கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Saturday, March 8, 2014

    பள்ளிக்கல்விக்கு துறை. 6,7,8,9.வகுப்புகளுக்கு், ஏப்ரல் 3முதல் 16 வரை தேர்வு நடைபெறும் பள்ளிக்கல்வி அறிவிப்பு

     
    தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேர்வுகள் தொடர்பாக வரும் திங்கள்கிழமை முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


    மக்களவைத் தேர்தலையடுத்து, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தவிர மீதமுள்ள 6,7,8,9, 11 ஆகிய வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்.

    பிளஸ் 2 தேர்வு மார்ச் 25-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 3 முதல் 16-ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதேபோல், ஏப்ரல் 22-ஆம் தேதிக்குப் பிறகு இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, ஏப்ரல் கடைசியில்தான் பள்ளித் தேர்வுகள் நிறைவுபெறும்.

    தேர்தல் வாக்குப்பதிவையடுத்து இந்த ஆண்டு சில தினங்கள் முன்கூட்டியே தேர்வுகள் முடிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேர்வுகள் தொடர்பாக திங்கள்கிழமை முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஓரிரு நாளில் கட்டணம் வழங்கப்படும்: பிளஸ் 2 விடைத்தாள்கள் இந்த ஆண்டு தேர்வு மையங்களிலிருந்து அரசு சார்பில் பணியமர்த்தப்படும் வாகனங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.

    இதற்கான கட்டணம் ஓரிரு நாளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் சார்பில் பிளஸ் 2 விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பான மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் பேசிய தேர்வுத்துறை அதிகாரிகள், விடைத்தாள்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கான கட்டணம் வழங்குவது தொடர்பான பரிந்துரை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் ஓரிரு நாளில் இதற்கான தொகை திருப்பி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    பள்ளிகளின் மூலம் 8.26 லட்சம் பேரும், தனித்தேர்வர்களாக 53 ஆயிரம் பேரும் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். இவர்களின் விடைத்தாள்களைத் திருத்துவதற்காக, மாநிலம் முழுவதும் 66 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பிளஸ் 2 விடைத்தாள்களை மார்ச் 20-ஆம் தேதிக்குப் பிறகு மதிப்பீடு செய்ய ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது

    No comments:

    Post a Comment