தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன், நேற்று மாலை, நிருபர்களிடம் கூறியதாவது: 12.22 லட்சம் பேர் கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 25ல், குரூப் - 4 தேர்வு நடந்தது. இதில், 12.22 லட்சம் பேர் பங்கேற்றனர். முதலில், 5,566 காலி பணியிடங்களை, அரசு வழங்கி இருந்தது. பின், கூடுதலாக சில இடங்களை ஒப்படைத்தது. இதனால், 5,855 இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. தேர்வு முடிவு, இன்று மாலை (நேற்று), www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சிக்குரிய குறைந்தபட்ச மதிப்பெண், 90 மற்றும் அதற்கு அதிகமாக மதிப்பெண் பெற்ற, 11.55 லட்சம் தேர்வர்களின் மதிப்பெண், தர வரிசை அடிப்படையில், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்த, "ரேங்க்' இட ஒதுக்கீடு வாரியான, "ரேங்க்' மற்றும் சிறப்பு பிரிவினருக்கான, "ரேங்க்' என, மூன்று பிரிவுகளில், "ரேங்க்' பட்டியலை வெளியிட்டு உள்ளோம். தேர்வர்கள், பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை, இணையத்தில் பதிவு செய்தால், மதிப்பெண், "ரேங்க்' விவரங்களை தெரிந்து கொள்ளலாம். தேர்வெழுதிய, 12.22 லட்சம் பேருக்கும், மதிப்பெண் வெளியிடப்பட்டு உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு : ஆனால், 90 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கியவர்களுக்கு மட்டும், தர வரிசை எண் (ரேங்க்) வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு, மதிப்பெண் மட்டும் கிடைக்கும். வரும், 24 முதல், தேர்வாணைய அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அதற்கு, தினமும், 300 பேர் அழைக்கப்படுவர். அழைப்பு கடிதமும், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தபால் மூலமும் அனுப்பப்படும். முதல் நாள் சான்றிதழ் சரிபார்ப்பு, இரண்டாவது நாள், கலந்தாய்வு நடத்தி, தேர்வு பெற்றதற்கான உத்தரவு வழங்கப்படும். மே மாதம் நடக்க உள்ள, குரூப் - 2 தேர்வுக்கு, 6 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவ்வாறு, நவநீதகிருஷ்ணன் கூறினார். தேர்வாணைய செயலர், விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா, ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment