கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Tuesday, July 30, 2013
பள்ளிகளில் எதிர்பாரத நிகழ்வுகளை உடனுக்கு உடன் அதிகாரிகளுக்கு தெரிவிக்க அரசு உத்தரவு
பள்ளிகளில் ஏற்படும் எதிர்பாரத நிகழ்வுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உடனுக்கு உடன் கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு
ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்வில் மதிப்பெண்களை நிர்ணயிப்பதில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளனர். மனுவை தாக்கல் செய்த பழனிமுத்து கூடுதல் பிரமாண பத்திரத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை ஐகோர்ட் தலைமை நீதிபதி அகர்வால், சத்தியநாராயணன் அமர்வு விசாரித்துள்ளது. மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறையை சார்ந்த அனைத்து இயக்குனர்கள் மாற்றம் மற்றும் பதவி உயர்வு விவரம்
புதிய இயக்குனர்களின் விவரம்
பள்ளிக் கல்வித் துறை - ராமேஸ்வர முருகன்
தொடக்கக் கல்வித் துறை - இளங்கோவன்
ஆசிரியர் தேர்வாணையம் - வசுந்தராதேவி
மெட்ரிக் பள்ளி - பிச்சை
பாட நூக்ல் கழகம் - அன்பழகன்
ஆர்.எம்.எஸ்.எ. - சங்கர்
தேர்வுத் துறை - தேவராஜன்
பதவி உயர்வு விவரங்கள்
SCERT - கன்னப்பன்
TET -தங்கமணி
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013 - Click Here for Tentative Answer Key
Direct
Recruitment of Post Graduate Assistants for the year
2012 - 2013
TENTATIVE
ANSWER KEY
Sunday, July 28, 2013
பள்ளிகள் தரம் குறித்த ஆலோசனைக்கூட்டம்:கலக்கத்தில் சி.இ.ஓ.,க்கள்
சென்னையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், பொது தேர்வில் தரம், தேர்ச்சி விகிதம் பாதித்த அரசு பள்ளிகள் குறித்து விவாதிக்கும்போது, சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு"கிடுக்கிப்பிடி' உத்தரவு பிறக்கப்படும் என்பதால் சி.இ.ஓ.,க்கள் கலக்கத்தில் உள்ளனர்.
அரசாணை ( G.O. No. 237 Dt.22.7.2013. ) Grant of One Additional Increment of 3 % பற்றிய ஓர் விளக்கம் - நன்றி தாமஸ் ராக்லன்ட்
அரசாணையின் தலைப்பிலேயே "Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade / Special Grade in the Revised Scales of pay" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. in the Revised scales of pay என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
2013-2014 - 1st std to 8th std -CCE முதல் பருவம் - வாரவாரி பாடதிட்டம் (புதிய பாடங்களின் படி)
முதல் வகுப்பு
இரண்டாம் வகுப்பு
மூன்றாம் வகுப்பு
நான்காம் வகுப்பு
ஐந்தாம் வகுப்பு
ஆறாம் வகுப்பு
ஏழாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு
5முதல் 8 வகுப்பு வரை மொழிப்படங்களில்(தமிழ்& ஆங்கிலம்) கட்டுரை மாதத்திற்கு ஒன்று எழதப்பட்டு பருவ வேறுபாடின்றி ஒரே சுவடியாக பராமரிக்கப்படவேண்டும்.
=>TWO LINES,FOUR LINES NOTE-பராமரிக்கப்பட வேண்டும்(ஒவ்வொன்றும் வாரத்திற்கு 2 பக்கங்கள் போதுமானது)
=>6,7,8வகுப்பிற்கு கணித வரைபடப் பதிவேடு பராமரிக்கப்பட் வேண்டும்
=>6,7,8 வகுப்பிற்கு அறிவியல் சோதனை பதிவேடு பராமரிக்கப்பட்
வேண்டும்
=>6,7,8 வகுப்புகட்கு புவியியல் வரைபடம்(maps) tபயிற்சி அளிக்கப்பட்டு பதிவேடாக பராமரிக்கப்பட்வேண்டும்
=>5,8 ஆகியவற்றிற்கு வாசித்தல் பயிற்சி(தமிழ்& ஆங்கிலம்),மற்றும் கணித அடிப்படைச்செயல்பாடுகள் அடைவுச்சோதனைபதிவேடு மாதத்தில் 4ஆம் வாரக்கடைசியில் கணக்கெடுப்பு செய்யப்பட்டு பதியப்படுதல் வேண்டும்
பள்ளித்தலைமை ஆசிரியர் இவற்றை ஆய்வு செய்து கையொப்பம் இட்டு மொத்த சுருக்கம் பராமரிக்கப்படவேண்டும்
Saturday, July 27, 2013
தலைமை ஆசிரியர் பணி நியமனம்: ஆதிதிராவிடர் துறை 15 நாளில் முடிவு
தலைமை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ள பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களை நியமிக்க, ஆதிதிராவிடர் நலத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பணி நியமனம், 15 நாளில் நிறைவு பெறும்.தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 75 ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன.
Friday, July 26, 2013
சத்துணவு தரம் பெற்றோர் கண்காணிக்கலாம் - தமிழக அரசு உத்தரவு
பீகாரில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் இறந்த சம்பவத்தையடுத்து தமிழகத்தில் சத்துணவு மையங்களில் தரமான உணவு வழங்கப்படுவதையும், மையங்கள் சுகாதாரமாக செயல்படுவதையும் கண் காணிக்க குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அனைத்து சத்துணவு மையங்களையும் ஆய்வு செய்ய அக்குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் விண்ணப்ப தேதி நீட்டிப்பு
கல்லூரிகளில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பணியிடம் டி.ஆர்.பி. மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.விண்ணப்பிக்க கடைசி நாள் இன்று என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பிக்க கால அவகாசத்தினை நீட்டிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் விண்ணப்பிக்கும் காலஅவகாசத்தினை ஆக.12-ம் தேதி வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் மட்டும் போதும்; மதிய உணவை கண்காணிக்க தேவையில்லை - அலகாபாத் கோர்ட் அதிரடி
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் கடமை பாடம் சொல்லி தருவது மட்டும் தான்; மதிய உணவு சமைக்கும் முறையை அவர்கள் கண்காணிக்க தேவையில்லை என அலகாபாத் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. பீகாரில் கடந்த வாரம் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அலகாபாத் ஐகோர்ட் இதனை தெரிவித்துள்ளது.
Thursday, July 25, 2013
இரட்டைப்பட்டம் - வழக்கு - திங்கள் கிழமை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
இரட்டைப்பட்டம் வழக்கு வருகிற திங்கள்கிழமை (29.7.13) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தகவல் நம்பகத்தன்மையான தோழரிடம் இருந்து பெறப்பட்டது
Selection Grade and Special Grade Notional Effect from 01.01.2006 and Monetary Effect from 01.04.2013
3 நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 237ல் தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு 01.01.2006 தேதி முதல் 31.03.2013 வரை (பணப்பலனின்றி) சம்பளத்தில் கணக்கிடப்பட்டு அதற்கான பணப்பலன்01.04.2013 முதல் 3% என்று வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் தற்போது 3%+3% ஆக மாற்றி வழங்கப்படும்.01.01.2006 முதல் 31.05.2009 வரை தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், 01.06.2009க்கு பின் தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை, அவர்களுக்கு 3% ஊக்க ஊதியம் மட்டுமேவழங்கப்பட்டது. அது தற்போது 01.01.2006 முதல் இந்தஆணை அமுலுக்கு வருவதால், ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்பட்ட ஆசிரியர்களும் பலன் பெறுவர்.
அரசு பள்ளிகளில் வருகை பதிவு முறையாக கண்காணிக்க உத்தரவு : ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு
அரசு பள்ளிக்கு, உரிய நேரத்திற்குள் ஆசிரியர்கள் வருகிறார்களா, என்பதை கண்டறிய, வருகை பதி வேட்டை, பாரபட்சமின்றி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்கவேண்டும்,'' என, பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் உரிய நேரத்திற்குள் பணிக்கு வருவதில்லை. காலையில் தாமதமாக வரும் ஆசிரியர்கள், மாலையில் முன்கூட்டியே செல்வதாக புகார்கள் எழுகின்றன.
Wednesday, July 24, 2013
இரட்டைப்பட்டம் வழக்கு
இரட்டைப்பட்டம் வழக்கு இன்றைய (24.7.2013) நிலை இன்று வழக்கு விசாரணைக்கு வரவில்லை. விரைவில் வருவதற்கு முயற்சி நடைபெறுகிறது
அரசு ஊழியர்களுக்கு ரூ.3000 வரை சம்பளம் உயர்வு: 60 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள்
6-வது ஊதியக் குழு குறைபாடுகள் நிவர்த்திக்குழு பரிந்துரையை ஏற்று, அரசு ஊழியர்களுக்கு ரூ.200 முதல் ரூ.3000 வரை சம்பளம் உயர்வு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் 60 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்.மத்திய அரசின் 6-வது ஊதியக் குழுவைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் 6-வது ஊதியக்குழு கடந்த 2009-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.
மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.
தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%) பெற ஆணை.
மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு தர ஊதியம் ரூ.4900 முதல் ரூ.5100 உயர்த்தி உத்தரவு.
