கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Thursday, January 24, 2013

    காமராஜர் பல்கலைக்கழகம், 2 வருட தொலைநிலைக் கல்வி முறையில், பி.எட்., படிப்பை, 2013-15 கல்வியாண்டில், வழங்குகிறது

    காமராஜர் பல்கலைக்கழகம், 2 வருட தொலைநிலைக் கல்வி முறையில், பி.எட்., படிப்பை, 2013-15 கல்வியாண்டில், வழங்குகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்படிப்பானது, NCTE(National Council for Teacher Education) மற்றும் DEC(Distance Education Council) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டது. இப்படிப்பில் சேர்வதற்கான தகுதிகள் பின்வருமாறு




    * மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

    * , பி.லிட்., ஆங்கிலம், கணிதம், அப்ளைடு கணிதம், இயற்பியல், ஜியோ-பிசிக்ஸ், பயோ-பிசிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், வேதியியல், பயோ-கெமிஸ்ட்ரி, தாவரவியல், சுற்றுச்சூழல் அறிவியல், பயோடெக்னாலஜி, உயிரியல், வரலாறு, புவியியல், அப்ளைடு புவியியல், கணிப்பொறி அறிவியல், ஐடி போன்ற ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    * முதுநிலையில், ஹோம் சயின்ஸ், பொருளாதாரம் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று, ஆசிரியர்களாய் இருப்பவர்கள்.

    * 10, 12 மற்றும் இளநிலைப் பட்டப்படிப்பை முறையாக முடித்திருக்க வேண்டும்.

    * 2 வருட முழுநேர ஆசிரியர் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

    தேர்வு செய்யும் முறை

    பல்கலை நடத்தும் நுழைவுத்தேர்வில், பெறக்கூடிய மதிப்பெண்களின் அடிப்படையில், தமிழக அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறையைப் பின்பற்றி, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

    விண்ணப்பம் மற்றும் விபரக் கையேட்டை நேரில் பெற ரூ.800ம், டிடி மூலமாக பெற ரூ.850ம் செலுத்த வேண்டும்.

    சென்னை, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய இடங்களில், நுழைவுத் தேர்வு நடைபெறும்.

    விண்ணப்பம், ஜனவரி 24ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை பெற கடைசி நாள் பிப்ரவரி 25. நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் மார்ச் 24.

    No comments:

    Post a Comment