கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Sunday, October 7, 2012

    பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு தமிழக அரசு உத்தரவு

    பள்ளி வாகனங்கள் இயக்கம் முறைப்படுத்துதல் மற்றும் பராமரிப்பு சட்டம்,2012 என்ற பெயரில் இந்த மாதம் (அக்டோபர்,1) முதல் தேதியில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது.
    * பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். அதில் பக்கவாட்டில் பள்ளி பேருந்து என்பதை நீல நிறத்தில் வட்ட வடிவில் எழுதியிருக்க வேண்டும்.
    * பயணம் செய்யும் குழந்தைகளின் பெற்றோரை கொண்டு தனியாக பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்படுத்த வேண்டும். இந்த குழுவின் கூட்டத்தை மாதத்திற்கு ஒரு முறை தலைமையாசிரியர் அல்லது முதல்வர் கூட்டி பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும்.

    * பள்ளி பேருந்தின் ஓட்டுநரை குழந்தைகள் நெருங்கி செல்லமுடியாதபடி ஓட்டுநருக்கு தனி கேபின் ஏற்படுத்த வேண்டும்.
    * பள்ளி வாகனங்கள் நகர்ப்புற சாலைகளில் மணிக்கு 40 கி.மீ., புறநகரில் 50 கி.மீ. வேகத்திலும் செல்வதை கண்காணிக்க வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தியிருக்க வேண்டும்.
    * பள்ளி வாகனத்தில் குழந்தைகள் ஏறுவதற்கான படிகள் தரையில் இருந்து 250 மில்லி மீட்டர் முதல் 300 மில்லி மீட்டர் உயரத்திற்குள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வசதியும் நவம்பர் 1ம் தேதிக்கு முன்பாக ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
    * பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீத்தடுப்பு சாதனங்களும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments:

    Post a Comment