தனியார் பள்ளிகளில் ப்ளே ஸ்கூல், ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. என ஒன்றாம் வகுப்பிற்கு முன்னதாக பல்வேறு வகுப்புகள் உள்ளன. ஆனால், அரசு பள்ளிகளில் அவ்வாறு இல்லை.
எனவே, அரசு பள்ளிக்கூடங்களிலும் தனியார் பள்ளிகளில் இருப்பது போல எல்.கே.ஜி யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்க வேண்டுமென்று சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையினைத் தொடர்ந்து அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளைப் போன்று எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்க இயலுமா என தமிழக அரசு நான்கு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தவிட்டார்.
No comments:
Post a Comment