கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Thursday, June 6, 2013

    உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை எப்போது என்ற பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது:

    இந்த கல்வி ஆண்டில் (2013–2014) உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை பட்டியலையும், எந்தெந்த சனிக்கிழமைகள் வேலைநாட்கள்? என்ற பட்டியலையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 210 வேலைநாட்கள்பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு கல்வி ஆண்டில் (ஜூன் முதல் மே வரை) 210 வேலை நாட்களும், அதேபோல் தொடக்கக்கல்வித்துறைக்கு உட்பட்ட ஆரம்ப பள்ளிகள், 


    நடுநிலைப்பள்ளிகளுக்கு 220 வேலை நாட்களும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

    உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் 210 நாட்களில் 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை நாட்களாக விட்டுக்கொள்ளலாம்.

    மழை, புயல், கடும் வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் எதிர்பாராவிதமாக விடுமுறை விடும் பட்சத்தில் நிர்ணயிக்கப்பட்ட வேலை நாட்கள் குறையும்போது சனிக்கிழமைகளில் வகுப்பு வைத்து சரிசெய்துகொள்வது வழக்கம்.

    இப்போதுகூட கடுமையான வெயில் காரணமான பள்ளிகள் திறப்பு ஜூன் 3–ந்தேதியில் இருந்து ஒரு வாரத்திற்கு அதாவது 10–ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த ஒரு வார காலம் பின்னர் சனிக்கிழமைகளில் வகுப்பு வைத்து சரிசெய்து கொள்ளப்படும்.

    காலாண்டு, அரையாண்டு விடுமுறை

    இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2013–2014) உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளி ளுக்கான காலாண்டு, அரையாண்டு விடுமுறை பட்டியலையும், எந்தெந்த சனிக்கிழமைகள் வேலை நாட்கள்? என்ற பட்டியலையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:–

    காலாண்டு விடுமுறை –செப்டம்பர் மாதம் 22–ந்தேதி முதல் அக்டோபர் 2–ந்தேதி வரை

    அரையாண்டு விடுமுறை –டிசம்பர் 24–ந்தேதி முதல் ஜனவரி 1–ந்தேதி வரை

    சனி வேலை நாட்கள்

    செப்டம்பர் 21, நவம்பர் 30, டிசம்பர் 14, 2014–ம் ஆண்டு ஜனவரி 18, மார்ச் 1, ஏப்ரல் 5 மற்றும் 12–ந்தேதி.

    மேற்கண்டவாறு பள்ளிக்கல்வித்துறை பட்டியலை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையை தொடர்ந்து தொடக்கக்கல்வித்துறையும் விடுமுறை நாள் பட்டியலை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    No comments:

    Post a Comment