டிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை
தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது. முதுநிலை
பட்டதாரிகளை நியமிப்பதற்கான போட்டித் தேர்வின் இரண்டாவது தேர்வு முடிவுகள்
நேற்று வெளியிடப்பட்டது.
இதில் தாவரவியல், வரலாறு, வணிகவியல்,
வேதியியல், இயற்பியல் உட்பட 5 பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் டிஆர்பி
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதவிர, ஆசிரியர் தகுதி தேர்வில் தாள் ஒன்று தாள் இரண்டு ஆகியவற்றில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சாரிபார்க்கும் பணிகள் வரும் 20ம் தேதி
முதல் 28 வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடக்கிறது. இதற்கான
அழைப்பு கடிதங்கள், தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் ஆசிரியர் தகுதி
தேர்வு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி
தேர்வில் 8 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு அதை விட 2400
கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment