கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, May 14, 2014

    இரட்டைப்பட்டம் வழக்கில் புதிய திருப்பம்; இரட்டைப்பட்டம் செல்லும் என் யு.ஜி;சி; அறிவிப்பு

    இரட்டைப்பட்டடம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியானதை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். 


    இவ்வழக்கு உச்ச நீதி மன்றம் 6வது அமர்வில் நீதியரசர்கள் இரதாகிருஷ்ணன் மற்றும் விக்ராம் சிங்சென் முன்னிலையில் 25வது வழக்காக கடந்த 02.05.2014 அன்று விசாரணைக்கு வந்தது. இதில் அரசு மற்றும் பல்கலைகழக மானியக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கினை முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியும், இன்றைய மூத்த வழக்குரைஞரான கிரி அவர்கள் பங்கேற்று வாதாடினார்.
    வழக்கை ஏற்றுக்கொண்ட நீதி பதி அவர்கள் 7.5.2014 அன்று ஒத்தி வைத்தனர். வழக்கானது மீண்டும் 9.05.2014 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் பங்கெடுத்த யு.ஜி.சி. 1010 102103101 என்ற அடிப்படையில் பயின்றால் அந்த படிப்பு தகுதியானது பதில் அளித்தது. இருந்தாலும் விரிவாக பதிலுரை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதாக யு.ஜி.சி. கேட்டுக்கொண்டது. தமிழக அரசும் கால அவகாசம் கேட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே உச்ச நீதி மன்றத்தில் வழக்கை தாக்கல் செய்த அனைவருக்கும் வழக்கு குறித்த விபரம் அனுப்ப நீதி மன்றம் முனைந்துள்ளது. அதன் பின் வழக்குரைஞர்கள் மூலம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளவர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும்.

    இது குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் திரு.கலியமூர்த்தி அவர்கள் நம்மிடம் கூறியதாவது: இரட்டைப்பட்டம் வழக்கை உச்ச நீதி மன்றம் ஏற்றுக்கொண்டது என்பதே எங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். ஏனென்றால் வழக்கியல் நியாயம் இல்லாமல் உச்ச நீதி மன்றம் எந்த வழக்கையும் ஏற்றுக்கொள்வதில்லை. இதில் யு.ஜி.சியும் எங்களுக்கு சாதகமாக பதில் அளித்துள்ளது. இதில் யாருடைய பதவி உயர்வையோ அல்லது பணியமர்த்துவதையோ தடுப்பது எங்கள் நோக்கம் அல்ல. ஆனால் அதே நேரத்தில் உச்ச நீதி மன்றத்தை நாடிள்ள அனைவருக்கும் 1.1.2012 முன்னுரிமையை பெறுவது என்பது உறுதியாகி விட்டது. எனவே நாங்கள் இந்த முறை உறுதியாக வெற்றியடைவோம். இது குறித்து இரட்டைப்பட்டம் படித்து பதவி உயர்வை தவறவிட்டவர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் கூட்டம் சென்னை அல்லது திருச்சியில் தேர்தல் முடிவுக்கு பின்பு நடத்துவதற்கு ஆலோசணை செய்து வருகிறோம் என்றார். மேல் விபரங்களுக்கு கீழ் கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
    1. திரு. கலியமூர்த்தி - 9894718859 (விழுப்புரம்)
    2. திரு.ஆரோக்கியராஜ் - 9942575162 (சிவகங்கை)
    3.திரு.கணேஷ் - 9976105153 (சிவகங்கை)
    4.திரு.கருணாலய பாண்டியன் - 9894192500 (திருவள்ளூர்)
    5.திரு.இரவிச்சந்திரடுலு - 8608273362
    6.திரு. விஸ்வநாத் - 9842942105

    No comments:

    Post a Comment