கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Monday, September 30, 2013

    அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத முடியாது: இயக்குநரகம்

    அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளின் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியாது என தனியார் பள்ளிகளிடம் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அங்கீகாரம் பெறாத பள்ளிகள் உடனடியாக அங்கீகாரம் பெற வேண்டும் என தனியார் பள்ளி முதல்வர்களுக்கு மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. 


    மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு

    கல்வியியல் பட்டப்படிப்பு (பிஎட்) படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக,தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுக்குறித்து, இன்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் விபரம் வருமாறு...

    1. பிஎட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்புஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பிஎட் ., பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர். 



    Sunday, September 29, 2013

    வகுப்பறை கட்டுமான பணி பொதுப்பணித்துறையிடம் ஒப்படைப்பு - அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் நிம்மதி

    தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க கலந்தாய்வு

    தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டத்தில், தமிழக அரசு மற்றும் ஆசிரியர்களுக்கு 7 ஆவது ஊதியக்குழு அமைக்கப்பட வேண்டும்.


    தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்திய போராட்டத்தின் விளைவாக துறையின் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தி 7 அம்ச கோரிக்கை குறித்து அரசுக்கு அறிக்கை அளிப்பதாக இயக்குநர் உறுதி.

    தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்திய 4 நாட்கள் தொடர் போராட்டத்தின் விளைவாக இறுதியில் தொடக்கக் கல்வி துறையின் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தி அதில் 7 அம்ச கோரிக்கை குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைப்பதாக தொடக்கக் கல்வி இயக்குநர் உறுதியளித்துள்ளதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார். 


    இளநிலைப் பட்டப் படிப்புகள் அனைத்திலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக்குவது முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்ப் பாடம் -- பரிசீலனை.

    இளநிலைப் பட்டப் படிப்புகள் அனைத்திலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக்குவது குறித்து சென்னைப்பல்கலைக்கழக கல்விக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.கல்விக் குழு நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்த இந்த விஷயத்தை,கல்விக் குழு உறுப்பினரும்சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியருமான அரசு முன்வைத்து,வலியுறுத்திப் பேசினார்.


    மாணவர்கள் பள்ளி வளாகத்துக்குள் மொபைல் போன் கொண்டு வர தடை

    மாணவர்கள் பள்ளி வளாகத்துக்குள் மொபைல் போன் கொண்டு வர தொடக்க கல்வித்துறை இயக்குனநர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். பள்ளியில் பயிலும் மாணவர்கள் வகுப்பறையில் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். இதனால் மாணவர்களின் கவனம் சிதறுகின்றது. மாணவர்கள் பள்ளியில் சரிவர பாடத்தை கவனிப்பது இல்லை. 


    தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு முடிவும் இறுதி கீ ஆன்சரும் ஒரேநாளில் வெளியிடப்படும்’’ & ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்

    தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-Iஐ, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர்.
    அதேபோல், 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பணிபுரியக் கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-IIஐ கடந்த 18ம் தேதி சுமார் 4 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், இரண்டு தேர்வுக்களுக்குமான ‘கீ ஆன்சரை’ கடந்த மாதம் டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிட்டது. 



    அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் "சர்வே

    அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி ஆரம்பிக்கப்பட்ட பின், பள்ளிகளில் காணப்படும் நிலை குறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சர்வே துவக்கியுள்ளது.பெற்றோர்களின் மெட்ரிக் பள்ளிகள் மீதான ஆங்கில வழிக்கல்வி மோகத்தால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு தோறும் ஆரம்ப கல்வியில், மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. 


    Saturday, September 28, 2013

    பேராசிரியர் நேர்முகத்தேர்வை வீடியோவில் பதிவுசெய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

    கல்லூரி உதவிப் பேராசிரியர் நேர்முகத்தேர்வில் மதிப்பெண் வழங்குவதில் தவறு நடக்காமல் இருக்க நேர்முகத்தேர்வு காட்சியை வீடியோவில் பதிவு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
    1,093 காலி இடங்கள்அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவி பேராசிரியர் பணிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்பட உள்ளன. 



    மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு - 2013-14 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு

    click here to download the GO 188 - 54 New Primary Schools Name List for 2013-14 and Post Sanctioned

    எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம், எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது' - தமிழக அரசு

    click here to download Higher Education – Equivalence of Degree – M.Sc. Statistics awarded by University of Madras as equivalent to M.Sc. Mathematics – Recommendation of Equivalence Committee – Orders – Issued.

    டி.இ.டி., தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுபறி

    கேள்வித்தாள், ‘லீக்’ சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


    MATRICULATION பள்ளி ஆசிரியர்களுக்கும் டிஇடி தேர்வு கட்டாயம் - மெட்ரிக் இயக்ககம் அறிவிப்பு


    Friday, September 27, 2013

    அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவ திட்டம்

    மாணவர்களின் கணித திறனை மேம்படுத்துவதற்காக, அரசு நடுநிலைப் பள்ளிகளில், கணித ஆய்வகங்களை நிறுவ கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கணித கற்றல் திறனை வலுப்படுத்துதல் திட்டம் மூலம் ஆய்வக கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 பள்ளிகளை தேர்வு செய்து, வருகிற 30ம் தேதிக்குள் அனுப்ப, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 8ம் வகுப்பு வரை குறைந்தது 100 மாணவர்கள் பயில வேண்டும். கணிதத்தில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித பயிற்சி

    அடிப்படை அறிவியல் குறித்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளிக்க, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது. 


    மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படாது: மத்திய அரசு திட்டவட்ட முடிவு

    மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெறும் வயதை, 62ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை, என்று, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர், நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். 


    அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து செப்டம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு

    Click here-W.P.Nos.21525, 22423 of 2013 and batch cases – Filed challenging the orders issued in G.O.Ms.No.242, Finance (PC)department, dated 22—7-2013 based on the recommendations of the Pay Grievance Redressal Cell - Instructions issued – Regarding Order

    குரூப்-1 மெயின் தேர்வு அடுத்த மாதம் நடக்கிறது டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் அறிவிப்பு.

    தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் கடந்த 7 மாதங்களில் 4,062 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 1,391 பேர்கள் கலந்து கொள்ளும் குரூப்1 மெயின் தேர்வு அடுத்த மாதம் நடக்கிறது என்று
    டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.



    மத்தியப் பிரதேச அரசு மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை 80% சதவீதத்திலிருந்து 90% சதவீதமாக உயர்த்தியது.

    Madhya Pradesh hikes Dearness Allowance of state government employees
    by igecorner, on September 27th, 2013

    The Madhya Pradesh Cabinet on Thursday approved a hike in the Dearness Allowance for all employees of the State government and local bodies.

    The DA has been hiked from 80 to 90 per cent of the basic salary. The double digit hike comes less than a week after the Centre announced a 10 per cent hike for its employees. Timed before the model code of conduct for elections comes into force, the DA would be paid retrospectively from July 1.

    2014-2015 ஆம் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி, இயக்குநர் தகவல்

    Manonmaniam Sundaranar University May 2013 Exam Result Released

    வாக்காளர் சேர்ப்பு பணியில் ஈடுபட நேரம் தவறாமல் பள்ளி மையங்களுக்கு ஆசிரியர்கள் சென்று விட வேண்டும்

    தூத்துக்குடி தொகுதியில் அடுத்த மாதம் நேரம் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று மக்கள் கேட்கும் படிவங்களை வழங்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் அங்கு செல்லாமல் இருந்து விடக் கூடாது என்று ஆசிரியர்களுக்கு நடந்த பயிற்சியில் வாக்குப்பதிவு அலுவலரும்,மாநகராட்சி கமிஷனருமான மதுமதி தெரிவித்தார்.
    தமிழகம் முழுவதும் அக்டோபர் முதல் தேதி முதல் 31ம் தேதி வரை புதிய வாக்காளர் சேர்க்கும் பணி நடக்கிறது.


    ( 27.9.2013 )தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக சென்னையில் நடைபெறும் மூன்றாவது நாள் மறியல் காட்சிகள்






    Thursday, September 26, 2013

    10–வது, பிளஸ்–2 தேர்வுகளில் வினாத்தாள், மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும் அரசு தேர்வுத்துறைஇயக்குனர் கு.தேவராஜன் தகவல்.

    எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2தேர்வின்போது தேர்வு அறைகளில் மாணவர்கள் முன்னிலையில்தான் வினாத்தாள் பிரிக்கப்படும் என்றுஅரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.இது குறித்து
    அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் நிருபர்களிடம் கூறியதாவது



    7-வது சம்பள கமிஷனில் எதிர்பார்க்கப்படும் ஊதியம் மற்றும் முதல் சம்பள கமிஷன் முதல் 6 ஆவது சம்பள கமிஷன் வரை ஓர் ஒப்பீடு

    PROJECTED PAY STRUCTURE AFETR SEVENTH PAY COMMISSION (BASED ON PREVIOUS PAY COMMISSION FROM I TO VI) CLICK HERE...

    ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தப்பிரிவினருக்கும் தளர்வு வழங்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.

    ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தப்பிரிவினருக்கும் தளர்வு வழங்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு கோரும் பொது நல வழக்கு மீதான விசாரணையின்போது ஆசிரியர் தேர்வு வாரியம் இதைத் தெரிவித்துள்ளது.


    அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசு பல்கலையாக மாறியது: அரசிதழில் உத்தரவு வெளியீடு

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. இதற்கான சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து, அது தமிழக அரசிதழில் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது. 


    கல்லூரி மாற்றத்துக்கு தடை செய்யும் அரசு ஆணை ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

    பட்ட மேற்படிப்பின்போது ஒரு கல்லூரியில் இருந்து மற்றொரு கல்லூரிக்கு இடம் மாறுவதைத் தடுக்கும் தமிழக அரசின் ஆணையை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 


    44 மாதிரி பள்ளிகளில் "நேர்மை கடைகள்' : காந்தி பிறந்த நாளில் குதூகல ஆரம்பம்

    மாணவர்களிடையே, நேர்மையை வளர்க்கும் நோக்கத்தில், காந்தி பிறந்த நாளான, அக்., 2ம் தேதி, 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடைகள்' துவக்கப்படுகின்றன. கல்வி தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களிடையே, நல்ல குணங்களை ஏற்படுத்தவும், கல்வித்துறை, முடிந்த அளவிற்கு, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. 


    துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

     இடைநிலை ஆசிரியர்கள்
    1. 004 - Deputy Inspectors Test-First Paper
    (Relating to Secondary and Special Schools) (without books)
    2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
    (Relating to Elementary Schools) (Without Books)
    3. 119 - Deputy Inspector’s Test
    Educational Statistics (With Books).

    4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
    (or)
    114 The Account Test for Executive Officers (With Books).
    5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
    (Previously the District Office Manual--Two Parts) (With Books).

    காந்தி ஜெயந்தி முன்னிட்டு பள்ளிகளில் புதுமை விழா-பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு.

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளில் புதுமை விழா கொண்டாட பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் வி.சி.ராமஸ்வரமுருகன், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது


    கணிதம் ஆய்வுக் கூடம் நடுநிலைப் பள்ளிகளில் அமைக்க பள்ளிகள் தேர்ந்து எடுத்து அனுப்ப தொடக்க கல்வி இயக்குநரின் செயல் முறைகள்

    தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்கத்தின் மறியல் கள காட்சித் துளிகள்


     அகில இந்திய பொதுச்செயலாலர் திரு.ஈஸ்வரன் அவர்களின் உரை.


    காலாண்டு தேர்வுவிடுமுறை நாளில் பணிக்கு வராத தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

    காலாண்டு தேர்வுவிடுமுறை நாளில் பணிக்கு வராத அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.கல்வித்துறையின் அனைத்து வேலை நாட்களிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவசியம் பணியில் இருக்கவேண்டும்என்ற அரசாணை ஏற்கனவே உள்ளது. சில தவிர்க்க, முடியாத காரணத்தால் மட்டுமே பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்.



    இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்திவைப்பு, இறுதி தீர்ப்பு வரும் வரை பணி மாறுதல் நிறுத்தி வைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வின் முன் இன்று பிற்பகல் 3.45மணிக்கு விசாரணைக்கு
    வந்தது. போதிய நேரமின்மை காரணமாக இரு தரப்பும் செய்துகொண்ட சமரசத்தை அடுத்து நீதிபதிகள் வருகிற அக்டோபர் மாதம் 7ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.மேலும் அன்றைய தினமே வழக்கை முடித்து கொள்ள அனைத்து தரப்பும் ஒத்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவரை பணி மாறுதல்கள் மேற்கொள்ள கூடாது என்று நீதிமன்றம்உத்தரவு பிறபித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Wednesday, September 25, 2013

    ஆசிரியர் தர்குதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை இல்லை ஐக்கோர்டில் தேர்வு வாரியம் பதில்

    தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

    தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 50 நடுநிலைப் பள்ளிகள் சமீபத்தில், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அப்பள்ளிகளில் 50 தலைமைஆசிரியர்கள், 250 பட்டதாரி ஆசிரியர்கள் புதிதாக, நியமிக்கப்பட உள்ளனர். அதுவரை, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, 9ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    உயர்கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டு வர ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்

    உயர்கல்வி திட்டத்தில், தேவையான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தின், 23வது பட்டமளிப்பு பல்கலைக் கழகத்தில் விழா நேற்று நடந்தது. 18 ஆயிரத்து 427 மாணவ மாணவிகளுக்கு, பட்டங்கள் வழங்கப்பட்டன.


    பிளஸ் 2 வரைவு பாடத்திட்டம் இன்றைய (26.9.2013 ) கூட்டத்தில் முடிவு

    பிளஸ் 2, வரைவு பாடத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து, இன்று நடக்கும் உயர்நிலை குழு கூட்டத்தில், முடிவு எடுக்கப்படுகிறது.பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சென்னை, ஐ.ஐ.டி., பேராசிரியர், நாகபூஷணம் தலைமையிலான, ஆசிரியர் குழு, வரைவு பாடத்திட்டங்களை தயாரித்துள்ளது.


    அக்., 3ல் அனைத்து பள்ளிகளுக்கும் 2ம் பருவ புத்தகங்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

    அக்.,3 ல், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், இரண்டாம் பருவத்திற்கான, பாடப்புத்தகங்களை வழங்க, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.புத்தகச்சுமையை குறைத்து, கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கில், சமச்சீர் கல்வி திட்டத்தில், 6 முதல் 9 வகுப்புவரை உள்ள மாணவ, மாணவியருக்கு, முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


    பத்தாம் வகுப்பு வினா – விடை புத்தகங்கள்: அடுத்த வாரம் விற்பனைக்கு வரும்

    அரசு பள்ளிகளுக்கு ரூ.1.56 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழக எம்.டி., தகவல்



    அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்திற்காக, ரூ.1.56 கோடி இலவச பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு, வினியோகிகப்பட்டு உள்ளன, '' என, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர், மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.



    மத்திய அரசு ஊழியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசின் செயலர் அரசு ஆணையை வெளியிட்டார்

    click here to DOWNLOAD மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வுக்கான  அரசு ஆணை....

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு, 01.01.2016 முதல் அமுலுக்கு வருகிறது

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு, 01.01.2016 முதல் அமுலுக்கு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர் மன்மோகன்சிங் பிறப்பித்துள்ளார். இந்த சம்பள கமிஷன் 2016-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 7வது ஊதியக் குழுவில் இடம் பெற உள்ள வல்லுனர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த ஊதியக் குழு தனது பரிந்துரைகளை 2 வருடத்திற்குள் மத்திய அளிக்கும் என அரசு அறிவித்துள்ளது.

    Tuesday, September 24, 2013

    2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க /உயர்தொடக்க ஆசிரியர்களுக்கு"UNDERSTANDING SIMPLE SCIENCE CONCEPTS THROUGH EXPERIMENTS & PROJECTS" என்ற தலைப்பில் 05.10.2013 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 12.10.2013 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மையப் பயிற்சி நடத்தஉத்தரவு

    click here to download அனைவருக்கும் தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

    பள்ளியில் உள்ள பழைய கட்டடங்கள் இடித்து தள்ள கல்வி துறை உத்தரவு

    'மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கருதி, பள்ளி வளாகத்தில் பழைய கட்டடங்கள் இருந்தால், அவற்றை, உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்," என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார்.


    ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்கப்பட்டிருந்தாலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற வேண்டும். ஐகோர்ட் உத்தரவு


    Monday, September 23, 2013

    நெட் தேர்வில் தகுதி மதிப்பெண் யுஜிசி நிர்ணயிக்க அதிகாரம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

    விரிவுரையாளர்களுக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 


    மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

    மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பளித்துள்ளது.கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி புட்டசுவாமி தாக்கல் செய்த பொது நலன் மனுவில், விரும்பினால் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு, ஆதார் அட்டையை மத்திய அரசு தற்போது கட்டாயமாக்குகிறது.


    அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - முதுநிலை தேர்வு முடிவு வெளீயீடு ( DDE - Examination Results - May 2013

    click here to download & get your RESULT

    சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு அளிக்ககோரிய மனு தள்ளுபடி- உயர்நீதிமன்றம்

    சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கோரிய மனுவை இன்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த2010ம் ஆண்டு நேர்முக தேர்வில் கலந்துகொண்ட18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டு என்று உயர்நீதிமன்றத்தின் 156 பேர் மனு தாக்கள் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து வகுப்புகள் நடத்த திட்டம்.

    தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க,நடுநிலைப்பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை
    உருவாக்க தொடக்கக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறை மூலம்,அனைத்து பள்ளிகளுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டு,கம்ப்யூட்டர் உதவியுடன்பயிலும் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.



    Sunday, September 22, 2013

    தொடக்கக் கல்வி - பள்ளிகளில் கைபேசி பயன்படுத்துவதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால், அதை தவிர்க்க கைபேசியை அணைத்து வைக்க இயக்குநர் உத்தரவு

    ஆசிரியர் பணிநிரவல் - தமிழக அரசு உத்தரவு

    ஒரு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள்
    உருவாக்கப்படுகிறது. புதியதாக உருவாக்கப்பட உள்ள அல்லது நிலை உயர்த்தப்படவுள்ள 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 50 உயர்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 50 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பணிநிரவல் மூலமாக நிரப்பிக் கொள்ளப்பட வேண்டும்.தரம் உயர்த்த கருதப்படும் 50 பள்ளிகளுக்கு, புதியதாக உருவாக்க அல்லது நிலை உயர்த்திட 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான செலவினை ரெட்ரோ பன்டிங் அடிப்படையில் மத்திய அரசின் உதவியை பெற அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    விடுப்புகளும் அதன் விதிகளும். அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

    click here to download விடுப்பு விதிகள்

    வேலை கிடைக்காததற்கு கல்வி நிறுவனம் காரணமல்ல: நுகர்வோர் கோர்ட் உத்தரவு

    பட்டம் பெற்றவருக்கு, சரியான வேலை கிடைக்காததற்கு, படித்த கல்வி நிறுவனத்தை குறை சொல்லக் கூடாது;என, தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் கமிஷன் தெரிவித்துள்ளது.


    டி.இ.டி., தேர்வை ரத்து செய்ய வேண்டும்ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

    ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலை வாய்ப்பக முன்னுரிமைப்படி, ஆசிரியர் நியமனங் களை நடத்த வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, சங்க பொதுச் செயலர் ரங்கராஜன் கூறியதாவது


    வகுப்பறைகள் இல்லை ஆய்வகங்கள் இல்லை...புதிய பாடப்பிரிவு சேர்க்கைக்கு மாணவர்கள் எதிர்ப்பு

    கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்த பின், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


    நீண்ட நாள் பள்ளிகளுக்கு வராத மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும்- தொடக்கக் கல்வி இயக்குநர்

    இலவச திட்டங்களுக்கான செலவு கணக்கு நிதி வழங்காததால் ஆசிரியர்கள் அவதி - நாளிதழ் செய்தி

    தமிழக அரசு வழங்கும் இலவச திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் செலவு கணக்கு நிதி முறையாக வந்து சேராததால் ஆரம்ப பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் திண்டாடி வருகின்றனர்.


    Saturday, September 21, 2013

    கேள்வித்தாளை பிழையாக அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராதம்: டி.ஆர்.பி., முடிவு

    முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் பாட கேள்வித்தாளை, பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு, அபராதம் விதிப்பதுடன், அந்த அச்சகத்தை, கறுப்பு பட்டியலில் சேர்க்கவும், டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.


    தமிழ்நாட்டில் 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு - தமிழக அரசு ஆணை வெளியிடு

    சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்ததற்கேற்ப தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிக் கூடங்களாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை வருமாறு
     

    Friday, September 20, 2013

    பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கும், "பார்கோடிங்' முறை அமல் : முறைகேடுகள் நடப்பதற்கு இனி வாய்ப்பே இல்லை

    பிளஸ் 2 தேர்வுகளில், முக்கிய பாடங்களுக்கு மட்டும், "டம்மி எண்' வழங்கி, விடைத்தாள் திருத்தப்பட்டு வந்த நிலையை மாற்றி, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில், அனைத்து பாட தேர்வுகளுக்கும், "பார்கோடிங்' முறை அமல்படுத்தப்பட உள்ளது.


    ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளிலும் மொபைல் போன்களுக்கு தடை: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கிடுக்கிப்பிடி

    பள்ளி கல்வித்துறையில், மொபைல் போன் பயன்படுத்த, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், மொபைல் போன் பயன்பாட்டுக்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் மொபைல் போன் அதிகரித்துள்ளதாக தெரிய வந்ததை அடுத்து, தொடக்கக் கல்வித் துறை கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.


    பதவி உயர்வை வெறுக்கும் அரசு அலுவலர்கள் "ஈகோ'வால் வேலை வாங்குவதில் பிரச்னை

    தேர்வு நிலை,சிறப்பு நிலை பெற்றவர்களை விட, பதவி உயர்வு பெற்றவர்களுக்கு,சம்பள உயர்வு குறைவாக வழங்குவதால்,பதவி உயர்வை, அரசு அலுவலர்கள் வெறுக்கின்றனர்.மத்திய அரசு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதன் அடிப்படையில்,தமிழக அரசும் அதன் பரிந்துரைபடி, திருத்திய ஊதிய விகிதத்தை நிர்ணயித்து ஆசிரியர்,அலுவலர்களுக்கு நடைமுறைப்படுத்தியது.


    அங்கன்வாடி குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், கேழ்வரகு-உளுந்து பர்பி-முதல்வர் அறிவிப்பு

    பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில், சத்துணவு சாப்பிட்டும் எடை குறைவாக உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், கேழ்வரகு பர்பி, உளுந்து பர்பி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். குழந்தைகளுக்கு சத்துணவு தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 67 லட்சத்திற்கும் மேலான குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. 


    தொடரும் இரட்டைப்பட்ட வழக்கு- மீண்டும் வருகிற 26.9.2013, வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது

    தொடரும் இரட்டைப்பட்ட வழக்கு இன்று(20.9.2013) முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த வழக்கு இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் அவர்கள் வாதிட்டார். அவரது வாதம் காலை 11.55க்கு தொடங்கி பிற்பகல் 1.15வரை தொடர்ந்தது. அதன்பின் நீதியரசர்கள் இவ்வழக்கை 26.9.2013 அன்று ஒத்தி வைத்து தீர்ப்பளித்தனர். எனவே இவ்வழக்கு வருகிற 26.9.2013, வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது

    2014-2015 பாரதிதாசன் தொலைக்கல்வி மையத்தின் -B.Ed விண்ணப்பங்கள் வழங்கும் தேதி நீடிக்கப்பட்டுள்ளது

    பாரதிதாசன் B.Ed விண்ணப்பங்கள் வழங்கும் தேதி அக்டோபர்6 வரை நீடிக்கப்பட்டுள்ளது.மேலும் நுழைவுத்தேர்வு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தொடர்புக்கு -0431-2407027,,2407028,2407054

    டி.இ.டி., தேர்வு முடிவுகள், இம்மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல்வாரத்திலோ வெளியாகும்-ஆசிரியர் தேர்வு வாரியம்

    இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், "தமிழ் பாட பிரச்னையில்,விரைவில், ஒரு முடிவை எடுத்து,கோர்ட்டில் தெரிவிக்க உள்ளோம்.எனவே, 30ம் தேதிக்குள், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். டி.இ.டி., தேர்வு முடிவுகள், இம்மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ வெளியாகும்' என, தெரிவித்தது.

    அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமன வழக்கு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

    சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு கம்ப்யூட்டர் அறிவியல் பி.எட். பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.முத்துராமன் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை மனு தாக்கல் செய்தார். அதில், கம்ப்யூட்டர்ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக கடந்த 20.12.12 அன்று ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.


    மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு

    மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 90 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


    Thursday, September 19, 2013

    தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும், 3,565 இடைநிலை ஆசிரியர் மற்றும் 1,581 பட்டதாரி ஆசிரியருக்கான பணியிடங்களை, வரும் டிசம்பர் வரை நீட்டிப்பு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    5,146 ஆசிரியர்களும், எந்த சிக்கலும் இன்றி, சம்பளம் பெறுவது, உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்ட நிதியில் இருந்து, பெரும்பாலான ஆசிரியர்களுக்கு, சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்காக, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 


    அரசு தேர்வு விடைத்தாள் வடிவமைப்பு மாற்றம்: தனி தேர்வுகளில் அமல்

    பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில், புதிய விடைத்தாள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. செப்., 23 முதல் நடக்கும் தனி தேர்வுகளில், மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில், இவற்றை தேர்வுத்துறை வழங்குகிறது. 


    பிளஸ் 2 மறுமதிப்பீட்டு திட்டத்தில் முறைகேடு நடந்ததா: விடைத்தாளை மீண்டும் ஆய்வு செய்கிறது தேர்வுத்துறை

    கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குப்பின் நடந்த மறு மதிப்பீட்டு விடைத்தாள்கள் அனைத்தையும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழு மூலம், மீண்டும், தேர்வுத்துறை ஆய்வு நடத்தி வருகிறது. மறு மதிப்பீட்டில், முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகம் காரணமாக, நான்கு மாதங்களுக்குப் பின், மீண்டும், விடைத்தாள்களை ஆய்வு செய்யும் பணியில், தேர்வுத் துறை ஈடுபட்டுள்ளது.


    முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது.

    ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலையில், போட்டி தேர்வை நடத்தியது. 1.5 லட்சம் பேர், தேர்வை எழுதினர்.தேர்வின், தற்காலிக விடைகளை வெளியிட்ட சிறிது நாட்களில், அனைத்து பாடங்களுக்கும், தேர்வு பட்டியலையும், டி.ஆர்.பி., தயாரித்தது.


    பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி வாங்க எம்.பி.,க்கள் நிதி ஒதுக்க அனுமதி

    "எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் வாங்கவும், கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டுமான வசதியை ஏற்படுத்தவும் ஒதுக்கீடு செய்யலாம்' என, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது..


    குரூப்-1 தேர்வு ஒத்திவைப்பு

    டி.என்.பி.எஸ்.சி சார்பி்ல் நடக்க உள்ள குரூப் -1 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்தியி்ல், குரூப்-1 க்கான முதன்மை தேர்வு செப். 27, 28, மற்றும் 29-ம் தேதிகளில் நடக்க விருந்ததது. தற்போது முதன்ம‌ை தேர்வு அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


    தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை

    தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த அரசாணைப்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான ஊழியர்கள்,


    விடைத்தாள்களில் மாணவர் புகைப்படம் : முறைகேடு தடுக்க புதிய நடைமுறை

    முறைகேடு, தாமதம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்களை தவிர்க்க, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்களை வழங்க தேர்வு துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளின் போது சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. அவற்றை தவிர்க்க தேர்வு துறை பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 


    மறைந்த மத்திய அரசு ஊழியரின் விதவைகள் மற்றும் விவாகரத்தான மகள்களும் குடும்ப ஓய்வூதியம் பெறலாம்

    மத்திய அரசின் மற்ற அமைச்சகங்களும்,துறைகளும் இது தொடர்பாக விளக்கங்கள் கேட்ட நிலையில்,இது குறித்த சுற்றறிக்கையை மத்திய பணியாளர் நலன் அமைச்சகம் கடந்த வாரம் அனுப்பியுள்ளது.அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..


    எம்...காம் பி.எட்.. முடித்தவருக்கு முதுமலை வணிகவியல் ஆசிரியர் நியமனம் பணி நியமனம் தர வேண்டும் - உயர் நீதி மன்றம் உத்தரவு

    Wednesday, September 18, 2013

    23ம் தேதி பிளஸ் 2 தனி தேர்வு : இன்று முதல் "ஹால் டிக்கெட்'

    பிளஸ் 2 தனி தேர்வு, வரும், 23ம் தேதி துவங்குகிறது. மாநிலம் முழுவதும், 130 மையங்களில் நடக்கும் தேர்வை, 40 ஆயிரம் மாணவர் எழுதுகின்றனர். தொடர்ந்து, அக்., 5ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வு நடக்கிறது. 10ம் வகுப்பு தனி தேர்வும், 23ம் தேதி துவங்குகிறது. 


    முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் "வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பேசும் திட்டம் துவக்கம்

    பள்ளிக்கல்வி இயக்குனர், "வீடியோ கான்பரன்ஸ்' முறையில், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பேசுவதற்கான திட்டம், நேற்று முன்தினம் துவங்கியது. துறை செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து 


    பொது தேர்வு எழுதும் மாணவர் விவரம் 23ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவு

    வரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் விவரங்களை, வரும், 23ம் தேதி முதல், தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.


    பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு துறைகளில் புதிய நியமனங்களுக்கு தடை

    பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு, பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன்படி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அரசு கருத்தரங்கங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் விமானங்களில் சிக்கன வகுப்பில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். அரசு துறைகளில் புதிய நியமனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திட்டமல்லாத செலவினங்கள் 10 சதவீததம் குறைக்கப்பட வேண்டும். அரசு துறைகளுக்கு புதிய வாகனங்கள் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இரட்டைப்பட்டம் விசாரணையில் முன்னேற்றம் நாளை முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது

    இன்று ஒரு வழியாக விசாரணைக்கு வந்தது இரட்டைப்பட்ட வழக்கு. இரட்டைப்பட்டம்(DOUBLE DEGREE ) சார்பாக வாதிட்ட வழக்குரைஞர்களின் வாதங்களை நீதியரசர்கள் கேட்டறிந்தனர். மேலும் மூன்று வருட வழக்குரைஞர்களின் வாதங்களின் தொடர்விசாரணை நாளையும்(19.09.2013) தொடர்கிறது.நமக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிறது.நாளை இரட்டைப்பட்டம் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் என நிச்சயமாக எதிர்பார்க்கபடுகிறது.

    ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவ பாடத்திட்டம் ( Dir. of School Education - Common Syllabus for II Term for Class IX )

    COMMON SYLLABUS

    CLASS IX

     II TERM

    Subject    
    English    
    Tamil    
    Mathematics English Version Tamil Version
    Science English Version Tamil Version
    Social Science English Version Tamil Version

    I TERM

    Subject    
    English    
    Tamil    
    Mathematics English Version Tamil Version
    Science English Version Tamil Version
    Social Science English Version Tamil Version

    முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வினை ஏன் ரத்து செய்ய கூடாது?ஐகோர்ட் கேள்வி

    முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஐகோர்ட்டில் இன்று விளக்கம் அளித்தார்.அதில் ஏன் தேர்வினை ரத்து செய்யகூடாது என நீதிபதி கேட்ட கேள்விக்கு 40 பிழையான கேள்விகளை தவிர்த்து மற்ற வினாக்களை மதிப்பிடலாம் என்று கூறிய யோசனையினை நீதிபதி மறுத்து தமிழக அரசுடன் ஆலோசித்து வரும் 24 ம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.

    State Public Sector Undertakings-sanction of Bonus and Ex-gratia to the employees of State Public Sector Undertakings for the year 2012-13 payable during 2013-14-orders issued.

    click here to download G.O Ms.No. 377 Dt: September 18, 2013  .....

    தொடக்க பள்ளிகளை ஆய்வு செய்ய கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

    தொடக்க கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டாய்வு செய்யாத அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை முதலில் ஆய்வு செய்ய வேண்டும்.


    மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜூலை 1ந் தேதி தேதியிட்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதற்கான அறிவிப்பை வரும் வெள்ளி அன்று வெளியிடும் எனத் தெரிகிறது.


    Tuesday, September 17, 2013

    மூன்றாவது ஊக்க ஊதிய (3rd Incentive) உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் -15

    click here to  DOWNLOAD பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் - 15 நாள் 28.3.2013 மற்றும் court order.....

    மாநில கணக்காயரால் நிர்வாகிக்கப்படும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குதாட்கள் விவரம் கருவூலத்தில் பெற்றுக்கொள்ளலாம்

    2011-12 ஆம் ஆண்டிற்கான அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்த சந்தா, அரசு பங்களிப்பு அடங்கிய கணக்குத்தாட்கள் விவரம் சம்பந்தப்பட்ட அரசு சார் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


    எஸ்.எஸ்.ஏ.,' நிதி, 1,500 கோடி ரூபாயாக குறைப்பு: நிதி நெருக்கடியால், மத்திய அரசு நடவடிக்கை

    அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்.எஸ்.ஏ.,), தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை, 2,000 கோடி ரூபாயில் இருந்து, நடப்பாண்டில், 1,500 கோடி ரூபாயாக குறைத்து, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி நெருக்கடி காரணமாக, தமிழகம் மட்டுமில்லாமல், அனைத்து மாநிலங்களுக்கும், இந்த நிதி குறைப்பு நடவடிக்கையை, மத்திய அரசு எடுத்துள்ளதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


    TNPSC – Departmental Exam Dec 2013 – Online Registration

    DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration

    Current Online Registration for...
    (Click to Apply Online)
    Notification Current Status


    Departmental Examinations December 2013



    Tamil | English


    Online up to
    15 Oct 2013

     

    Monday, September 16, 2013

    வினாத்தாளில் பிழைகள் இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரியமே பொறுப்பு - உயர் நீதி மன்றம்


    பள்ளி தலைமை ஆசிரியர்களின் தேசிய திறன் தேர்வுக்கான விண்ணப்பங்களை, இன்று (17.9.2013 ) முதல் பெறலாம்

    "பள்ளி தலைமை ஆசிரியர்களின் தேசிய திறன் தேர்வுக்கான விண்ணப்பங்களை, இன்று முதல் பெறலாம்' என, அரசு துறைகளுக்கான தேர்வு இயக்குனரகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, தேசிய திறன் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, 17ம் தேதி (இன்று) முதல், 24ம் தேதி வரை, தீதீதீ.tணஞீஞ்ஞு.டிண என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதள "பாஸ்வேர்டு'களை, அந்தந்த பள்ளி மண்டல கல்வி அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்,இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மொபைல்போன் கொண்டு வந்தால் இடைநீக்கம்: மாணவர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

    மாணவ, மாணவியர் பள்ளிக்கு மொபைல்போன் கொண்டு வந்தால், "சஸ்பெண்ட்" நடவடிக்கை எடுக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தற்போது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் அதிகளவில் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். 


    Sunday, September 15, 2013

    இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுதல் தொடர்பான தகவல் அரியும் உரிமை சட்டத்தின்( RTI ) கீழ் பள்ளிக் கல்வி இயக்குனர் தந்துள்ளத் தகவல்கள்.

    முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு விரைவில் வெளியீடு

    முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு முடிவு மிக விரைவில் வெளியிடப்படுகிறது. அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது.8 லட்சத்து 50 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. 


    நெல்லை மாவட்டம் - நாளை (16.9.2013) அன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் - C.E.O - அறிவிப்பு


    Saturday, September 14, 2013

    TNPSC -டிசம்பர் -2013 அரசுப் பணியாளர்களுக்கான அரசுத் துறைத் தேர்வுகள் அறிவிப்பு


    பிளஸ் 2 தனி தேர்வு : "தத்கால்' அறிவிப்பு

    பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், சிறப்பு கட்டணம் செலுத்தி, 16, 17 ஆகிய தேதிகளில் விண்ணபிக்கலாம்.

    தேர்வுத் துறை அறிவிப்பு: விரைவில் துவங்க உள்ள பிளஸ் 2 தனித்தேர்வை எழுத, தேர்வுத் துறை ஏற்கனவே அறிவித்த தேதிகளில் விண்ணப்பிக்காத தேர்வர்கள், "தத்கால்' திட்டத்தின் கீழ், வரும், 16, 17ம் தேதிகளில், TATKAL செய்ய CLICK HERE என்ற இணையதளம் வழியாக, பதிவு செய்யலாம். இணையதளத்தில்,



    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் நேரடி கல்வி முறையில் பி.எச்டி.,

    தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக, நடப்பு கல்வியாண்டில், நேரடி கல்வி முறையில், எம்.பில்., மற்றும் பி.எச்டி., பட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள், தொலைதூர கல்வி முறையில் படிக்கின்றனர்.


    பள்ளிக்கல்வி துறையில் விரைவில் 1,000 உதவியாளர்கள் பணி நியமனம்

    பள்ளிக்கல்வித் துறையில், 1,000 உதவியாளர் பணியிடங்கள், நேரடி தேர்வு மூலம், விரைவில் நிரப்பப்பட உள்ளன. அரசு துறைகளில், உதவியாளர் பணியிடம், மிகவும் முக்கியமானது. இளநிலை உதவியாளர்களுக்கு மேல் நிலையிலும், கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு, கீழ் நிலையிலும், உதவியாளர்கள் பணி புரிகின்றனர்.


    பள்ளிகளில் பாடம் நடத்தாமல் பொழுதுபோக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - உயர்நிலைப்பள்ளித்துறை அமைச்சர்

    பள்ளிகளில் பாடம் நடத்தாமல் பொழுது போக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரம்பம் மற்றும் உயர்நிலைப்பள்ளித்துறை அமைச்சர் தற்போதைய கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.


    Wednesday, September 11, 2013

    DISE - புள்ளி விவரத்தை சிறந்த முறையில் பூர்த்தி செய்ய 13.9.2013 அன்று EDUSAT வழிமூலம் தேசிய அளவில் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உத்தரவு

    அனைவருக்கும் கல்வி இயக்கம் -  மாநில திட்ட இயக்குநர் அவர்களின் ஆணை

    2013 ஆண்டிற்கான சிறந்த பொது நிர்வாகத்திற்கான பிரதமர் விருது தகுதியுடையோர் விண்ணப்பங்கள் அனுப்ப கோரி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

    click here to download தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி பெறப்பட்ட அரசு அறிவிப்பு :- முஸ்லிம் மாணவர்களுக்கு தாடி, தொப்பி, ஹிஜாப்க்கு தமிழ்நாடு அரசு கல்வித்துறை கல்வி நிலையங்களில் தடை இல்லை..!


    Tuesday, September 10, 2013

    தேர்வு கட்டணம் செலுத்தும் முறையில் பெரும் மாற்றம் : கிராமப்புற மாணவர் சிரமம் குறையும்

    தனித்தேர்வு கட்டணங்களை, வங்கியில் செலுத்தும் முறையில் உள்ள, சிரமங்களை நீக்கி, நேரடியாக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் உள்ள, பணியாளர்களிடம் வழங்குவதற்கு, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த பணிகளை கவனிக்க, இயக்குனரகத்தில் இருந்து பணியாளர்கள், பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.


    REGULAR - பி.எட்., கல்லூரிகள் வருகைப்பதிவு விபரம் : தினமும் "இமெயில்' அனுப்ப உத்தரவு

    பி.எட்., கல்லூரிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவு விபரங்களை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கு, தினமும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, அப்பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.


    கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு, இலவச மொபைல் போன்கள், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச டேப்லெட் - தொலை தொடர்பு ஆணையம் அனுமதி

    கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு, இலவச மொபைல் போன்கள், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச டேப்லெட் கம்ப்யூட்டர்களை வழங்குவதற்கு, தொலைதொடர்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.


    தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் 54 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்க, பள்ளிகளின் பெயர் பட்டியல் முன்னுரிமை அடிப்படையில் அனுப்ப இயக்குநர் உத்தரவு.

    click here to download தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல் முறைகள்

    திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    தந்தை இறந்து விட்டால், கருணை அடிப்படையில் திருமணமான மகளுக்கும் வேலை வழங்கவேண்டும். இதில் ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தந்தை மரணம் வேலூரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது தந்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஆய்வாளராக பணியாற்றினார்.


    தொடக்கப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் - உதவித் தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர் உத்தரவு


    தமிழ் பாடத்திற்கான முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிட மதுரை உயர்நீதிமன்றம் தடை

    தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அண்மையில் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் தமிழ் பாடத்திற்கான வினாத்தாளில் 47 வினாக்கள் பிழையுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து தேர்வு எழுதிய ஒருவர் வழக்கு தொடுத்ததில் தமிழ் பாடத்திற்கான முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிட மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    Monday, September 9, 2013

    2009 க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் மாவட்ட மாறுதலில் செல்லலாம் உயர் நீதிமன்ற உத்தரவிட்ட நகல்

    click here download to உயர் நீதிமன்ற உத்தரவிட்ட நகல்

    அரசு ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு இலவச "ஷூ': 23,878 பேருக்கு வழங்க ரூ.1.19 கோடி ஒதுக்கீடு

    அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,), படிக்கும், 23,878 மாணவருக்கு, இலவச, "ஷூ' வழங்க, அரசு, 1.19 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில், 62 ஐ.டி.ஐ.,க்கள் உள்ளன. இவற்றில், 12 பெண்களுக்கானவை. தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்காக ஒன்றும், பழங்குடியின மாணவர்களுக்காக ஒன்றும், செயல்படுகின்றன. இவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும், தமிழக அரசு சார்பில், இலவசமாக, ஒரு ஜோடி ஷூ வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, 23,878 பேருக்கு, இலவச ஷூ வழங்க, 1.19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியில், தமிழகம் முழுவதும் உள்ள, அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு, இலவச ஷூ வினியோகம் செய்ய, "டெண்டர்' கோரப்பட்டு உள்ளது.

    Sunday, September 8, 2013

    ‘கண்டனம்’ என்பது போன்ற சிறிய தண்டனைகளுக்காக, அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    பதவி உயர்வு  : -
    விருதுநகர் மாவட்ட கருவூல அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருபவர் வன்னியராஜ். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனு வருமாறு:– 


    நான், கடந்த 1988–ம் ஆண்டு கருவூலத்துறையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். 2009–ம் ஆண்டு கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றேன். 2012–2013–ம் ஆண்டு உதவி கருவூல அலுவலர் பதவி உயர்வுக்கான பட்டியலில் எனது பெயர் சேர்க்கப்படவில்லை. 



    பகுதிநேர ஆசிரியர்களுக்கு "இ.சி.எஸ்.,' முறையில் சம்பளம்

    முறைகேட்டை தவிர்க்க, அரசுப் பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு, "இ.சி.எஸ்.,' (எலக்ட்ரானிக் கிளியரன்ஸ் சிஸ்டம்) முறையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.


    மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலிப்பது சட்ட விரோதம்: தனியார் கல்லூரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

    தனியார் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லூரிகள், நிதி நிறுவனங்கள் போல் செயல்படுகின்றன. மாணவர் சேர்க்கைக்காக, மாணவர்களிடமிருந்து, நன்கொடை என்ற பெயரில், பல கோடி ரூபாயை, வசூலிக்கின்றன. இது, சட்ட விரோதமான செயல். இதை தடுத்து நிறுத்துவதற்கு, மத்திய அரசு, தகுந்த சட்டம் இயற்ற வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


    தகவல் அறியும் சட்டத்தில் தனி நபர் தகவல் கூடாது -மும்பை ஐகோர்ட்

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தனிப்பட்ட ஒருவரின் பணிக் கால குறிப்பு, வருமான வரி விவரங்கள், சொத்து விவரம் ஆகியவற்றை வெளியிடுவது சட்டப்படி குற்றம். பொது நலன் சம்பந்தப்பட்ட விஷயம் அடங்கி யுள்ள ததாக, தலைமை தகவல் ஆணையர் என முடிவுக்கு வந்தால் மட்டுமே வெளியிடலாம் என, மும்பை ஐகோர்ட் வழக்கு ஒன்றில் உத்தரவிட்டுள்ளது.

    Saturday, September 7, 2013

    2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.

    2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்களை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது என்றும், எதிர்காலத்தில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் அவர்களை நியமிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 


    பள்ளிக்கல்வி மேம்படுத்த ரூ.14,000 கோடி

    பள்ளிகல்வியின் முக்கியத்துவம் கருதி, தமிழக அரசு 14,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது,'' என, தமிழக பள்ளி மற்றும் உயர்
    கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசினார்.



    Friday, September 6, 2013

    இடைநிலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கலாம் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - தினத் தந்தி நாளிதழ்

    இதுவரை தடைபட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணிமாறுதல் வேண்டி விண்ணப்பித்தால் அவர்களுக்கு அரசின் ஆணைக்கு உட்பட்டு
    பணிமாறுதல் வழங்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
    ஆசிரியர் தேர்வு
    கடந்த 2007–ம் ஆண்டு, தமிழக அரசின் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் (CPS) இரண்டு லட்சம் அரசு ஊழியர்களின் கணக்குகள் வெளீயீடு

    செப்டம்பர் 10 முதல் 21 வரை ( காலாண்டு தேர்வு ) கல்வி அதிகாரிகளுக்கு விடுமுறை கிடையாது - பள்ளிக் கல்வி அறிவிப்பு


    பள்ளி காலாண்டு தேர்வு நாட்களில் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கத்தடை: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

    காலாண்டு தேர்வை தொடர்ந்து, அந்த நாட்களில், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் விடுமுறை எடுக்க, பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் தடை விதித்துள்ளார்.


    சத்துணவு மையங்களில் புதிய உணவு வகைகளை தயாரிக்க வசதியாக சமையல்பாத்திரங்களை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    CLICK HERE TO DOWNLOAD TO தமிழக அரசின் செய்திக் குறிப்பு

    இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவினை வழங்கி, அதன் மூலம் ஊட்டச்சத்து குறைவினை அகற்றுதல், பள்ளி செல்லும் குழந்தைகளின் விகிதத்தினை அதிகரித்தல், இடைநிற்றல் அகற்றல் ஆகிய நோக்கங்களை எய்தும் பொருட்டு, எம்.ஜி.ஆரால் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டம் துவக்கப்பட்டது. 


    பதவி உயர்வுக்கு வழிவகுக்கும் அரசுத் துறைத்தேர்வு முடிவுகள் வெளீயீடு

    Results of Departmental Examinations - MAY 2013 

    அரசுத் துறைத் தேர்வு முடிவுகளை அறிந்து  கொள்ள click here &GET YOUR RESULT


    ஆசிரியர்கள் எம்ஃபில் படித்தால் மூன்றாவது ஊக்க ஊதியம் உண்டு - உயர் நீதிமன்றம் உத்தரவு


    Thursday, September 5, 2013

    ஆசிரியர் தகுதித்தேர்வு: செப்டம்பர் இறுதிக்குள் முடிவுகள் வெளியீடு

    ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டமிட்டுள்ளது. தகுதித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்வு பணிகளை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அதை தொடர்ந்து தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களில் பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    TNPSC Group II பாடத்திட்டம் வெளியீடு

    திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை அறிந்து கொள்ள click here...

      இந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி பட்டப்படிப்பாகும். இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் மாதம் 1–ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு அக்டோபர் 4–ந்தேதி வரை விண்ணப்பிக்க காலகெடு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் அக்டோபர் 8–ந்தேதி ஆகும். இந்த தேர்வில் விண்ணப்பிப்பவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணைய இணையதளத்தில் பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. 


    TNPSC Group 2 (CCSE-II) Notification 2013 – Apply Online for 1064 Vacancies

    details of TNPSC Recruitment click on the link given below… 

    TNPSC Group 2 (CCSE-II) Exam 2013More Information
    TNPSC Group 2 AdvtGet Details
    TNPSC Group 2 Online ApplicationClick here
    TNPSC Group 2 EligibilityGet Details
    TNPSC Group 2 Selection ProcedureGet Details
    TNPSC Group 2 Exam PatternGet Details

    பட்டதாரி ஆசியர்களுக்கான M.phil ஊக்க ஊதியம் வழங்க உத்தரவு மற்றும் ஆசியர்களை கோர்டுக்கு அலைய விடக்கூடாது என ஐகோர்ட் கிளை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: பி.எட்., சேர்க்கை

    மேலும் விவரங்களுக்கு click here

    தமிழ்நாடு திறந்தநிலை பல்லைக்கழகத்தில் பி.எட் சிறப்பு கல்வி 2013-15ம் கல்வி ஆண்டிற்கான படிப்பில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இப்படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    2009 ஆம் ஆண்டு முதல் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலில் செல்ல அனுமதி - சுப்ரீம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    ஆசிரியர் பணியிடை மாறுதல் தொடர்பாக இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு இயக்கம் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது. இதில் 2008-ம் ஆண்டு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் குறிப்பிட்ட மாவட்டங்களில் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது, இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், 2009-ம் ஆண்டிற்கு பின்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியிட மாறுதல் தரலாம் என தீர்ப்பளித்தது.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து வைகைச்செல்வன் நீக்கம்.

    தமிழக அமைச்சரவையிலிருந்து வைகைச்செல்வன் இன்று நீக்கப்பட்டுள்ளார். இதேப்போல்,அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சரும், கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.வைகைச்செல்வன் வகித்து வந்த பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பொறுப்புகள், உயர் கல்வித்துறை அமைச்சர் பழனிப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு - தேர்வு முடிவு வெளீயீடு ( Result Announced CTET-JULY 2013 )

    CLICK HERE & GET YOUR Result  CTET-JULY 2013

    ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர் தேர்வு பெற வாய்ப்பு TRB கணிப்பு.

    ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர் (8 சதவீதம் பேர்)தேர்ச்சி பெறலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது. இதற்கிடையே, மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் அகில இந்திய அளவில் 77,634 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 10 சதவீத தேர்ச்சி ஆகும். 


    Wednesday, September 4, 2013

    தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 200 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல்

    தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த 2012-13 ஆம் கல்வியாண்டில் மட்டும் 50-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 


    பலத்த எதிர்ப்புக்கு இடையே புதிய ஓய்வூதிய மசோதா மக்களவையில் நிறைவேறியது

    EMIS - விவர தொகுப்பு மாவட்ட வாரியாக அட்டவணை வெளீயீடு

    இக்னோ பல்கலைக்கழகம் ( IGNOU-GUIDELINES AND INSTRUCTIONS FOR SUBMISSION OF ON-LINE EXAMINATION FORM )

    IGNOU-GUIDELINES AND INSTRUCTIONS FOR SUBMISSION OF ON-LINE EXAMINATION FORM

    திருப்பூர் மாவட்டம் ஓணம் பண்டிகை முன்னிட்டு 16ம் தேதி விடுமுறை

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "வரும் 16ம் தேதி ஓணம் பண்டிகை என்பதால், மாவட்டத் தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு உள் ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, வரும் 21ம் தேதி அரசு அலுவலகங்களும், பள்ளி, கல்லூரிகளும் செயல் படும். விடுமுறை தினமான 16ம் தேதி, அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள், குறிப்பிட்ட சில பணியாளர்களுடன் செயல்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதல் வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் இன்று (5-9-2013 ) விசாரணை

    இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதல் சம்பந்தமான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், இன்று விசாரணைக்கு வருகிறது. இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில், இன்று நடைபெறுகிறது.

    இரட்டைப்பட்டம் வழக்கு- இன்று (05.09.2013) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது:

    இரட்டைப்பட்டம் வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு ஒரு வேளை நாளை விசாரணைக்கு வந்தால் கிட்டதட்ட விசாரணை நிறைவடைந்துவிடும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நீண்டு வரும் இவ்வழக்கு விரைவில் முடிந்தால் பதவி உயர்வுக்கு காத்திருக்கும் ஆசிரியர்களின் ஏக்கம் தீரும்

    வாக்காளர் பட்டியல் திருத்த பணி அடுத்த மாதம் முதல் தேதி துவக்கம்

    "தமிழகம் முழுவதும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, அடுத்த மாதம் நடைபெறும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழகம் முழுவதும், அடுத்த மாதம், முதல் தேதி, சட்டசபை தொகுதி வாரியாக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்று முதல், அக்., 31ம் தேதி வரை, 


    தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், மாணவ, மாணவியர் நலனுக்காக, குறை தீர்ப்பு மையம்

    தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், மாணவ, மாணவியர் நலனுக்காக, குறை தீர்ப்பு மையம் அமைக்க, இயக்குனர், தேவராஜன் திட்டமிட்டுள்ளார். நேரில் வர இயலாத வெளி மாவட்ட மாணவ, மாணவியர், கட்டணமில்லா தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, விவரங்களை தெரிவித்தால், உடனடியாக பதிலளிக்கவும், ஏற்பாடு நடந்து வருகிறது. இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

    இரண்டாம் பருவ புத்தகங்கள் அடுத்த வாரத்தில் இருந்து வினியோகம்

    ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு அடுத்த வாரத்தில் இருந்து, இரண்டாம் பருவத்திற்கான 2.6 கோடி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை திட்டம், அமலில் உள்ளது. பள்ளி திறந்ததும் ஜூன் முதல் செப்., வரையிலான முதல் பருவத்திற்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. 


    பள்ளி குழந்தைகளின் வாகனங்களில் பாதுகாப்பு விதிகள்: ஐகோர்ட் அரசுக்கு நோட்டீஸ்

    பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், பாதுகாப்பு விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்துவதை உறுதிசெய்ய, பள்ளி அளவில், பாதுகாப்பு குழுவை அமைக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


    ஆசிரியர்களின் ஓய்வு வயதை உயர்த்தி டெல்லி மாநில அரசு உத்தரவு

    ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 62லிருந்து 65ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என டெல்லி அரசை ஆசிரியர்கள் சங்கம் வற்புறுத்தி வந்தது.இதனை ஏற்று, ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 65ஆக உயர்த்தி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 


    பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குரிய State Level National Talent Search Examination ( X-Std ) ( Nov - 2013 )

    State Level National Talent Search Examination ( X-Std ) ( Nov - 2013 )

    Directorate of Government Examinations - HSC Supplementary Exam Registration

    Higher Secondary Supplementary Examination (Sep / Oct - 2013)


    மத்திய அரசுப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பு

    CLICK HERE TO VIEW MORE DETAILS


    இந்திய அரசின் அமைச்சகப் பதவிகளையும், அரசுப் பணியிடங்களையும் யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 4 பிரிவுகளின் கீழான பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. 


    டி.இ.டி., விடையை ஆட்சேபித்து 2,000 பேர் விண்ணப்பம்.

    டி.இ.டி., தேர்வு விடைகளை ஆட்சேபித்து, 2,000 தேர்வர்கள், டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பித்து உள்ளனர். இந்த விண்ணப்பங்களை, பாட வாரியான நிபுணர் குழு, தற்போது ஆய்வு நடத்தி வருகிறது.இதற்கிடையே, முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி விடைகளை, ஓரிரு நாளில் வெளியிட்டு, அடுத்த வாரத்தில் தேர்வுப் பட்டியலை வெளியிட டி.ஆர்.பி., முடிவு எடுத்துள்ளது.


    திருத்திஅமைக்கப்பட்ட அரை ஆண்டு தொழில் வரி விவரம் ( NEW profeesional tax 1.10.2013 ).....முதல் அமலாகிறது.

    குரூப் 2 தேர்வு அறிவிப்பு 1064 பணியிடங்களுக்குகுரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளீயீடு

    click here to know Group 2 Exam Notification