கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Thursday, January 24, 2013

    BBE-என்ற பட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு விரைவில் ஆசிரியர் பணி கிடைக்க உள்ளது.

    தமிழகம் முழுவதும் 2012 மே மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தியது.  இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குஆகஸ்ட் மாதம் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது.


    ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட பொருளியல் பாடத்திற்கான தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் பிபிஇ பட்டத்தை அங்கீகரிக்க மறுத்து பணி வாய்ப்பு மறுக்கப்பட்டது.
    பிஏ(பொருளாதாரம்) படிப்புக்கு இணையான படிப்பு பிபிஇ (B.A Honours BUSINESS ECONMICS)என தமிழகஅரசு ஆணை, பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரத்தை காட்டியும், அரசு ஆணை வரவில்லை எனக்கூறி ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த பட்டத்தை ஏற்க மறுத்து விட்டது.
    இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தேர்வு வாரியத்துக்கு பரிந்துரை செய்தனர். இதை ஏற்றுக்கொண்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் பிபிஇ பட்டத்தை அங்கீகரிப்பதாகவும், ஏற்கனவே ஆசிரியர் பணி மறுக்கப்பட்டவர்களுக்கு விரைவில் பணி வாய்ப்பு குறித்த அறிவிப்பு அந்தந்த துறைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஆசிரியர் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டதால் விரக்தியில் இருந்த பிபிஇ பட்டதாரிகளுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது.

    No comments:

    Post a Comment