சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பினருக்கு நடந்து முடிந்த, இயற்பியல் தேர்வுக்கான, மூன்று வினாத்தாள், தேர்வுக்கு முன்பே இன்டர்நெட்டில் வெளியானதாக, "பகீர்' தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த, 3ம் தேதி முதல், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு துவங்கிய நிலையில், 5ம் தேதி, இயற்பியல் தேர்வு நடந்தது. மணிப்பூர் மாநிலத்தில், இயற்பியல் தேர்வுக்கான வினாத்தாள், தேர்வுக்கு, மூன்று நாட்களுக்கு முன்பே, இணையதளம் மற்றும் "பேஸ்புக்' மூலம் வெளியானதாகவும், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களிலும், டுச்ணஞ்டூச்ணிணடூடிணஞு.ஞிணிட் என்ற இணைய தளத்தில் இருந்தும், வினாத்தாளை சிலர் பெற்றதாக, தகவல் வெளியானது.
மணிப்பூரில் இப் பிரச்னை பூதாகரமானாலும், தமிழகத்தில் உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகிகள், கண்டு கொள்ளாமல், இயற்பியல் தேர்வை நடத்தி முடித்தனர். இந்நிலையில், சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சர்மா வெளியிட்டுள்ள அவசர சுற்றறிக்கையில், "நிர்வாக காரணங்களால், இயற்பியல் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அதற்கான மறுதேர்வு, மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தேர்வு மையங்களில், ஏப்., 2ம் தேதி காலை, 10:30 முதல் 1:30 மணி வரை நடக்கும்' என, தெரிவித்துள்ளார்.
கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: இன்டர்நெட் மற்றும் பேஸ்புக்கில், பிளஸ் 2 இயற்பியல் தேர்வுக்கான வினாத்தாள், வெளியான விவகாரத்தில், மத்திய அரசு, இன்னும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. வசதி படைத்த மாணவர்கள், யாரிடமும் கூறாமல், அமைதியாக படித்து தேர்வு எழுதி உள்ளனர்.
சேர்மன் வினித் ஜோஷி, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து உள்ளதாகவும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர் எனவும் கூறியுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில், ஏப்., 2ம் தேதி தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு, மூன்று நாள் முன் வினாத்தாள் வெளியானதால், நாடு முழுவதும் மறுதேர்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment