பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை கேட்கும் பல்வேறு புள்ளிவிவரங் களை தருவதிலேயே கவனம் செலுத்த வேண் டிய நிலை உள்ளதால் கற் பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது.
புதிய திட்டம்
பள்ளிக்கல்வித்துறை ஒவ் வொரு பள்ளியிலும் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர் களைப் பற்றிய விவரங்களை தொகுத்து வழங்க அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது. இந்த புள்ளி விவரங் களை தொகுத்து பட்டியல் தயாரிப்பதன் மூலம் எந்தெந்த பள்ளியில் மாணவர்களின் நிலை எவ்வாறு உள்ளது? அந்தப்பள்ளிக்குத் தேவை யான அடிப்படை வசதிகள், கல்வி உதவிப்பணம், இதர நிதி உதவிகள் ஆகியவற்றைக் கண் டறிந்து தேவையான நடவடிக் கையினை எடுக்க உதவுகிறது. இந்த புதிய திட்டத்தை பள் ளிக்கல்வித்துறை அறிமுகப் படுத்தியதன் நோக்கம் பள்ளிக ளில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம் படுத்தி கல்வித்தரத்தையும் உயர்த்த வேண்டும் என்பது தான்.
இதற்காக அனைத்துப்பள் ளிகளிலும் படிக்கும் மாணவ,மாணவிகளைப் பற்றி பல் வேறு புள்ளி விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கேட்டு உள்ளது. மாணவ, மாணவிக ளின் புகைப்படம், அவர்களது ரத்தப் பிரிவு, ஆதார் அடை யாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை ஆசிரியர்கள் கொடுக்க வேண்டியுள்ளது. மாணவ, மாணவிகளின் புகைப்படங்களை எடுப்ப தற்கோ அல்லது ஆன்-லைன் மூலம் புள்ளி விவரங்களை அனுப்பி வைப்பதற்கோ எந்த வித நிதி ஒதுக்கீடும் இல்லை. பல பள்ளிகளில் மாணவர்களி டமிருந்தே இதற்காக கட்ட ணம் வசூலிக்கப்படும் நிலை உள்ளது. வேறு சில பள்ளிகளில் ஆசிரியர்களே இச்செலவை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமும் உள்ளது. பள்ளிக் கல்வித்துறை இந்தப்பணியை முடிப்பதற்கு குறிப்பிட்ட காலக்கெடு விதித்திருந்தாலும் பணி முழுமையாக முடிவடை யாததால் கால அவகாசம் தொடர்ந்து நீட்டித்து தரப்படு கிறது.
பாதிப்பு
பள்ளிக் கல்வித்துறை இவ் வாறான பல்வேறு புள்ளி விவரங்களை அவ்வப்போது கேட்டு வருவதால் பள்ளித் தலைமையாசிரியர்களும்,ஆசிரியர்களும் பள்ளிக்கல்வித் துறை கேட்கும் புள்ளிவிவரங் களை தருவதிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதுடன்,கற்பித்தல் பணியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. அரசு அதிகாரிகளோ ஆசிரியர்களிடம் இந்தப்பணி யினை செய்ய முடியவில்லை என்றால் எழுதிக்கொடுத்து விட வேண்டியதுதானே என்று கேட்ட போதிலும், அரசுப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் அவ்வாறு எழுதிக் கொடுக்க முடியாமல் தவிப்புடன் இருந்து வருகின்றனர்.
கோரிக்கை
எனவே பள்ளிக்கல்வித்துறை பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகள் மற்றும் பள்ளியை பற்றிய புள்ளி விவரங்களை சேகரித்து அனுப்புவதற்கு என தனியே பணியாளர்களை நிய மிக்க வேண்டியது அவசியமா கும். இந்த புள்ளி விவரங்கள் மூலம் பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் கல்வித்தரத் தினை மேம்படுத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டாலும் கற்பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படும் போது மாண வர்களின் தேர்ச்சி சதவீ தமும் குறையும் நிலை ஏற்படும். எனவே இந்தப்பணிகளை செய்வதற்கு என தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு முடியாத பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையிலாவது இந்தப்பணிகளை மேற் கொள்ள வேண்டியது அவசிய மாகும்.
No comments:
Post a Comment