கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, November 29, 2013
எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்கு ரூ.136 கோடி நிதி ஒதுக்கீடு : மத்திய அரசு
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்காக (எஸ்.எஸ்.ஏ.,) மத்திய அரசு ரூ.136 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலத்தில், 2002 முதல் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. நடப்புக் கல்வியாண்டில், இத்திட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பொது கழிப்பறைகள் கட்டுதல், மாணவிகளுக்கு தனிக் கழிப்பறைகள், பள்ளிகளில் குடிநீர் வசதிகள் மேற்கொள்ள ரூ.44.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் முடிவுயும் நிலையில் உள்ளன.
தமிழ் ஆசிரியர்கள் இனி பட்டதாரி தமிழாசிரியர்கள்: அரசு உத்தரவு
தமிழ் பண்டிட் என அழைக்கப்பட்ட தமிழாசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என்றே அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில், 1988ல் உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட தமிழாசிரியர்கள், 2000ல் பட்டதாரி தமிழாசிரியர்கள் என, அழைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் அரசாணை, 263ன் படி தமிழாசிரியர்கள், தமிழ் பண்டிட் என, அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டது.
பட்டப்படிப்புகளில் சில பாடப்பிரிவுகள் சமமானவை’ என்ற அரசாணை 2012-ம் ஆண்டுக்கு முன்பு படித்தவர்களுக்கும் பொருந்தும் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு
பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளில் சில பாடப்பிரிகள் சமமானவை என்ற அரசாணை 2012-ம் ஆண்டுக்கு முன்பு படித்தவர்களுக்கும் பொருந்தும் என்று 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு கூறி உள்ளது.
திறந்தநிலை பட்டங்கள் நிலை: மீண்டும் தெளிவுபடுத்திய யு.ஜி.சி
தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி முறையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும் பட்டங்களுக்கு சமமானது என, யு.ஜி.சி., மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.
Wednesday, November 27, 2013
புள்ளிவிவரங்களிலேயே ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டிய நிலை கற்பித்தல் பணியில் பாதிப்பு
பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை கேட்கும் பல்வேறு புள்ளிவிவரங் களை தருவதிலேயே கவனம் செலுத்த வேண் டிய நிலை உள்ளதால் கற் பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது.
பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி
ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர்.
10 ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு : டிச., 3 ல் சென்னையில் ஆலோசனை
10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் டிச.,3ல் நடக்கிறது,'' என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
பீகாரில், ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் 10 ஆயிரம் ஆசிரியர் பெயில் : நடவடிக்கைக்கு பீகார் மாநில அரசு தயார்
பீகாரில், ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், 10 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்காக மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும். அதிலும், தேர்ச்சி அடையாவிட்டால், பணியில் இருந்து, அவர்கள், 'டிஸ்மிஸ்' செய்யப்படுவர் என, அம்மாநில கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் "பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ., ஆங்கில பாடத்திற்கு இணையானது அல்ல" என நிராகரித்தார்-ஐகோர்ட்டில் 3 நீதிபதிகள் விசாரணை.
பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ., ஆங்கிலத்திற்கு இணையானதா? என முடிவு செய்ய மதுரை ஐகோர்ட் கிளையில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்விசாரணையை துவக்கியது.கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் நாடார் தங்க சுபா லட்சுமண் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:
கூரை, ஓடுவேய்ந்த கட்டிடங்கள் கட்டக்கூடாது பள்ளிகளுக்கு நிபந்தனைகள் கடுமையாகிறது
தமிழகத்தில் செயல்படுகின்ற சிறுபான்மை, சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு உயர்நிலை பிரிவுகள் 6 முதல் 10 மற்றும் மேல்நிலை பிரிவுகள் 11, 12 வகுப்புகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம், ஆரம்ப அங்கீகாரம் கோருகின்ற கருத்துருக்களை பரிசீலனை செய்து ஆணை வழங்கும் வகையில் சிறப்பு முகாம் சென்னையில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட அரங்கில் விரைவில் நடைபெற உள்ளது.
