2014ம் ஆண்டு வாரியத் தேர்வுக்கான தேதி ஷீட்டை, CBSE அறிவித்துள்ளது. இதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்புகள் ஆகிய இரண்டிற்கும், வாரியத் தேர்வுகள் வரும் மார்ச் 1ம் தேதி தொடங்கும்.
பத்தாம் வகுப்பு தேர்வுகள், மராத்தி, ஸ்பானிஷ் மற்றும் பெயின்டிங் ஆகிய பாடங்களுடனும், பிளஸ் 2 தேர்வுகள், ஆங்கிலப் பாடத்துடனும் துவங்குகின்றன.
இந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு பிரிவுகளிலும் சுமார் 10% மாணவர்கள் கூடுதலாக தேர்வெழுதுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேவுகள் மார்ச் 19ம் தேதி நிறைவடையும்.
ஆனால் பிளஸ் 2 தேர்வுகள் ஏப்ரல் 17ம் தேதி வரை நடைபெறும். அனைத்து தேர்வுகளும் காலை 10.30 மணிக்கு தொடங்கும். Date Sheet வெளியானதன் மூலம் CBSE வாரியத் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் தவிப்பு நீங்கியுள்ளது.
No comments:
Post a Comment