கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

Follow my Email

 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • Wednesday, January 22, 2014

  2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற ரிசர்வ் வங்கி அதிரடி

  கடந்த, 2005ம் ஆண்டிற்கு முன் வெளியிடப்பட்ட, அனைத்து கரன்சிகளும், திரும்ப பெறப்படும்," என, ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


  இது குறித்து, ரிசர்வ் வங்கி, அதன் வலைதளத்தில் தெரிவித்துள்ள விவரம்:கடந்த, 2005ம் ஆண்டிற்கு முன், ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட கரன்சிகள், திரும்பப் பெறப்படும். இது குறித்து யாரும் பீதியடைய வேண்டாம். இந்த கரன்சிகளை, எளிதில் கண்டறியலாம். ஏனெனில், 2005ம் ஆண்டிற்கு முன், வெளியிடப்பட்ட கரன்சிகளில், ஆண்டு அச்சிடப்பட்டிருக்காது. இந்த கரன்சிகளை, அனைத்து வங்கிகளும், வரும் ஏப்ரல், 1ம் தேதி முதல் திரும்பப் பெறும்.
  வரும், ஜூலை, 1ம் தேதி முதல், வங்கி கணக்கு இல்லாதோர், 10க்கு மேற்பட்ட எண்ணிக்கையில், 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் கரன்சிகளை மாற்ற விரும்பினால், அடையாளம் மற்றும் வசிப்பிட சான்றை, வங்கிக்கு அளிக்க வேண்டும்.அதே சமயம், 2005ம் ஆண்டிற்கு முன் வெளியிடப்பட்ட கரன்சிகளும், வழக்கம் போல் செல்லுபடியாகும். இது குறித்து பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. கரன்சியை திரும்பப் பெறும் திட்டத்திற்கு, முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பெயர் வெளியிட விரும்பாத ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது புழக்கத்தில் உள்ள கரன்சிகள் அனைத்தும், ஆண்டு அச்சிடப்பட்டவையாக இருக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி விரும்புகிறது. 2005ம் ஆண்டிற்கு முன் வெளியிடப்பட்ட, 500 ரூபாய் கரன்சிகள், நீலம், மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் உள்ளன.அதன் பின், மகாத்மா காந்தி படத்துடன், ஒரே வரிசையில் கரன்சிகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும், ஒரே சீரான வடிவமைப்பில், இது போன்ற கரன்சிகள் புழக்கத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

  *மக்கள் பீதி அடைய வேண்டாம்.
  *ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கரன்சிகள் செல்லுபடியாகும்.
  *வரும், ஏப்., 1 முதல் அனைத்து வங்கிகளிலும் வசதி.

  Click Here

  No comments:

  Post a Comment