கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Tuesday, January 29, 2013

    எந்தெந்த துறைகளில் எவ்வளவு காலி இடங்கள்? என்ற ஆண்டு தேர்வு பட்டியலை TNPSC நாளை (புதன்கிழமை)வெளியிடுகிறது.

    இதில் ஏறத்தாழ 20 ஆயிரம் காலி இடங்கள்அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டித்தேர்வுகள் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் எழுத்தர் பணி தொடங்கி துணை கலெக்டர் பதவி வரையிலான பணி இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக நிரப்பப்படுகின்றன..
     

    இதற்கான குரூப்–1, குரூப்–2, குரூப்–4 என பல்வேறு விதமான
    போட்டித்தேர்வுகளை நடத்திவருகிறது. துணை கலெக்டர், டி.எஸ்.பி. போன்ற உயர்பதவிகள் குரூப்–1 தேர்வு மூலமாகவும், நகராட்சி கமிஷனர், தலைமைச்செயலக உதவி பிரிவு அதிகாரி (ஏ.எஸ்.ஓ.), சார்–பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் உள்ளிட்ட சார்நிலை பதவிகள் குரூப்–2 போட்டித்தேர்வு மூலமாகவும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) ஆகிய பதவிகள் குரூப்–4 தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.ஆண்டு தேர்வு பட்டியல் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.), ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் போன்ற தேர்வாணையங்கள் ஓராண்டில் என்னென்ன பதவிகளுக்கு என்ன தேர்வுகள் நடத்தப்படும்? என்ற தேர்வுபட்டியலை முன்கூட்டியே வெளியிட்டுவிடும். இது தேர்வுக்கு படித்துக்கொண்டிருப்போருக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இதே போன்று, டி.என்.பி.எஸ்.சி.யும் ஆண்டு தேர்வுபட்டியல் (ஆனுவல் பிளானர்) முறையை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதில், எவ்வளவு காலி இடங்கள்? தேர்வு நாள், தேர்வுமுடிவு வெளியாகும் தேதி, நேர்முகத்தேர்வு நாள், இறுதி தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி என அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருந்தது. காலக்கெடுவுடன் தேர்வு நடத்தப்பட்டதால் தேர்வுக்கு தயாராகும் மாணவ–மாணவிகளும் உற்சாகத்தோடு படித்தார்கள்.நாளை மறுநாள் வெளியாகிறது இந்த நிலையில், 2013–ம்ஆண்டு தேர்வுபட்டியல் ஜனவரி 28–ந் தேதி (நேற்று) வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் அறிவித்து இருந்தார். ஒவ்வொரு தேர்வுக்கான தேதியும் யு.பி.எஸ்.சி., ஸ்டாப் செலக்ஷன் கமிஷன், வங்கிப்பணியாளர் தேர்வாணையம் போன்றவற்றின் தேர்வு தேதியும் ஒரேநாளில் வந்துவிடக்கூடாது என்பது துல்லியமாக ஆய்வு செய்யப்படுவதால் இப்பணி உரிய காலத்தில் முடியவில்லை. இன்ற்றைய நிலவரப்படி, தேர்வு தேதி முடிவுசெய்யும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. எனவே,தேர்வுபட்டியல் நாளை மறுநாள் (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது.தேர்வுபட்டியலை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் வெளியிட, முதல் பிரதியை அதன் செயலாளர் மா.விஜயகுமார் பெற்றுக்கொள்கிறார். அன்றைய தினம் அனைவரும் தெரிந்துகொள்ளும் வண்ணம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்திலும் தேர்வுபட்டியல் வெளியிடப்படும். 20 ஆயிரம் காலி இடங்கள் குரூப்–4 தேர்வு நிலையில் 10 ஆயிரம் இடங்களும், குரூப்–2 தேர்வு நிலையில் 6 ஆயிரம் இடங்களும், இதர தேர்வுகளையும் சேர்த்து ஏறத்தாழ 20 ஆயிரம் காலி இடங்கள் இந்த தேர்வுபட்டியல் மூலம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    No comments:

    Post a Comment