வரும் லோக்சபா தேர்தலில் வோட்டு போடும் நேரத்தை அதிகரிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. வோட்டு போடுவதற்கு நாடு முழுவதற்கும் இரண்டு மணி நேரம் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நேர அதி்கரிப்பு நக்சல் தாக்குதல் மாநிலங்களு்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நேரம் அதிகரிப்பு: நாடு மழுவதும் நடைபெற உள்ள பொது தேர்தல் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி துவங்கி மே மாதம் 12-ம் தேதிவரை நடைபெற உள்ளது. பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலில் வழக்கத்தை விட கூடுதலாக இரண்டு மணி நேரம் வோட்டு போடுவதற்கு தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பி்ததுள்ளது.
தற்போது காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே வோட்டு போடும் நேரமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்த தேர்தலில் ஓட்டு போடுவோரின் எண்ணி்க்கை அதிகரித்து காணப்படுவதாலும், தேர்தல் நேரம் கோடை காலமாக இருப்பதால் மக்கள் வோட்டு போடுவதற்கு மாலை நேரத்தை தான் தேர்ந்தெடுப்பர் என்ற நோக்கத்தி்ன் அடிப்படையிலும் கூடுதல்நேரத்தை வழங்கியுள்ளதாகவும் , வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால் வோட்டு போடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு, மற்றும் வோட்டு போடுவதற்காக நீண்ட நேரம் காத்திருப்பது, வோட்டு பதிவின் சதவீதம் அதிகரித்திருப்பது போன்றவை காரணங்களாக கருத்தி்ல கொண்டு கூடுதல் நேரம் வழங்கப்பட்டிருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதன்படி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வோட்டு பதிவு நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் கமிஷன் வி.எஸ் சம்பத் தலைமையில் கூடிய கூட்டத்தில் எச்.எஸ் பிரம்மா, மற்றும் நசீம் சைடி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இந்த கூடுதல் நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலின் போது 71.3 கோடி பேர் வோட்டு பதிவு செய்தனர். இந்த தேர்தலில் கூடுதலாக 10 கோடி பேர் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment