கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, January 9, 2013

    12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் 500 இடங்களை பெறுபவர்களுக்கு பட்டய, பட்டப்படிப்பு முடிக்கும் வரை வருடம் ரூ 3000 பரிசுத்தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவ & மாணவிகளுக்கு உயர் கல்வி படிக்க ரூ 3000 பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

    நடப்பாண்டு முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ & மாணவிகளில் முதல் 500 இடங்களை பெறுபவர்களுக்கு பட்டய, பட்டப்படிப்பு முடிக்கும் வரை வருடம் ரூ 3000 பரிசுத்தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
    எனவே, மார்ச் 2012ல் நடைபெற்ற 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக பயின்று தேர்வு எழுதிய பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ & மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
    அதனால் 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மற்றும் 1168 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்று, சாதிச்சான்று மற்றும் தற்போது பயிலும் கல்லூரியில் இருந்து பெறப்பட்ட சான்று நகல்களுடன் பிளஸ் 2 பயின்ற மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என்று பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    No comments:

    Post a Comment