தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பெண் ஊழியர்களுக்கு தேர்தல் கமிஷன்
வழங்கியுள்ள சில சலுகைகள் பெண் போலீசாருக்கும் வழங்க வேண்டும் என்ற
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தல் பணியில் அரசு பெண் ஊழியர்கள்,
ஆசிரியர்கள்,பெண் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஓட்டுச்சாவடிகளில் பணி
அமர்த்தப்படும் பெண் ஊழியர்கள், போலீசார் ஓட்டுப் பதிவிற்கு முதல் நாளே
பணிக்கு சென்று, 2 நாட்கள் வரை ஒரே இடத்தில் தங்கி யிருக்க வேண்டிய
நிலை ஏற்படும். அப்போது அடிப்படை வசதிகளுக்கு அவதிப்படும் நிலை ஏற்படும்.
இப்பிரச்னையை தவிர்க்க, தேர்தல் கமிஷன் புதிய விதிமுறையை பின்பற்றுகிறது.
பெண் வாக்காளர் அதிகமுள்ள இடத்தில் பெண் ஊழியர்கள் மட்டும் நியமித்தல்,
கர்ப்பிணி, மகப்பேறு விடுப்பு எடுத்தவர்களுக்கு பணிவழங்குவதை தவிர்த்தல்,
ஓட்டுச்சாவடியில் முந்தைய நாளே தங்க வேண்டிய நிலையில் தேவையான அடிப்படை
வசதியை ஏற்படுத்துதல், பெரும்பாலும், அருகில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பெண்
ஊழியர்களுக்கு பணி ஒதுக்கீடு போன்ற சில சலுகைகளை தேர்தல் கமிஷன்
பிறப்பித்துள்ளது.
இந்த சலுகைகள் பெண் போலீசாருக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துஉள்ளது.
பெண் போலீசார் கூறுகையில், " அரசு துறை பெண் ஊழியர்களை போன்றே
எங்களுக்கும் தேர்தல் பணியின் போது, சில அடிப்படை பிரச்னைகள் உள்ளன.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசுத்துறை பெண் ஊழியர், ஆசிரியர்களுக்கு சில
சலுகைகளை அளித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அந்த சலுகை பெண்
போலீசாருக்கும் பொருந்துமா என்ற தகவல் தெளிவாக இல்லை. எனவே, தேர்தல்
பணியில் ஈடுபடும் எங்களுக்கும் சலுகை அளிக்க, தேர்தல் கமிஷன் நடவடிக்கை
எடுக்க வேண்டும்,” என்றனர்.
No comments:
Post a Comment