கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Thursday, October 3, 2013

    மாணவர்களுக்கு இலவச பொருட்கள்: பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை

    மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை, நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பி, வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு, நோட்டு புத்தகம், சைக்கிள், பை, காலணி, அறிவியல் உபகரணம், லேப்-டாப் உட்பட 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. 


    தற்போது, இப்பொருட்கள் சி.இ.ஓ.,- டி.இ.ஓ., க்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகின்றன. இதில், பல்வேறு சிரமங்கள் உள்ளன. இலவச பொருட்களை பெற, ஒவ்வொரு முறையும் வாடகை வாகனங்களை எடுத்துக்கொண்டு, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர், மாவட்ட தலைநகருக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்களின் பணி, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில், அந்தந்த கல்வியாண்டிற்கு தேவையான, இலவச பொருட்களை, பள்ளிகளிலேயே நேரடியாக இறக்கி, தாமதமின்றி வினியோக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. "இப்பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்' எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    No comments:

    Post a Comment