உட்பிரிவுகளுடன் படிப்புகள்
தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகளில் பி.ஏ(ஆங்கிலம்) போன்று பி.ஏ(தொடர்பியல் ஆங்கிலம்), பி.ஏ(ஆங்கிலம் மற்றும் ஆங்கில தொடர்பியல்) போன்று பல்வேறு பிரிவுகளுடன் படிப்புகள் உள்ளன. இதே போன்று கணிதம், உயிரியல், தாவரவியல், பொருளாதாரம் போன்ற பல்வேறு பட்டப்படிப்புகள், மேற்படிப்புகள் பல்வேறு உட்பிரிவுகளுடன் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற உட்பிரிவுகளுடன் கூடிய படிப்புகளை முடித்தவர்கள் முக்கிய பாடப்பிரிவின் கீழ்(அதாவது பி.ஏ(ஆங்கிலம்), பி.எஸ்சி (கணிதம்)) படிப்பை மேற்கொள்ளவில்லை என்று கூறி அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்தது.
இதைத் தொடர்ந்து, 2012-ம் ஆண்டு அதுபோன்று உட்பிரிவுகளுடன் மேற்கொள்ளப்பட்ட படிப்புகளும், முக்கிய பாடப்பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட படிப்புகளும் சமமானவை தான் என்று அரசு உத்தரவிட்டது.

ஆனாலும், 2012-ம் ஆண்டுக்கு முன்பு உட்பிரிவுகளுடன் படிப்பை முடித்தவர்களுக்கு, முக்கிய பாடப்பிரிவின் கீழ் படிப்பை முடித்தவர்களாக கருதி வேலை வழங்கப்படாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
சரியான முடிவு
இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2012-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டாலும் 2012-ம் ஆண்டுக்கு முன்பு படிப்பை முடித்தவர்களுக்கும் அந்த அரசாணை பொருந்தும் என்று உத்தரவிட்டார். அதே வேளையில் 2012-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை, அரசாணை பிறப்பிக்கப்பட்ட தேதிக்கு பின்னர் படிப்பை முடித்தவர்களுக்குத்தான் பொருந்தும் என்று 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இதே பிரச்சினையுடன் கூடிய ஒரு வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதியின் உத்தரவு, 2 நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்சு தீர்ப்பு, அரசின் முடிவு ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டது. இதன்பின்பு, இந்த விவகாரத்தில் சரியான ஒரு முடிவு எடுப்பதற்காக 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு மூலம் விசாரிக்க தலைமை நீதிபதிக்கு, நீதிபதி எஸ்.நாகமுத்து பரிந்துரை செய்தார்.
அனைவருக்கும்பொருந்தும்
இதைத் தொடர்ந்து அந்த விவகாரம் தொடர்பாக முடிவு செய்ய நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வேணுகோபால், ராஜா ஆகியோரை கொண்ட நீதிபதிகளை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நீதிபதிகள் 3 பேரும் அமர்ந்து அந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்க விசாரணை நடத்தினர். உட்பிரிவுகளுடன் கூடிய பாடப்பிரிவில் படிப்பை முடித்தவர்கள் தரப்பில் வக்கீல்கள் சண்முகராஜாசேதுபதி, பாஸ்கர்மதுரம், ராஜேந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-
2012-ம் ஆண்டுக்கு முன்பு உட்பிரிவுகளுடன் கூடிய பாடப்பிரிவில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பை படித்தவர்கள் முக்கிய பாடப்பிரிவின் கீழ் படிப்பை முடித்தவர்களாக கருத முடியாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவதை ஏற்க முடியாது. 2 பாடப்பிரிவுகள் சமமானவை என்ற விவகாரத்தை பொறுத்தமட்டில் எப்போது படித்து இருந்தாலும் அதை சமமானதாகத்தான் கருத வேண்டும். எனவே, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளில் சில பாடப்பிரிவுகள் சமமானவை என்ற அரசாணை 2012-ம் ஆண்டுக்கு முன்பு படித்தவர்களுக்கும் பொருந்தும். எனவே, 2012-ம் ஆண்டுக்கு முன்பு உட்பிரிவுகளுடன் கூடிய பாடப்பிரிவுகளில் படிப்பை முடித்தவர்களுக்கு முக்கிய பாடப்பிரிவின் கீழ் அவர்கள் படிப்பை முடித்ததாக கருதி ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment