கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Monday, March 11, 2013
துவக்கப் பள்ளி மாணவர் வாசிப்புத்திறன் குறைவு: இணை இயக்குனர் ஆய்வில் அதிர்ச்சி
துவக்கப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை, ஏப்ரல் மாதத்துக்குள் அதிகப்படுத்த வேண்டும். இல்லையெனில், சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என, தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குனர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Sunday, March 10, 2013
ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது ? யாரை அணுகுவது..?
1.இன்ஷூரன்ஸ் பாலிசி! யாரை அணுகுவது..?பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தரவேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி
பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக
ரூ.75 கட்ட வேண்டும்.
இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல்
ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை:
நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால்
அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய்
பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்;
அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு,ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு காப்பீட்டு திட்டம் கிடைக்குமா?:தமிழக அரசு செயல்படுத்த எதிர்பார்ப்பு
கேந்திர வித்யாலயா பள்ளிகளை போல், தமிழக பள்ளி மாணவர்களுக்கும் காப்பீடு (இன்சூரன்ஸ்) திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற, எதிர்பார்ப்பு பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.தமிழக பள்ளி மாணவ, மாணவியர், விபத்தில் சிக்கி காயமடைவதும், உயிர்ப்பலி ஆவதும், தினந்தோறும் நடக்கும் நிகழ்வாக மாறியுள்ளது.
மும்பை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு "டெபிட்' கார்டு
மும்பை மாநகராட்சி சார்பில், 2013 - 14ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும், நான்கு லட்சம் மாணவர்களுக்கும், வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு, "டெபிட்' கார்டுகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2007 - 08ம் கல்வி ஆண்டு முதல், மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு,
Saturday, March 9, 2013
பொறியியல், மருத்துவ படிப்பு சேர்க்கை கலந்தாய்வை ஒரு மாதம் முன்னதாக துவக்க தமிழக அரசு ஆலோசனை
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.,) உத்தரவின்படி, பொறியியல் கல்வி வகுப்புகள், நாடு முழுவதும், ஆகஸ்ட், 1ம் தேதி துவங்கப்பட உள்ளன. இதற்கு ஏற்ப, தமிழகத்தில், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகள் சேர்க்கைக்கான கலந்தாய்வை,
கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல் தொடர்பாக தினமலர் வெளியிட்ட செய்தி எதிரொலி-விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப கோரி பள்ளிகல்வி இயக்குனர் உத்தரவு
07.03.2013
ehë£l Âdky® ehëjêš, g¤jh« tF¥ò nj®¢Á é»j¤ij mÂfç¤J fh£Ltj‰fhf, tF¥Ãš Ëj§»a,
njwhj khzt®fis ÏilãW¤j« (M¥br‹£) brŒÍ« Ka‰Áæš gy jiyikahÁça®fŸ Ïw§»ÍŸsd® v‹W«,
Ïjdhš khzt®fë‹ v®fhy« gh¡F« mgha«
V‰g£LŸsJ v‹W«, nj®¢Á é»j« fh£Ltj‰fhf,
விடைத்தாள் திருத்துவதில் தவறு - ஆசிரியர்களுக்கு அபராதம் , கர்நாடக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு தண்டனை, அபராதம் வழங்க, கர்நாடக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Friday, March 8, 2013
36 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி : தயார் நிலையில் வைக்க தேர்வுத்துறை உத்தரவு
பிளஸ் 2 விடைத் தாள் திருத்தும் பணிக்கு, 36 மையங்களை தயார் நிலையில் வைக்க, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மார்ச் 1ல், துவங்கிய பிளஸ் 2 தேர்வு, மார்ச், 27 ல், முடிகிறது. விடைத்தாள் திருத்தம் செய்யும் மையங்களுக்கு,..
Thursday, March 7, 2013
தேசிய அளவில் இலவச "ரோமிங்': அக்டோபருக்கு முன் அமலாகிறது!
மொபைல் போன் வாடிக்கையாளர்கள், நீண்ட நாட்களாக எதிர் பார்த்த, தேசிய ரோமிங் வசதியை, அக்டோபர் மாதத்திற்கு முன், அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.யின் புதிய தலைவராக நவநீத கிருஷ்ணன் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி., யின் புதிய தலைவராக அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த நடராஜின் பதவி காலம் 12ம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து புதிய தலைவராக நவநீத கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆன்லைன் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த திட்டம்
ஆன்லைன் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த திட்டமிட்டு, அதற்குரிய பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று டி.என்.பி.எஸ்.சி., தலைவர் ஆர். நட்ராஜ் கூறியுள்ளார்.
Wednesday, March 6, 2013
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பதவிக்காலம், 12ம் தேதியுடன் முடிகிறது.புதிய தலைவர் யார்... ஓரிரு நாளில் அறிவிப்பு?
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பதவிக்காலம், 12ம் தேதியுடன் முடிகிறது. எனவே, புதிய தலைவர் குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதிதாசன் பல்கலை: இளநிலை தேர்வு முடிவுகள்
தேர்வு முடிவுகளை காண இங்கே > கிளிக் செய்யவும்.
கடந்த நவம்பர் மாதத்தில் பி.ஏ, பி.ஏ., (சிபிசிஎஸ்), பிபிஏ, பிபிஏ.,(சிபிசிஎஸ்), பி.காம்.,(வங்கி மேலாண்மை) ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில்வெளியிட்டுள்ளன.
மறுமதிப்பீட்டுக்க விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தகவல்களை கேட்டறியலாம்.
11ம் தேதி முதல் நடக்க உள்ள, பிளஸ் 2 முக்கிய பாட தேர்வுகளை, கல்வித்துறை இயக்குனர்களும், நேரில் சென்று கண்காணிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
இயற்பியல் தேர்வு, 11ம் தேதி நடக்கிறது. 14ம் தேதி, கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் ஆகிய தேர்வுகள் நடக்கின்றன. 18ம் தேதி, வேதியியல் தேர்வும், 21ம் தேதி, உயிரியல், தாவரவியல் தேர்வும் நடக்கின்றன. 25ம் தேதி, "பயோ-கெமிஸ்ட்ரி&' தேர்வு நடக்கிறது.
கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் 26 மாதிரி பள்ளிகள்
மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக, கல்வியில் பின்தங்கியுள்ள, 26 ஒன்றியங்களில், 26 மாதிரிப் பள்ளிகள், வரும் கல்வி ஆண்டு முதல் செயல்பட உள்ளன. கட்டடப் பணிகள் இன்னும் துவங்காததால், தற்காலிகமாக, அரசுப் பள்ளிகளில், மாதிரிப் பள்ளிகள் இயங்கும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Tuesday, March 5, 2013
தமிழகத்தில் செயல்வழி கற்றல்: தமிழகத்தில் ம.பி குழு அதிகாரிகள் ஆய்வு
தமிழகத்தின் செயல் வழி கற்றல் முறையை, மத்திய பிரதேசத்தில் அமல்படுத்த, அம்மாநில அதிகாரிகள் குழு, இரண்டாம் கட்டமாக ஆய்வு செய்து உள்ளனர். மத்திய பிரதேசத்தில் கல்வித்துறையை மேம்படுத்த, செயல் வழி கற்றல்முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளனர்.
தொடக்க கல்வி, இரண்டாம் ஆண்டு பட்டயத் தேர்வில், 36.57 சதவீத தனி தேர்வர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தொடக்க கல்வி, இரண்டாம் ஆண்டு பட்டயத் தேர்வில், 36.57 சதவீத தனி தேர்வர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடக்கக் கல்வி, இரண்டாம் ஆண்டு தனித்தேர்வு மாணவர்களுக்கான பட்டயத் தேர்வு, சில மாதங்களுக்கு முன் நடந்தது. தேர்வுத்துறை நடத்திய இத்தேர்வில், 35,640 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு, 2ம் தேதி வெளியானது.
10ம் வகுப்பு தனி தேர்வு: 6,7ம் தேதிகளில்தத்கால் திட்டம் அறிவிப்பு
பத்தாம் வகுப்பு பொது தேர்வை, தனி தேர்வாக எழுத, ஏற்கனவே விண்ணப்பிக்க
தவறிய மாணவ, மாணவியர், தத்கால் திட்டத்தில், 6,7ம் தேதிகளில், இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.தேர்வுத்துறை அறிவிப்பு:
click here
click here
ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க வழக்கு மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.
கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க, ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சியளிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. தூத்துக்குடி டாக்டர் விஜயரங்கன் தாக்கல் செய்த பொது நல மனு:
Monday, March 4, 2013
காமராசர் பல்கலை: பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க மார்ச் 15 கடைசி
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட்., படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்டட விண்ணப்பங்களை மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Sunday, March 3, 2013
வேலைவாய்ப்பு அலுவலகங்களில், நிர்வாக காரணங்களுக்காக சான்றிதழ்கள் பதிவு செய்யும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக உள்ளதால், பதிவு, புதிப்பித்தல், முகவரி மாற்றும் மற்றும் விசாரணை குறித்த அனைத்து அலுவல்களும், பகல் 3 மணிக்குள் முடிக்கப்படும்.
அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், இந்த நேரத்தை கடை பிடிக்குமாறு, சென்னை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. எனவே பதிவு செய்ய வருவோர், பகல் 3 மணிக்கு முன்னரே வந்து விட வேண்டும்,என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், இந்த நேரத்தை கடை பிடிக்குமாறு, சென்னை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. எனவே பதிவு செய்ய வருவோர், பகல் 3 மணிக்கு முன்னரே வந்து விட வேண்டும்,என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட இருந்த பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டதால் திட்ட நிதி வீணாகும் அவலம்
தமிழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் கல்வி இயக்ககமும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஆசிரியர்களுக்கு பயிற்சி,...
Subscribe to:
Posts (Atom)