Tuesday, November 26, 2013
அரசு பள்ளிகளில் 6,545 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை உத்தரவு
எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் நலன் கருதி 6 ஆயிரத்து 545 தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமித்துக் கொள்ள கல்வித்துறை முதன்மை செயலாளர்சபீதா உத்தரவிட்டுள்ளார்.
Saturday, November 23, 2013
2 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும், ஒரு முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாறுதலும் வழங்கி உத்தரவு
ஈரோடு மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி அவர்கள் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.கலாவதி அவர்கள் பெரம்பலூர் மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேரன்மாதேவி மாவட்ட கல்வி அலுவலர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேரன்மாதேவி மாவட்ட கல்வி அலுவலர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Friday, November 22, 2013
எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.
8–வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 9–வது முதல் பிளஸ்–2வரை உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது. இந்த திட்டம்
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் என்று அழைக்கப்படுகிறது. உதவித்தொகை வழங்குவதற்காக தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு கடந்த2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.இந்த தேர்வை 7 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வுக்கான முடிவுகள் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வாளர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tndge.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் என்று அழைக்கப்படுகிறது. உதவித்தொகை வழங்குவதற்காக தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு கடந்த2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.இந்த தேர்வை 7 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வுக்கான முடிவுகள் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வாளர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tndge.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம் - 27 - கேள்விகட்கு தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் பதில்களும்
தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் பதில்கள்
பணியில் சேர்ந்து 5 ஆண்டு ஆன அரசு பணியாளர்கள் TNPSC தேர்வு எழுத முடியாது
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த சில மாதங்களுக்குமுன்பு குரூப் 2 தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கான எழுத்துதேர்வு வரும் டிச. 1ல் நடைபெற உள்ளது. தேர்வாணையத்தின் இணையதளத்திற்குசென்று தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை
தெரிந்து கொள்ளும் வசதி முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
தெரிந்து கொள்ளும் வசதி முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
Thursday, November 21, 2013
Wednesday, November 20, 2013
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2014- ம் ஆண்டு வரும் பண்டிகைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் அரசு விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2014-ம் ஆண்டு 21 நாட்கள் விடுமுறை நாட்களாகஅரசு அறிவித்து உள்ளது. அரசு விடுமுறை நாட்கள் ஒரு சில
ஞாயிற்றுக்கிழமைகளிலும் வருவதால் அரசு விடுமுறை நாட்களின்
எண்ணிக்கை குறைந்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் வருவதால் அரசு விடுமுறை நாட்களின்
எண்ணிக்கை குறைந்துள்ளன.
EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 30KB அளவுக்கு மாற்றம் செய்ய எளிய வழி
EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 200 க்கு 200 PIXEL மற்றும் 30KB அளவுக்கு மாற்றம் செய்ய அதிகம் நேரம் செலவாகிறது. போட்டோஷாப் மென்பொருளில் இதை எளிமையாகச் செய்ய ஒரு வசதி இருக்கிறது. முதலில் டெஸ்க்டாப்பில் EMIS, EMIS RESIZE என இரண்டு போல்டர்களை உருவாக்கிக் கொள்ளவும். EMIS எனும் போல்டரில் மாற்றம் செய்யப்பட
வேண்டிய போட்டோக்களை வைத்துக் கொள்ளவும். போட்டோஷாப்பை ஓப்பன் செய்து அதில் உள்ள OPEN வழியாக EMIS போல்டரில் உள்ள ஏதேனும் ஒரு போட்டோவைத் திறக்கவும். பின்பு
வேண்டிய போட்டோக்களை வைத்துக் கொள்ளவும். போட்டோஷாப்பை ஓப்பன் செய்து அதில் உள்ள OPEN வழியாக EMIS போல்டரில் உள்ள ஏதேனும் ஒரு போட்டோவைத் திறக்கவும். பின்பு
சொந்த மாவட்டத்தில் பணியாற்ற முன்னுரிமை: மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு சலுகை
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மற்றும் ஆசிரியர் பணியினை அவர்களது சொந்த மாவட்டங்களிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பணியிட மாற்றத்துக்கு ஒற்றைச் சாளர முறையைப் பின்பற்றும்போது மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இடை நிலை ஆசிரியர்களுக்கு நாளை, சான்றிதழ் சரிபார்ப்பு.நாளிதழ் செய்தி வெளியிடு.
TET தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நாளை வேலைவாய்ப்பு பதிவு விவரம் சரிபார்ப்பு
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெறாத ஆசிரியர்களை நீக்கம் செய்ய ஐகோர்ட் அதிரடி தடை - தினகரன் செய்தி
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் தமிழக அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.பணி நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுக்குள் தகுதி தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) அமைப்பின் இன்றைய முக்கிய தீர்மானங்கள்
1. டிட்டோஜேக் கூட்டமைப்பு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தை 04.12.2013 புதன் அன்று மாலை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுவதெனவும்..,
2. மாவட்ட அமைப்பாளராகப் பொறுப்பெற்று கூட்டமைப்பை ஒருங்கிணைத்து வழிநடத்திட சங்க வாரியாக கீழ்கண்ட மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு
1. ஆறாவது ஊதிய குழுவில் நடுவனரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியத்தை தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.01.2006 முதல் தமிழக அரசும் வழங்கிட வேண்டும்.
2. மாவட்ட அமைப்பாளராகப் பொறுப்பெற்று கூட்டமைப்பை ஒருங்கிணைத்து வழிநடத்திட சங்க வாரியாக கீழ்கண்ட மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு
1. ஆறாவது ஊதிய குழுவில் நடுவனரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியத்தை தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.01.2006 முதல் தமிழக அரசும் வழங்கிட வேண்டும்.
டிட்டோஜேக் - ஏழு சங்கங்களுக்கும் மாவட்டங்கள் ஒதுக்கீடு
மாவட்டப்பங்கீடு விவரம்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
நாமக்கல்,ஈரோடு,திருப்பூர்,மதுரை,மற்றும் சென்னை ஆகிய 5 மாவட்டங்கள்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை,தர்மபுரி, இராமநாதபுரம்,பெரம்பலூர்,திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்கள்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
நாகை,திருவாரூர்,கிருஷ்ணகிரி,திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள்
தமிழக ஆசிரியர் கூட்டணி
அரியலூர்,திண்டுக்கல்,சேலம்,நீலகிரி,கோவை ஆகிய 5 மாவட்டங்கள்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
தேனி,காஞ்சிபுரம்,விருதுநகர்,தூத்துகுடி, கன்யாகுமரி ஆகிய 5 மாவட்டங்கள்
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
தஞ்சாவூர்,திருச்சி,புதுக்கோட்டை,கரூர் ஆகிய 4 மாவட்டங்கள்
தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்
திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம்,கடலூர் ஆகிய 4 மாவட்டங்கள்
மாவட்டப்பங்கீடு விவரம்
Tuesday, November 19, 2013
10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை தொடக்கக்கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்களிலும் கோரியுள்ளது
10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை தொடக்கக்கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்களிலும் கோரியுள்ளது.மாணவர் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணத்தையும் மற்றும் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் தகவல்கள் கோரப்பட்டுள்ளது.
அரசு பள்ளிக்கூடங்களில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திடீர் ஆய்வு
தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேசுவரமுருகன் நேற்று மதுரையில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் நூலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
2014 ஆம் ஆண்டுக்குறிய மாநில அரசின் பொது விடுமுறைக்கான அரசானை-தமிழக அரசு வெளியீடு
2013 - நவம்பர் மாதம் கீழ்கண்ட நாட்களில் தினங்கள் கொண்டாட உத்தரவு பிறப்பித்துள்ளார்
click here to download தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்
நவம்பர் -19-தேசிய ஒருமைப்பாட்டு தினம் நவம்பர்- 20-சிறுபான்மையினர் நல தினம் நவம்பர்-21-மொழி இணக்க தினம் நவம்பர்- 22-நலிவடைந்தோர் தினம் நவம்பர்- 23-கலாச்சார ஒற்றுமை தினம் நவம்பர்- 24-பெண்கள் தினம் நவம்பர்- 25-பாதுகாப்பு தினம் .
Monday, November 18, 2013
1,093 உதவி பேராசிரியர் பணியிடம் : சான்றிதழ் சரிபார்ப்பு, 25ம் தேதி துவக்கம்
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்ககான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 25ம் தேதி முதல் துவங்குகிறது.
