிகளில் 1743 பணியிடங்களுக்காக இடைநிலை ஆசிரியர் சான்றிதழ் சரிப்பார்ப்பு நடைபெற்றது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கோரப்பட்ட கேள்விகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த பதில்கள்

    click here-1743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த பதில்கள்

    GENERAL PROVIDENT FUND – Share due to the deceased Nominee as per Legal Heirship Certificate – Amendment to rule 30 of General Provident Fund (Tamil Nadu) Rules – Issued – Notified.

    click here to download G.O No. 412 Dt: October 17, 2013-GENERAL PROVIDENT FUND REG

    10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ,3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு

    தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 10 ஆயிரம் உள்ளன. மீதம் உள்ள 3 ஆயிரம் பணியிடங்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள். இவற்றை நிரப்ப, பாடவாரியான காலியிடங்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இப்பணி முடிந்து, தகுதித் தேர்வின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன

    வரும், 25ம் தேதி முதல் நடக்க உள்ள குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

    வரும், 25ம் தேதி முதல் நடக்க உள்ள குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில்
    வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா அறிவிப்பு: குரூப் - 1 முதன்மை தேர்வு, வரும், 25, 26, 27 ஆகிய தேதிகளில், சென்னையில் மட்டும் காலையில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள், click here & get your HALL TICKET



    Thursday, October 17, 2013

    இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் குழுவில் 9300+4200 இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கினால் அரசுக்கு பெரும் இழப்பு என்ற பொய்யான தகவல் அளிக்கப்பட்டுள்ளது...அதற்கான ஆதாரம்

    தொடக்கக்கல்வி துறையில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு 2013-2014 ஆம் கல்வியாண்டு -கேடயங்கள் வழங்க பள்ளிகள் பட்டியல் கோருதல் சார்ந்து

    click here to download தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

    மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் B.A - English (Vocational) பட்டப் படிப்பு B.A. English Literature பட்டப் படிப்புக்கு இணையானது - தமிழக அரசு அறிவிப்பு

    G.O Ms.No. 213 Dt: October 17, 2013 Higher Education – Equivalence of Degree – B.A. English (Vocational) awarded by Madurai Kamaraj University as equivalent to B.A. English Literature – Recommendation of Equivalence Committee – Orders – Issued.

    TET - தேர்வு: உருளையும், கோளமும் ஒன்றா? முழு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் (தாள் 2), தவறாக இடம்பெற்றிருந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்த விஜயலெட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, அக் கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டார். 


    TET மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு சொந்த ஊர் கிடைக்காது' 13,000 ஆசிரியர்களுக்கு சிக்கல்

    TET - புதிய ஆசிரியர்கள் ஜனவரியில் நியமனம்.ஆசிரியர் தேர்வு முடிவுகள் ஒரு சில நாளில் வெளியாக உள்ளது தேர்வு முடிவை பொறுத்தே பணிநியமனம் குறித்து முடிவு எடுக்கப்படும்

    Sunday, October 13, 2013

    அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்அதிகரிக்க ஒன்றிய வாரியாக குழு :அரசு உத்தரவு

    அரசு பள்ளிகளில்,10,பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க,ஒன்றிய அளவில் குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பொதுத் தேர்வுகளில்,தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம்  குறைவாக இருக்கிறது.குறிப்பாக,சிவகங்கை,ராமநாதபுரம்,திருவண்ணாமலை,கடலூர், விருத்தாச்சலம்,பெரம்பலூர்,தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில்,அரசு பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளன.


    கல்வியில் பின்தங்கிய 8 மாவட்டமாணவர்களுக்கு இலவச "நோட்ஸ்'

    கல்வியில் பின்தங்கிய எட்டு மாவட்டங்களை சேர்ந்த, 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச "நோட்ஸ்' வழங்க,'' அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அளவில்,10,பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில், பின்தங்கிய மாணவர்களை ஊக்கப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க,அரசு உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திண்டுக்கல், சிவகங்கை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களை, சேர்ந்த மாணவர்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதாக, அரசுக்கு தகவல் சென்றது.


    திருக்குறள் விளக்க உண்மைச் சம்பவம் மேற்கோள்!அரசு பாடப்புத்தகத்தில் மாணவனுக்கு "கவுரவம்'

    தமிழக அரசு, சமச்சீர் பாடத்திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் பருவ பாடப்புத்தகத்தில், திருக்குறள் தெளிவுரைக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவம், போட்டோவுடன் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.இளம் வயதில் நுண்ணறிவை பயன்படுத்திய மாணவனுக்கு, "கவுரவம்' கிடைத்துள்ளது.


    அங்கீகரிக்கப்பட்ட அரசு உதவி பெறும் பணியிடங்களை நிரப்ப அரசிடம் முன் அனுமதி பெற தேவை இல்லை.ஐகோர்ட்டு உத்தரவு

    அரசு உதவி பெறும் கல்லூரிகள் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசிடம் முன் அனுமதி பெறதேவையில்லை ஐகோர்ட்டு உத்தரவு சென்னை ஐகோர்ட்டில், திருச்சி மாவட்டத்தில் உள்ள நேரு
    மெமோரியல் கல் லூரியின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.



    Saturday, October 12, 2013

    மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

    மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

    ஆசிரியர் தகுதித்தேர்வு

    மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியில் சேர, தகுதித் தேர்வு தேர்ச்சி அவசியம். அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி ஆகிய அனைத்து விதமான பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். 



    மாணவர்களே ஆசிரியர்களின் அடையாளம் : இடை நிலை கல்வி இணை இயக்குனர் பேச்சு

    மாணவர்கள் தான் ஆசிரியர்களை அடையாளம் காண வைக்கின்றனர்,''என, இடை நிலை கல்வி திட்ட, மாநில இணை இயக்குனர் நரேஷ் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் நடந்த, மண்டல அளவிலான தலைமை ஆசிரியர்களுக்கான, திறன் மேம்பாட்டு பயிற்சி பணிமனையை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: 


    Central Teacher Eligibility Test (CTET) CENTRAL BOARD OF SECONDARY EDUCATION CTET - FEB 2014

    1. Please read the Information Bulletin of CTET - FEB 2014 carefully before you start filling the Online Application  Form.
    2. Candidates can apply for CTET - FEB 2014 ‘ON-LINE’ through website www.ctet.nic.in

    For ‘ON-LINE’ SUBMISSION - www.ctet.nic.in
    Candidates can apply ‘ON-LINE’ at CTET website www.ctet.nic.in. The candidate should supply all details while filling the Online Form. Candidates are required to take a print out of the computer generated Confirmation Page with Registration Number after successful submission of data. The Confirmation Page duly complete should be sent to CBSE.
    3. Examination Fees

    Category Only Paper – I or II Both Paper – I & II
    General / OBC Category Rs. 500 /- (Five hundered) Rs. 800 /- (Eight hundered)
    SC / ST / Differently Abled Category Rs. 250 /- (Two hundered Fifty) Rs. 400 /- (Four hundered)
    Service Charges & Service Taxes (as applicable) will be charged extra by the Bank or Post Office
    The fee can be remitted in the following ways:
    • Through Challan by deposit of prescribed fees in CBSE Account with Syndicate Bank or e-Post Office
    • By Debit/Credit Card.

    ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு

    ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த மாதம் 17 மற்றும் 18-ந் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இடை நிலை ஆசிரியர்களுக்கான தேர்வை 2 லட்சத்து 67 ஆயிரத்து 950 பேர் 677 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 17 ஆயிரத்து 974 பேர் மாற்றுத்திறனாளிகள்.


    சி.பி.எஸ்.இ., பாணியில் பொதுத்தேர்வு கேள்வித்தாள்... மாற்றம்! : நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாத இறுதியில் தயார்

    சி.பி.எஸ்.இ., பாணியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு கேள்வித்தாள் அமைப்பை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, தீவிர ஆய்வு செய்து வரும், சி.பி.எஸ்.இ., முன்னாள் தலைவர், பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு, இம்மாத இறுதிக்குள், அறிக்கையை தயார் செய்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


    Friday, October 11, 2013

    அடுத்த 6 மாதங்களில் 2 லட்சத்திற்கும் மேலான தமிழக அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு

    தமிழக அரசுப் பணியில் ஏ, பி, சி, டி என்ற 4 பிரிவுகளில்,அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை வேலை பார்க்கின்றனர். 4
    பிரிவுகளிலும் சேர்த்து 13 லட்சத்து 30 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.
    இதுதவிர, 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் ஓய்வு பெற்று பென்ஷன் பெற்று வருகின்றனர். 



    ஆசிரியர்கள் பணி நேரத்தில் பள்ளியில் இல்லாவிடில் இனி, ஊதியத்தில் “வெட்டு - தினமலர்

    பணி நேரத்தில் பள்ளியில் இருக்காத ஆசிரியர்களின் ஊதியத்தில் “வெட்டு’ விழும் வகையில், துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளை துவக்கியிருக்கிறது, கோவை மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் அலுவலகம்; இதற்கு, ஆசிரியர் சங்கம் ஆதரவு அளித்திருக்கிறது.


    Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Click here for Provisional List for Certificate Verification

    Teachers Recruitment Board
     College Road, Chennai-600006

    ரகசியம்... பரம ரகசியம்": சர்ச்சையில் டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு - நாளிதழ் செய்தி

    மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), பதவி உயர்வு தொடர்பாக, தனித் தனியாக அனுப்பப்பட்ட உத்தரவுகளால், கல்வித்துறையின் வெளிப்படை தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இந்த விஷயத்தில், இத்துறையில் முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 


    Thursday, October 10, 2013

    புதிதாக துவங்கப்பட்ட 55 துவக்கப் பள்ளிகளில் பெயர் பட்டியல்

    தொலைதூரக் கல்வியில் முதல்முறையாக எம்.எட். (சிறப்பு கல்வி) படிப்பை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது

    தபால்வழியில் பி.எட். படிப்பு மதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன், கோவை பாரதியார், தஞ்சை தமிழ், நெல்லை மனோன்மணீயம், சிதம்பரம் அண்ணாமலை, தமிழ்நாடு திறந்தநிலை என குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே தபால்வழியில் பி.எட். படிப்புகளை வழங்குகின்றன.


    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளீயீடு

    CLICK HERE TO DOWNLOAD – G.O No. 401 Dt: October 10, 2013 Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2013 – Orders – Issued.

    Wednesday, October 9, 2013

    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு

    click here to download தமிழக அரசின் அகவிலைப்படிகான செய்திக்குறிப்பு

    CCE பாட ஆசிரியர் மதிப்பெண் பதிவேடு -ஒன்பதாம் வகுப்பு அறிவியல்

    CCE மதிப்பெண் பட்டியல் எக்செல் படிவம்

    28 மாவட்ட கல்வி அலுவலர்கள், அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பி உத்தரவு

    தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களை நிரப்பி உத்தரவிடப்பட்டுள்ளது. சுமார் 28 மாவட்ட கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் அரசுஉயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலின் படி வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

    Tuesday, October 8, 2013

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதிய அனைத்துத் தேர்வர்களின் மதிப்பெண்களையும் சக தேர்வர்கள் பார்வையிடும் வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

    போட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை மொத்தமாக வெளியிட முடிவு செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. 


    மத்திய-மாநில அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

    மத்திய-மாநில அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


    முதல்வர் அறிவிப்பிற்கு தடை போடுகிறதா டி.ஆர்.பி.,? தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பில் குழப்பம்

    டி.ஆர்.பி.,யில், ஒவ்வொரு தேர்வு முடிவும், பெரும் இழுவைக்குப் பிறகே வெளியாகிறது. ஜூலையில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை, இரண்டரை மாதங்களுக்கு மேலாக, வெளியிடாமல் இருந்து வந்தது. டி.இ.டி., தேர்வு முடிவும் வெளியாகவில்லை.


    10% அகவிலைப் படி உயர்வு- தீபாவளிக்குள் அறிவிப்பு வெளியாகுமா அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு

    தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால், அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக 10% அகவிலைப் படி உயர்வு பற்றிய அறிவிப்பை
    தமிழ்நாடு அரசு அக்டோபர் இரண்டாம் வாரம் வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    பள்ளிகளில் 14 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்

    பசுமைப்படுத்தல் திட்டத்தில், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி வளாகங்களில், 13 லட்சத்து 93 ஆயிரத்து 695 மரக்கன்றுகள் நட, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதில், வனத்துறை மூலம் 3 லட்சத்து 75ஆயிரத்து 545 கன்றுகளும், தொண்டு நிறுவனங்கள் மூலம் 10 லட்சத்து 18 ஆயிரத்து 150 கன்றுகளும் நடப்பட உள்ளன. இவை அனைத்தும், அக்.,31க்குள் நடப்பட உள்ளது. இந்த மரக்கன்றுகளை வகுப்பு வாரியாக மாணவர்கள் பராமரிக்க வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 11 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

    தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தேர்வுநிலை / சிறப்புநிலை பணிக்கு 3% கூடுதல் ஊதியம் வழங்கிய உத்தரவிற்கு தெளிவுரை வழங்கி தமிழக அரசு உத்தரவு

    முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் இவர்கள் பணிசெய்வார்கள். தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை.

    முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்–2 மாணவர்களை அரசு தேர்வுக்கு தயார் செய்வதற்கு தற்காலிகமாக அடிப்படையில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரப்ப கொள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
    முக்கிய செய்தி : முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் இவர்கள் பணிசெய்வார்கள். தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை. 



    Monday, October 7, 2013

    பாஸ்போர்ட் விண்ணப்பிக்க செல்போனில் வசதி

    பாஸ்போர்ட் விண்ணப்பிக்க இனி செல்போனில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.இந்த வசதியால் இனி செல்போனிலே பாஸ்போர்ட் வின்னப்பிக்க, கட்டணம் செலுத்த வசதி செய்யப்படுகிறது.

    அனுமதி இல்லாத பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் : இயக்குனர் எச்சரிக்கை

    அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்தார். மூன்று மாவட்ட மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கூட்டம், திண்டுக்கல்லில் நடந்தது. 


    2,645 முதுகலை ஆசிரியர் பணியிடங்களையும், 3,900 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், தொகுப்பூதிய அடிப்படையில், உடனடியாக நிரப்புவதற்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    அரசு பள்ளிகளில், "ரெகுலர்' அடிப்படையில், ஆசிரியரை பணி நியமனம் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், மாணவர் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, 6,545 ஆசிரியர்களை, தொகுப்பூதிய அடிப்படையில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, நியமனம் செய்து கொள்ள, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


    முது நிலை ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவும் இறுதி விடைத்தாள் (ANSWER KEY ) வெளீயீடு - EXCEPT TAMIL

    Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Click here for Examination Result

    Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
    FINAL ANSWER KEY
    Telugu Geography  
    English Economics  
    Mathematics Commerce  
    Physics Political Science  
    Chemistry Home Science
    Botany Physical Education Director Grade I  
    Zoology Micro - Biology  
    History Bio - Chemistry

    மாவட்ட கல்வி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க சிறப்பு தேர்வு

    அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக நிர்வாகப் பணிகளையும் கல்வி அதிகாரிகள் கவனித்துக் கொள்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறையில் நேரடியான நுழைவுப் பணியாக மாவட்ட கல்வி அதிகாரி பதவி உள்ளது.இந்த பதவி 75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகிறது. பதவி உயர்வைப் பொருத்த வரையில், 40 சதவீத இடங்களை அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களைக் கொண்டும், மீதமுள்ள 35 சதவீத இடங்களை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டும் நிரப்புகிறார்கள்.


    D.T.ED + B.A(TAMIL ) & B,LIT + TPT & D.T.ED + B.LIT அனைத்தும் NOT ELIGIBLE FOR TAMIL GRADUATE TEACHER (B.Ed படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும் )-ஆசிரியர் தேர்வு வாரியம்-RTI-NEWS

    ஊழியர்களுக்கு 8 வாரத்துக்குள் ஓய்வூதிய பலன்கள் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

    ஓய்வு பெறும் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு, 8 வாரங்களில் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர்,கரூர் மாவட்டங்களை சேர்ந்த சோமசுந்தரம், மகாலிங்கம், செல்வராஜ்,வீரபாண்டியன், தர்மராஜ், நாகராஜன், ஜெயச்சந்திரன்,ஆரோக்கியசாமி, மாரிமுத்து, மோகன், சந்திரசேகரன், ராமலிங்கம்,,சந்திரகாசன், கோசவலு உட்பட 16 பேர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: 


    தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்தேர்வு முடிவை ஓரிரு நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது

    2,881 காலி இடங்கள்

    அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 2,881 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை 21-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை தமிழகம் முழுவதும்1 லட்சத்து 59 ஆயிரத்து 750 பேர் எழுதினார்கள். தேர்வுக்கான தாற்காலிக விடைகள் (கீ ஆன்சர்) ஒரு வாரத்தில் வெளியிடப்பட்டது. 



    இரட்டைப்பட்டம் வழக்கு- புதன் கிழமை(9.10.2013) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

    சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் நண்பகல் 12.45க்கு விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கில் இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த வழக்கறிஞர் முத்து குமாரசாமி அவர்கள் 45நிமிடம் வாதாடினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பின்னால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சார்பாக திரு.பீமன் அவர்கள் தன் வாதத்தை தொடர்ந்தார்கள். அதன் பின் வழக்கு விசாரணை வருகிற புதன் கிழமை(9.10.2013) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற புதன்கிழமை வழக்கு விசாரணை நிறைவு பெறும். தீர்ப்பு ஒரிரு வாரங்களில் வெளியாகும்.

    ஒரே மாதத்தில் 11 நாட்கள் விடுமுறை அரசு ஊழியர், ஆசிரியர்கள் மகிழ்ச்சி

    அக்டோபரில் மட்டுமே 11 நாட்கள் விடுமுறை கிடைப்பதால், ஆசிரியர், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, பக்ரீத் பண்டிகை உட்பட பண்டிகைகளுக்கு மட்டுமே 3 நாட்களும், சனி,ஞாயிறு எட்டு நாட்கள் விடுமுறை என, ஒட்டு மொத்தமாக, 31 நாட்களில், 11 நாட்கள் அரசு விடுமுறை கிடைப்பதால், அரசு ஊழியர்,ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த விடுமுறை நாட்களில், புத்தாடை எடுக்கும் பணியில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.துணிக்கடைகளில் கூட்டம் அதிகரித்தே காணப்படும்

    தமிழகத்தில், 37 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள், 9,438 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2002ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் (சர்வ சிக்?ஷ் அபியான்) துவக்கப்பட்டது.

    ஆறு முதல், 14 வயதுடைய குழந்தைகள் அனைவரும், இடைநிற்றல் இன்றி, ஆரம்பக் கல்வியை முடிக்க வேண்டும். மேலும், 1 கி.மீ., தூரத்துக்குள், ஒரு தொடக்கப் பள்ளியும், 3 கி.மீ., தூரத்துக்குள், ஒரு நடுநிலைப் பள்ளியும் துவங்கப்பட்டு, அதற்கு தேவையான கட்டடம், கழிப்பறை, உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தி, கற்பித்தலுக்குத் தேவையான ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டனர். 

    Friday, October 4, 2013

    இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களை படிக்கும்போதே ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராக தனி பாடம்

    இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களை படிக்கும்போதே தகுதித் தேர்வுக்கு தயார்படுத்த ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.இதற்காக, பி.எட். படிப்பில் இருப்பதைப் போல இடைநிலை ஆசிரியர் பயிற்சியிலும் தகுதித்தேர்வு பாடத்திட்டம் தொடர்பான புதிய தாள் சேர்க்கப்படும்.


    1 முதல் 9 ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவத்துக்கு 1.8 கோடி புத்தகங்கள் விநியோகம்

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்துக்காக மொத்தம் 1.8 கோடி இலவசப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.


    SSA - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர் -தொடக்க ஆசிரியர்களுக்கு "SOCIAL AWARENESS AND CYBER SAFETY" என்ற தலைப்பில் 19.10.2013 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 26.10.13 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் வட்டார வள அளவிளான மையப் பயிற்சி (BRC LEVEL TRNG ) நடத்த உத்தரவு

    SPD - 2013-14 - PRIMARY BRC TRNG WILL BE HELD ON 19.10.2013 & UPPER PRIMARY BRC LEVEL TRNG WILL BE HELD ON 26.10.2013 REG PROC CLICK HERE...

    மூன்று நபர் குழு அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு என தவறான தகவல்கள் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் ஒரு பகுதி



    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஒரே நொடியில் அறிய ஆன்லைன் வசதி

    கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஒரே நொடியில் அறிந்திட ஆன்லைன் வசதியை அரசு தேர்வுத்துறை செயல்படுத்த இருக்கிறது. இதுவரை 2 கோடி பழைய சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன. 


    Thursday, October 3, 2013

    மாணவர்களுக்கு இலவச பொருட்கள்: பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை

    மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை, நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பி, வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு, நோட்டு புத்தகம், சைக்கிள், பை, காலணி, அறிவியல் உபகரணம், லேப்-டாப் உட்பட 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. 


    ஒவ்வொரு அலுவலரும் ஆண்டுக்கு 180 பள்ளிகளைப் பார்வையிட வேண்டும்; 46 பள்ளிகளில் ஆண்டாய்வை மேற்கொள்ள வேண்டும்.தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு

    குறைந்தது 10 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.


    முறைகேடுகளை தவிர்க்க அனைத்து பணிகளையும் தேர்வுத்துறையே நேரடியாக செய்ய முடிவு

    அரசுப்பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்க, அனைத்து பணிகளையும் தேர்வுத்துறையே நேரடியாக செய்ய முடிவு செய்துள்ளது. அரசு பொதுத்தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதனையடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை தேர்வுத்துறை எடுக்க முன் வந்துள்ளது. 


    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ரூபாய் 5000/- பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்

    click here  to download APPLICATION FORM

    ஓய்வூதியம் - 01.06.1988 முதல் 31.12.1995 வரை ஒய்வு பெற்றவர்களுக்கு, அகவிலைப்படியை அகவிலை ஊதியமாக வழங்க வெளியிடப்பட்ட அரசாணைக்கு தெளிவுரை வழங்கி உத்தரவு

    Pension- Treatment of Dearness Allowance as Dearness Pay for the purpose of pension revision to those retired between 1.6.1988 and 31.12.1995- Orders issued in G.O.Ms.No.363, Finance (PGC) Department, dated 23.8.2013- Further Clarification – Issued.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் குறித்த அறிக்கையை ஆன்-லைனில், கருவூலத்திற்கு அனுப்பும் புதிய திட்டம்

    ஒவ்வொரு மாத இறுதியில், குறிப்பிட்ட தேதிக்குள் அரசு ஊழியர், ஆசிரியர்களின் வருகைப்பதிவை கணக்கிட்டு சம்பளம் குறித்த அறிக்கை கருவூலத்திற்கு பேப்பர் நகலாக வழங்கப்பட்டது. கருவூலம் மூலம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி, அவரவர் வங்கி கணக்கில் இ.சி.எஸ்.,முறையில் சம்பளத்திற்குரிய தொகை செலுத்தப்பட்டது. இம்முறையில் சிறிது மாற்றம் செய்து, ஒவ்வொரு துறையிலும் இருந்து சம்பளம் பற்றிய தகவல்களை சி.டி., க்கள் வடிவில் வழங்கும் உத்தரவு தற்போது, நடைமுறையில் உள்ளது. இதை எளிமைப்படுத்தும் வகையில், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் இருந்து நேரடியாக ஆன்-லைன் மூலமே மாவட்ட கருவூலங்களுக்கு சம்பளம் உட்பட இதர பணப்பலன் கணக்குகளை அனுப்பும் புதிய திட்டம் அமலாகிறது.
    முதல் கட்டமாக கருவூலம் மற்றும் ஒருசில அரசு துறைகளுக்கான சம்பள அறிக்கை குறித்த தகவல் ஆன்-லைனில் அனுப்பி ஒத்திகை பார்க்கப்பட்டது. இதன் செயலாக்கத்தை பொறுத்து படிப்படியாக அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கப்படும் என, கருவூலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

    Tuesday, October 1, 2013

    தமிழ்நாடு பல்கலைக்கழகம் - TNOU B.Ed., ENTRANCE EXAM RESULT - 2014 / Cut Off mark

    முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித்தேர்வு - மறுதேர்வு 6 வாரங்களுக்குள் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

    டி .ஆர். பி யின்  ஆலோசனைகள்  பிழையான  40 வினாக்களை  நீக்கிவிட்டு  110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்வது அல்லது  பிழையான 40 வினாக்களுக்கும் 40 மதிப்பெண்களை  அனைவருக்கும் வழங்குவது . அல்லது 110 வினாக்களுக்கு  பெற்ற மதிப்பெண்களை  150 க்கு  கணக்கிடுவது என்று 3 வகையான மதிப்பிட்டு முறைகளை அனைத்தையும்  நிராகரித்த நீதிபதி  தீர்ப்பு  ஆணை  கிடைத்த  6 வாரங்களுக்குள்  தேர்வு  நடத்தப்பட  வேண்டும்.புதிய விண்ணப்பங்கள் எதுவும் பெறப்படக் கூடாது. பழைய ஹால் டிக்கட்  இணையத்தளம் மூலம்  தரவிறக்கம்  செய்துகொள்ளலாம் .என தீர்ப்பளித்தார்