நீதிமன்ற அவமதிப்பு தலைமைச் செயலர், பள்ளிக்கல்வித் துறைச் செயலர், ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது
கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடர்பான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச் செயலர், பள்ளிக்கல்வித் துறைச் செயலர், செப்., 1ம் தேதி ஆஜராக வேண்டும் என,'நோட்டீஸ்' அனுப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கும்பகோணத்தில், கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் நடந்த தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியாகினர். 14 பேர், தீக்காயம் அடைந்தனர். 2004ல், இச்சம்பவம் நடந்தது. இவ்வழக்கில், பள்ளி நிறுவனர் பழனிசாமிக்கு, ஆயுள் தண்டனையும், தாளாளர் உள்ளிட்ட, எட்டு பேருக்கு,ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி, கடந்த மாதம், 30ம்தேதி தீர்ப்பளித்தார். 11 பேர், விடுதலை செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, போதியஇழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இழப்பீட்டை நிர்ணயிக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்
என்றும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்பராஜ் என்பவர், மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன், இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகத்தை நியமித்து உத்தரவிட்டார். 2012ல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தஉத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில், 'அப்பீல்' மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை,
நீதிபதி என்.பால்வசந்தகுமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்து, மனுவை, தள்ளுபடி செய்தது. கடந்த ஏப்ரலில், இந்தஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னும், ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம் தொடர்பாக, தமிழக அரசு, எந்தஉத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதையடுத்து, தலைமைச் செயலர், மோகன் வர்கீஸ் சுங்கத், பள்ளிக்கல்வித் துறை செயலர் சபீதா ஆகியோருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு மனுவை, இன்பராஜ், தாக்கல் செய்தார்.இம்மனு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அப்போது,உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 'அப்பீல்' செய்திருப்பதாக, தமிழக அரசு தரப்பில்தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசின், 'அப்பீல்' மனுவை, கடந்த மாதம், 30ம் தேதி, உச்ச நீதிமன்றம்தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு மனு, நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார்,ரவிச்சந்திரபாபு அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் தமிழரசன் ஆஜரானார். இவ்வழக்கில், செப்., 1ல் ஆஜராக,தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், பள்ளிக்கல்வித் துறை செயலர், சபீதா ஆகியோருக்கு, 'நோட்டீஸ்'
அனுப்ப, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.
No comments:
Post a Comment