சிறப்பு நிலை ஊதியம் கோரிய ஆசிரியர்கள் மனுக்கள் தள்ளுபடி
துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதியத்தை தங்களுக்கும் வழங்கக் கோரி, ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 128 பேர் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2013-14 ஆண்டிற்காண வருமானவரி கணக்கிடும் முறை
click here to download வருமானவரி கணக்கிடும் எக்ஸ்.எல். படிவம் பெற கிளிக் செய்க.
வருமான வரி கணக்கிடும் எக்செல் தொகுப்பினைப் பயன்படுத்த முனைந்தமைக்கு நன்றி!
1. ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனி எக்செல் ஃபைல் கையாளுவது நலம்.
2. அனைத்து விபரங்களையும் உள்ளீடு செய்த பிறகு உங்கள் வருமான வரிப் படிவம் ஒரு வேர்ட் ஃபைலாக டெஸ்க்டாப்பில் சேமிக்கப்படும்.
3. Form-16 ஐயும் பிரிண்ட் எடுக்க இயலும்.
நன்றி - கல்வி செய்தி
நவம்பர் 19ஆம் தேதி தேசிய ஒருமைப்பாடு தினமாக கடைபிடிக்க உத்தரவு - தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி
தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி
நாட்டின் சுதந்திரம், ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காக்கவும் வலுப்படுத்தவும் என்னை அர்ப்பணித்துச் செயல்படுவேன் என்று மனமார உறுதி கூறுகிறேன்.
நான் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடமாட்டேன் என்றும், மதம், மொழி, வட்டாரம் மற்றும் அரசியல் அல்லது பொருளாதார பேதங்களுக்கு அமைதியான முறையிலும் அரசியல் சட்டத்திற்குட்பட்டும் தீர்வு காணத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் நான் மேலும் உறுதி கூறுகிறேன்.
Tuesday, November 12, 2013
கோர்ட் அவமதிப்பு வழக்கு பள்ளிக்கல்வி செயலர் ஆஜர்
ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்குவதை தாமதப்படுத்துவதாக, தாக்கலான அவமதிப்பு வழக்கில், பள்ளிக்கல்வி செயலர் சபீதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார். .
Monday, November 11, 2013
மொஹரம் விடுமுறை 14ஆம் தேதிக்கு பதிலாக 15ஆம் தேதிக்கு மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 14ம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறை தென்படாததால் நவம்பர் 15ம் மொஹரம் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதனால் 14ஆம் தேதிக்கு பதிலாக 15ஆம் தேதிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Saturday, November 9, 2013
முதலமைச்சரை சந்திக்க முடிவு.இன்று ( 9.11.2013 ) டிட்டோ-ஜாக் கூட்டத்தில் உடன்பாடு
இன்று சென்னையில் கூடிய டிட்டோ-ஜாக் கூட்டத்தில் அதன் உறுப்பைச் சார்ந்த 7 இயக்கங்களும் பங்கேற்றன. இக்கூட்டத்தில்
1. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம்
2. தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் இரத்து
ஆகிய இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்க நடவடிக்கை மேற்கொள்வதென முடிவாற்றப்பட்டது.
1. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம்
2. தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் இரத்து
ஆகிய இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்க நடவடிக்கை மேற்கொள்வதென முடிவாற்றப்பட்டது.
சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்
அ) சில சிறப்பு காரணங்களுக்காக இவ்விடுப்பு வழங்கப்படுகிறது. இதனை ஈட்டிய விடுப்பு / ஈட்டா விடுப்புகளுடன் சேர்த்துத் துய்க்கலாம்.
ஆ) குடும்ப நலத்திட்ட அறுவை மருத்துவம் செய்து கொள்பவரின் கணவருக்கு அறுவை மருத்துவம் நடந்த நாள் முதல் ஏழு நாள்கள் வழங்கப்படும்.
இ) குடும்ப நலத்திட்ட அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் ஆண் ஆசிரியருக்கு 8 நாள்களும் பெண் ஆசிரியருக்கு 20 நாட்களும் வழங்கப்படும். ஆனால் மகப்பேறு காலத்தில் அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் பெண் ஆசிரியர்க்கு இவ்விடுப்பு கிடைக்காது.
