கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, October 31, 2012

    வாக்காளர் பட்டியலில் திருத்தம் : 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு - சிறப்பு முகாம் கிடையாது எனவும் அறிவிப்பு

    வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு, வரும் 20ம் தேதிவரை தேர்தல் கமிஷன் கால அவகாசம் வழங்கியுள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    தமிழகத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல், அடுத்தாண்டு ஜனவரி, 1ம் தேதி வெளியிடப்படுகிறது. இதையடுத்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வதற்கு, கடந்த மாதம் முதல் தேதியில் இருந்து நேற்று வரை, கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த கால அவகாசத்தை, வரும், 20ம் தேதி வரை நீட்டித்து, தேர்தல் வாரியம் அறிவித்துள்ளது. இக்காலத்தில், எவ்வித சிறப்பு முகாமும் நடத்தப்பட மாட்டாது. இதனால், திருத்தப் பட்ட வாக்காளர் பட்டியல், ஜனவரி மாதம், 15ம் தேதி வெளியிடப்படும்.

    இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    No comments:

    Post a Comment