பீகாரில் சுமார் 3 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் நாளை(ஜூலை 25) முதல் மதிய உணவு திட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்
பீகாரில் சுமார் 3 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் நாளை(ஜூலை 25) முதல் மதிய உணவு திட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த வாரம் ரசாயன பொருட்கள் கலந்த மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து பீகார் அரசின் மதிய உணவு திட்டத்தின் மீது ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மாநில துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் பரஜ்நந்தன் சர்மா தெரிவித்துள்ளார்.
Tuesday, July 23, 2013
பள்ளிகளில் சத்துணவை தலைமை ஆசிரியர் சாப்பிட்ட 30 நிமிடம் கழித்த பிறகுதான் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
பீகார் மற்றும் நெய்வேலி சம்பவத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளில் சத்துணவை பள்ளி தலைமை ஆசிரியர்கள், சத்துணவு அமைப் பாளர், சமையலர் சாப்பிட்டு அரை மணி நேரத்துக்கு பிறகு மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள், கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
அரசு நடுநிலைப்பள்ளிகளில், வாரத்துக்கு குறைந்தபட்சம் ஐந்து பாடவேளைகள் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட "லேப்டாப்" அல்லது கம்ப்யூட்டர் பயன்படுத்தி பாடம் கற்பிக்கவேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
அரசு நடுநிலைப்பள்ளிகளில், வாரத்துக்கு குறைந்தபட்சம் ஐந்து பாடவேளைகள் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட "லேப்டாப்" அல்லது கம்ப்யூட்டர் பயன்படுத்தி பாடம் கற்பிக்கவேண்டும்" என்று ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தொடக்கக் கல்வித்துறைக்கு உட்பட்ட 8026 நடுநிலைப்பள்ளிகளுக்கு நான்கு கட்டங்களாக, மடிக்கணினிகள் மற்றும் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், "அனைவருக்கும் கல்வி இயக்கம்" சார்பிலும் பள்ளிகளுக்கு கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழத்தின் 16 பள்ளிகளில் சுத்தமாக ஆசிரியர் அல்லாத பள்ளிகள் - சர்வேயில் அதிர்ச்சி தகவல்கள்
தமிழத்தின் 16 பள்ளிகளில் சுத்தமாக ஆசிரியர்களே இல்லை என்றும், பல பள்ளிகளில் 1 அல்லது 2 ஆசிரியர்களே உள்ளனர் என்றும், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் சர்வே, அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ., என்று சுருக்கமாக அழைக்கப்படும் அந்த சர்வே(2012-13) தெரிவிக்கும் பல அதிர்ச்சி தகவல்கள் பின்வருமாறு;
தபால் மூலம் எம்.பில்., - பிஎச்.டி., : அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
தபால், தொலைதூர கல்வி, திறந்தவெளி பல்கலை மூலம், எம்.பில்., மற்றும்
பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களை, கல்லூரிகளில் விரிவுரையாளராக நியமிக்கத்
தகுதியில்லை' என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட்
தள்ளுபடி செய்தது.
வேலூர், ஊரிஸ் கல்லூரி பேராசிரியராக பணியாற்றியவரும், வழக்கறிஞருமான, இளங்கோவன் தாக்கல் செய்த மனு: கடந்த, 2009ம் ஆண்டு, உயர் கல்வித் துறை, ஒரு அரசாணையை பிறப்பித்தது. அதில்,
வேலூர், ஊரிஸ் கல்லூரி பேராசிரியராக பணியாற்றியவரும், வழக்கறிஞருமான, இளங்கோவன் தாக்கல் செய்த மனு: கடந்த, 2009ம் ஆண்டு, உயர் கல்வித் துறை, ஒரு அரசாணையை பிறப்பித்தது. அதில்,
Saturday, July 20, 2013
Friday, July 19, 2013
பட்டதாரி ஆசிரியர்களுக்கு, கடந்த ஜனவரி, 18ம் தேதியை கணக்கிட்டு, இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வை வழங்கலாம்" என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
"பட்டதாரி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவியில் பணிபுரியும் பட்ட தாரி ஆசிரியர், எம்.எட்., - எம்.பில்., மற்றும் பிஎச்.டி., தகுதிகளை, கூடுதலாக பெற்றிருந்தால், இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்கலாம்" என கடந்த ஜன., 18ம் தேதியிட்ட அரசாணையில், தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால், எந்த தேதியில் இருந்து ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை, அரசாணையில் கூறவில்லை. இதனால், 20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர், ஊக்க ஊதிய உயர்வு பெற முடியாமல், அவதிபட்டு வந்தனர்.
அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விரைவில் கல்வித்துறை ஆய்வு
கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: நபார்டு வங்கி கடனுதவி மூலம், அரசு பள்ளிகளில், புதிய கட்டடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படுகின்றன.
Subscribe to:
Posts (Atom)