கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Tuesday, October 2, 2012

    140 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுமதி

    மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துவதில், பல்வேறு தொடர் நெருக்கடிகள் இருந்து வருவதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும், 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை, தடையில்லா சான்று வழங்கியுள்ளது.


    சமச்சீர் கல்வி திட்டம் வருவதற்கு முன், நான்கு வகை கல்வித் திட்டங்கள் அமலில் இருந்தன. இதில், இந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளை, மொழிப்பாடமாக கற்பதற்கு, வழிவகை இருந்தது. சமச்சீர் கல்வி திட்டத்தில், அதற்கு வழியில்லை. இந்தி மொழியை, மொழிப் பாடமாக கற்க முடியாது. அதை, ஒரு விருப்பப் பாடமாகத் தான் கற்க முடியும்.
    தொடர் அங்கீகாரம் வழங்குவதில் அலைகழிப்பு, எதிர்பார்த்த கட்டணம் நிர்ணயிக்காதது, பெற்றோர்-பள்ளி நிர்வாகிகளிடையே, அவ்வப்போது வெடிக்கும் பிரச்னை, பெற்றோர், மாணவர் விரும்பும் பாடத் திட்டங்களை வழங்க முடியாத நிலை போன்ற காரணங்களால், சி.பி.எஸ்.இ., பக்கம் தனியார் பள்ளி நிர்வாகிகள், தங்களது பார்வையை திருப்பியுள்ளனர்.தமிழகத்தில், ஏற்கனவே 500 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில், 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை, தடையில்லா சான்று வழங்கியுள்ளது. பெரிய இட வசதியுள்ள, மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாகிகள், பக்கத்திலேயே சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, விண்ணப்பித்து வருகின்றனர்.

    மெட்ரிக் பள்ளிகளை அப்படியே மூடிவிட்டு, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் ஆரம்பிப்பதற்கு, சட்டத்தில் வழிவகை இல்லை. இதனால், படிப்படியாக மாணவர் சேர்க்கையை குறைத்து, ஒரு கட்டத்தில் பள்ளியை மூடிவிட்டு, சி.பி.எஸ்.இ., பள்ளி துவங்கவும், சில பள்ளி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதுகுறித்து, தனியார் பள்ளி ஒன்றின், தாளாளர் ராம சுப்பிரமணியன் கூறியதாவது:
    தமிழகத்தில், கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், பிரெஞ்ச், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகள், இங்குள்ள பள்ளிகளில் மொழிப்பாடமாக இருக்க வேண்டும் என, பலரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில், அதுபோல் வாய்ப்பு இல்லை.

    சி.பி.எஸ்.இ., போர்டு, தரமான கல்வி திட்டம் வழங்குவதுடன், பிரெஞ்ச், ஜெர்மன், இந்தி, தற்போது சீன மொழியை கற்பிக்கவும் வழிவகை செய்கிறது. ஒருமுறை அங்கீகாரம் பெற்றுவிட்டால், அதன்பின் தொடர் பிரச்னைகள் கிடையாது. இதனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்குவதில், பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றாஅர்.

    சோடை போகவில்லை: தனியார் பள்ளி நிர்வாகிகளின் கருத்து குறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, உரிய விதிமுறைகளை பூர்த்தி செய்து, விண்ணப்பிப்பவர்களுக்கு, தடையில்லா சான்று வழங்குகிறோம். சி.பி.எஸ்.இ., பள்ளிகள் புதிதாக வருவதால், மாநில பாடத் திட்டம் சோடை போனதாக அர்த்தம் கிடையாது என்று தெரிவித்தன.

    No comments:

    Post a Comment