தகவல் உரிமைச் சட்டத்தை, அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ள ஏதுவாக, ரேடியோ, சினிமா தியேட்டர்களில், விளம்பரங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளிக்கல்வி, வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்கள், கிராம பஞ்சாயத்து போன்றவை குறித்து, பொதுமக்கள் அறிய வேண்டிய தகவல்களை, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், குறைந்த கட்டணம் செலுத்தி, தகவல் பெறலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, ரேடியோ மற்றும் சினிமா தியேட்டர்கள் பயன்படுத்தப்படும்.இதற்காக, நாடு முழுவதும், 105 ரேடியோ நிலையங்கள், 429 சினிமா தியேட்டர்கள் பயன்படுத்தப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.தகவல் பெற விரும்புபவர்கள், அனைத்து நகரங் களிலும் உள்ள தகவல் கமிஷனில், ௧௦ ரூபாய் கட்டணம் செலுத்தி, எந்த தகவலையும் பெறலாம். எனினும், ராணுவம், உளவு மற்றும் தனியார் துறை தகவல் களை பெற முடியாது.
No comments:
Post a Comment