கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

Follow my Email

  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Thursday, January 30, 2014

    மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வது எப்படி?

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும். 


    கடைசியாக கடந்த 2013 ஜூலை முதல் 80 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 10 சதவீதம் அதிகரித்து தற்போது 90 சதவீதமாக இரு அரசு ஊழியர்களும் பெற்று வருகின்றனர். இனி 2014 ஜனவரி மாத அடிப்படையில் அகவிலைப் படியை அறிவிக்க வேண்டும். இதன்படி இம்மாத இறுதியில், நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் அடிப்படையில், மத்திய அரசு 10 அல்லது 11 சதவீத அகவிலைப்படியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தொகையை ஜனவரி முதல் நிலுவையாக வைத்து வழங்கும். இதையடுத்து மாநில அரசும் அகவிலைப்படி உயர்வை மார்ச்சில் அறிவித்து, ஏப்ரலில் 3 மாத நிலுவையுடன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . அகவிலைப்படி கணக்கீடு எப்படி: ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் அரசு அறிவிக்கும் அகவிலைப்படி கணிசமான தொகையாக கிடைக்கிறது. இதை நிர்ணயிப்பதற்கென ஒரு பார்முலா உள்ளது. அதனடிப்படையில் கணக்கிட்டு 6 மாதங்களுக்கு ஒருமுறை அடிப்படை சம்பளம் வழங்குகின்றனர். கடந்த 12 மாதத்தில், தேசிய அளவிலான நுகர்வோர் விலைப்புள்ளியின் சராசரியை கணக்கிட்டு, அதில் 115.76 என்ற நிர்ணயிக்கப்பட்ட ஒரு எண்ணை கழிக்கின்றனர். அதில் கிடைக்கும் எண்ணை 100 ஆல் பெருக்குவர். அத்தொகையை மீண்டும் 115.76ஆல் வகுப்பர். இதையே, அகவிலை படியாக கணக்கிடுகின்றனர். இதுவே அகவிலைப்படி கணக்கிடும் முறை.

    No comments:

    Post a Comment