கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, November 27, 2013

    ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் "பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ., ஆங்கில பாடத்திற்கு இணையானது அல்ல" என நிராகரித்தார்-ஐகோர்ட்டில் 3 நீதிபதிகள் விசாரணை.

    பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ., ஆங்கிலத்திற்கு இணையானதா? என முடிவு செய்ய மதுரை ஐகோர்ட் கிளையில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்விசாரணையை துவக்கியது.கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் நாடார் தங்க சுபா லட்சுமண் ஏற்கனவே தாக்கல் செய்த மனு: 


    தமிழ்நாடு திறந்தவெளி பல்கலையில், பி.ஏ., (ஆங்கில தொடர்பியல்)2011 ல் தேர்ச்சி பெற்றேன். இது பி.ஏ., ஆங்கிலத்திற்கு இணையானது என பல்கலை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. பி.எட்.,தேர்ச்சியடைந்தேன். 2012 அக்.,14 ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தேன்.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைத்தனர். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் "பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ., ஆங்கில பாடத்திற்கு இணையானது அல்ல" என நிராகரித்தார். இதை ரத்து செய்ய வேண்டும்." இவ்வாறு குறிப்பிட்டார்.


    நீதிபதி எஸ்.நாகமுத்து உத்தரவு:


    "கீதா என்பவர் எம்.எஸ்.சி.,(கணித பொருளாதாரம்)படித்திருந்தார். அதை எம்.ஏ.,(பொருளாதாரம்) பட்டத்திற்கு இணையாக கருதி ஆசிரியர்பணி (2011-12) வழங்க உத்தரவிட வேண்டும் என, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.அரசுத்தரப்பில் "எம்.எஸ்.சி.,(கணித பொருளாதாரம்) எம்.ஏ., (பொருளாதாரம்) பட்டத்திற்கு இணையானது அல்ல என 1974 ல் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு செய்தவல்லுநர் குழு "எம்.எஸ்.சி., (கணிதபொருளாதாரம்) எம்.ஏ.,(பொருளாதாரம்) பட்டத்திற்கு இணையானது" என 2013 ஏப்.,30 ல் தெரிவித்தது.பெஞ்ச், "மனுதாரர் 2011-12க்கு ஆசிரியர் பணி கோர முடியாது. எதிர்காலத்தில் பணி வாய்ப்பு கோரலாம்" என உத்தரவிட்டது. இரு பட்டங்களும் இணையானது எனில் பட்டம் வாங்கிய தேதியிலிருந்து அவை செல்லுபடியாகும். எனவே, பெஞ்ச் உத்தரவிலிருந்து மாறுபடுகிறேன். பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ.,ஆங்கில பாடத்திற்கு இணையானதா? என ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குழு அமைக்க வேண்டும். அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதை கூடுதல் நீதிபதிகள் விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன்" என்றார்.


    இம்மனு மற்றும் வேறு சில பாடப்பிரிவுகள் தொடர்பான மனுக்கள் நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், எம்.வேணுகோபால், டி.ராஜா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தன. விசாரணையை நீதிபதிகள் இன்று (நவ.,27) ஒத்திவைத்தனர்.

    No comments:

    Post a Comment