ஈ) நாடளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவோருக்கு 30 நாட்கள் வரையில் இவ்விடுப்பு வழங்கப்படும்.
உ) நாய் கடித்தவருக்கு ஏற்பளிக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவம் செய்து கொள்ள இவ்விடுப்பு கிடைக்கும்.
ஊ) ஊர்க்காவல் படையில் பணிபுரிவோருக்கு அப்பணியில் ஈடுபடுத்தப்படும் காலத்திற்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு
ஆ) குடும்ப நலத்திட்ட அறுவை மருத்துவம் செய்து கொள்பவரின் கணவருக்கு அறுவை மருத்துவம் நடந்த நாள் முதல் ஏழு நாள்கள் வழங்கப்படும்.
இ) குடும்ப நலத்திட்ட அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் ஆண் ஆசிரியருக்கு 8 நாள்களும் பெண் ஆசிரியருக்கு 20 நாட்களும் வழங்கப்படும். ஆனால் மகப்பேறு காலத்தில் அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் பெண் ஆசிரியர்க்கு இவ்விடுப்பு கிடைக்காது.
ஈ) நாடளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவோருக்கு 30 நாட்கள் வரையில் இவ்விடுப்பு வழங்கப்படும்.
உ) நாய் கடித்தவருக்கு ஏற்பளிக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவம் செய்து கொள்ள இவ்விடுப்பு கிடைக்கும்.
ஊ) ஊர்க்காவல் படையில் பணிபுரிவோருக்கு அப்பணியில் ஈடுபடுத்தப்படும் காலத்திற்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு
தகுதி அடிப்படையில் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம்.
பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இறந்தால், அவர்களது வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
SASTRA பல்கலைக்கழகம் B.Ed (JAN2014-DEC2015) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ....B.Ed (Distance Mode) Advt. and Prospectus 2014 -2015
CLICK HERE TO DOWNLOAD ... ~ B.Ed Prospectus Download
LAST DATE DECEMBER - 31 ST - 2013......APPLICATION COST RS.600/- POSTAL APPLICATION COST RS.650/-
Friday, November 8, 2013
ஆசிரியர்களின் வருகையை தெரிவிக்கும் எஸ்.எம்.எஸ்., திட்டம், மாநில அளவில் செயல்படுத்தப்படும் - பள்ளிக்கல்வி இயக்குனர்
கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம் இம்மாத இறுதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்" என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை
ஆசிரியர் தகுதித் தேர்வு: இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வருகிறது மாற்றம்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் செய்யும் முறை இந்த ஆண்டு மாறலாம் எனத் தெரிகிறது.
Tuesday, November 5, 2013
ஆசிரியர் தகுதி தேர்வு - தேர்ச்சி சதவீதம்
>Paper I - 12596 person passed which is 4.80% in 262187 canditates
>paper II -14496 person passed 3.62%
பள்ளியில் பிரார்த்தனையின்போது கை கூப்பி நிற்கும்படியோ அல்லது கை கட்டி நிற்கும்படியோ கட்டாயப்படுத்த முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக உள்ளவர் சஞ்சய் சால்வே. இவர் புத்த மதத்தை பின்பற்றுபவர். காலையில் பள்ளிப் பிரார்த்தனையின்போது இவர் கைகூப்பாமல் நின்றார். மேலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும்போது தனது கையை முன்புறம் நீட்ட மறுத்தார்.
மாதந்தோறும் 1 முதல் 4 வகுப்புகளில் நடைபெறும் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் முறையையும் (SABL) மற்றும் 6 முதல் 8 வகுப்புகள் வரை நடைபெறும் படைப்பாற்றல் கற்றல் முறையையும் (ALM) ஆசிரிய பயிற்றுனர்கள் பார்வையிட்டு (A,B,C,D) என தரமிட்டு வட்டார மற்றும் மாவட்ட அளவில் பராமரிக்க மாநில திட்ட இயக்ககம் உத்தரவு
கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள்: தமிழக அரசு புதிய உத்தரவு
அரசுத் துறைகளில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வரன்முறைப்படுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களின் எண்ணிக்கையை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)