மத்திய அரசு ஊழியர்களை போல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும என்று தமிழக அரசுஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.
இதனால் ஏற்கனவே பெற்று வந்த 90 சதவீத அகவிலைப்படியுடன் 10 சதவீதம் புதியதாக வழங்கப்பட்டு மொத்தம் 100 சதவீத அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட்டது, அதற்கான் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசை போல் மாநில அரசு ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரிய சங்கங்கங்கள் கோரிக்கைகளை விடுத்து வருகின்றன. ஆனால் இதுவரை மாநில அரசு இதுதொடர்பாக உத்தரவு ஏதும் பிறப்பிக்காததால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, மத்திய அரசு ஊழியர்களை போல் மாநில அரசு ஊழியர்களுக்கும் 10 சதவீத அகவிலைப்படி உயர்வை கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு மொத்தம் 100 சதவீத அகவிலைப்படி வழங்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் விரும்புகின்றனர்.
செய்தி பகிர்வு : தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
No comments:
Post a Comment