கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, September 18, 2013

    தொடக்க பள்ளிகளை ஆய்வு செய்ய கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

    தொடக்க கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டாய்வு செய்யாத அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை முதலில் ஆய்வு செய்ய வேண்டும்.


    ஆய்வு செய்யும் நாளில் உதவி தொடக்க கல்வி அலுவலர், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் நாள் முழுவதும் சம்மந்தப்பட்ட பள்ளியிலேயே இருந்து அனைத்து வகுப்புகளுக்கும் சென்று பார்வையிட வேண்டும்.


    மாணவர்களின் வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்ய வேண்டும். 15 நாட்களாக பள்ளிக்கு வராத குழந்தைகளை கண்டறிந்து அவர்கள் பள்ளிக்கு வராத காரணத்தை கேட்டு வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


    பள்ளி வளாகத்தில் திறந்த வெளிக் கிணறுகள், உயர் அழுத்த மின் கம்பங்கள், பழுதடைந்துள்ள கட்டிடங்கள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து அவற்றை பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி உதவித் தொகை, இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். குறைகள் உள்ள பள்ளிகளுக்கு கால அவகாசம் கொடுத்து பின்னர் ஆய்வு செய்ய வேண்டும்.
    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தொடக்க கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்

    No comments:

    Post a Comment