மொபைல் போன் வாடிக்கையாளர்கள், நீண்ட நாட்களாக எதிர் பார்த்த, தேசிய ரோமிங் வசதியை, அக்டோபர் மாதத்திற்கு முன், அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மொபைல் போன் வாடிக்கையாளர்கள், ஒரு தொலை தொடர்பு வட்டத்தில் இருந்து மற்றொரு தொலை தொடர்பு வட்டத்திற்கு, போகும்போது, உள்வரும் அழைப்பு களுக்கும், வெளியே செல்லும் அழைப்புகளுக்கும், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இது, "ரோமிங்' கட்டணம் என, அழைக்கப்படுகிறது. இந்த ரோமிங் கட்டணத்தை நீக்கி விட்டு, தேசிய அளவில், ஒரே விதமான கட்டணத்தை வசூலிக்க, மத்திய தொலைதொடர்பு ஆணையம் பரிந்துரை செய்து இருந்தது. குறிப்பாக, ஒரு வட்டத்தில்இருந்து, மற்றொரு வட்டத்திற்கு போகும்போது, உள் வரும் அழைப்பு களுக்கு கட்டணம் வசூலிப்பதை, முற்றிலும் நீக்கி விட முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், இது, எப்போது அமலுக்கு வரும் என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், டில்லியில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், ""தேசிய அளவில், ரோமிங்கை இலவச மாக்க, மத்திய தொலை தொடர்பு ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று, அக்டோபருக்கு முன் அமல்படுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment