பிளஸ் 2 விடைத் தாள் திருத்தும் பணிக்கு, 36 மையங்களை தயார் நிலையில் வைக்க, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மார்ச் 1ல், துவங்கிய பிளஸ் 2 தேர்வு, மார்ச், 27 ல், முடிகிறது. விடைத்தாள் திருத்தம் செய்யும் மையங்களுக்கு,..
அனைத்து விடைத்தாள்களும் வந்து சேர்ந்த பின், திருத்தும் பணி துவங்கும் தேதியை, தேர்வுத் துறை இயக்குனரகத்தால் அறிவிக்கப்படும். அதற்கு முன், விடைத்தாள் திருத்தம் செய்யும் மையங்களில், தடையில்லா மின்சாரம், குடி நீர், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் அனைத்தும், தயார் நிலையில் வைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், சென்னையில் மூன்று , மதுரை, திருச்சி, கோவையில் தலா இரண்டு, மற்ற மாவட்டங்களில் தலா ஒரு மையம் என, 36 மையங்களில், தேர்வு விடைத் தாள்கள் திருத்தம் செய்யப்படுகிறது.
மையங்களில், அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்கும்படி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment