தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் அளிக்கும் குழுவால் (நாக்) தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு "ஏ கிரேடு' அந்தஸ்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் அளிக்கும் குழு என்பது பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவால் (யுஜிசி) நியமிக்கப்பட்ட தன்னாட்சி பெற்றதாகும். இந்திய அறிவியல் கழகத்தின் மூத்த அறிவியல் பேராசிரியரின் தலைமையில் பல்வேறு கல்வி நிலையங்களிலிருந்து பேராசிரியர்கள் அடங்கிய தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் அளிக்கும் குழு சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் மார்ச் 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை ஆய்வு நடத்தியது.
மூன்று சுற்றாக நடைபெற்ற ஆய்வின் அடிப்படையில் அதன் அறிக்கையை தேசிய மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பியது. பின்னர் மே 5-ஆம் தேதி நடைபெற்ற நிலைக்குழு கூட்டத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு "ஏ கிரேடு' அந்தஸ்து வழங்குவதாக அறிவித்துள்ளது.
கடந்த 2008-இல் பார்வையிட்ட ஆய்வுக்குழு 5 ஆண்டுகளுக்கு "ஏ கிரேடு' அந்தஸ்து வழங்கியது. மதிப்பீட்டுக் காலம் நிறைவுற்ற நிலையில், ஒத்த நிலைக்குழு மறு மதிப்பீட்டுக்கு வந்து சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு "ஏ கிரேடு' அந்தஸ்து வழங்கியுள்ளது. சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சண்முகா பொறியியல் கல்லூரியாக இருந்தபோது, தேசிய மதிப்பீட்டு வாரியம் கல்வி நிலையத்தைப் பார்வையிட்டு, கடந்த 1995-ஆம் ஆண்டுகளில் உயரிய அந்தஸ்துகளை வழங்கியது. டிசிஎஸ், விப்ரோ போன்ற உயரியத் தொழில் நிறுவனங்கள் எல்லாம், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு மிகச்சிறந்த கிரேடுகளை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment