கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

Follow my Email

 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • Sunday, September 22, 2013

  வகுப்பறைகள் இல்லை ஆய்வகங்கள் இல்லை...புதிய பாடப்பிரிவு சேர்க்கைக்கு மாணவர்கள் எதிர்ப்பு

  கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்த பின், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


  வேலை வாய்ப்பு:பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், ?மற்படிப்பில் ?சரும் ?பாது, ?வலைவாய்ப்பு தரும் படிப்புகளுக்?க, அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அர உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் ?வலை வாய்ப்பு தரும் படிப்புகள் உள்ளன. வேலைவாய்ப்பு சந்தையில் நிலவும் ?தவையை கருத்தில் கொண்டு, ‘அர கல்லூரிகளில், பி.ஏ., இதழியல் மற்றும் தொடர்பியல், பாதுகாப்பு துறை படிப்பு, பி.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் கம்யூனி?கஷன், நுண்ணுயிரியல், விவல் கம்யூனிகேஷன், பி.எஸ்.டபிள்யூ., சமூக சேவை உள்ளிட்ட, 398 புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படும்’ என, தமிழக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டது.


  இப்பாடப்பிரிவுகளுக்கு அரசாணை வெளியாகி, தற்போது விண்ணப்ப விற்பனையும் நடந்து வருகிறது. சில கல்லூரி கள், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு முன்பே, மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்து விட்டன.அரசு கல்லூரி களில், முதலாமாண்டு மாணவர்களுக்கான பருவ தேர்வுகள் துவங்கி விட்டதால், புதிய பாடப்பிரிவுகளுக்கு உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தி, வகுப்புகளை துவங்க வேண்டும் என்ற சுற்றறிக்கையும் அரசு அனுப்பியது.


  போராட்டம்:அனைத்து அரசு கல்லூரிகளிலும், புதிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், கல்லூரிகளில் அதற்கேற்ப வகுப்பறை, ஆய்வக வசதி உள்ளிட்ட, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லையென கூறி, சென்னை, வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலை கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.


  இதுகுறித்து, கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது:கல்லூரிகள் தங்களுக்கு தேவையான பாடங்களை, அரசிடம் கேட்டு பெற்று கொள்கின்றன. அதற்கு அரசும் அனுமதி வழங்குகிறது. ஆனால், அந்த பாடப்பிரிவுகளுக்கேற்ப, கூடுதல் வகுப்பறை, ஆய்வக வசதி உள்ளதா என்பதை பல்கலைக் கழகங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.ஆனால், கல்லூரி நிர்வாகம், இருக்கும் வகுப்பறைகளில் வகுப்புகளை எடுத்து கொள்கிறோம் என, தெரிவித்த உடனே, பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி விடுகின்றன.


  இட நெருக்கடி:ஓர் ஆண்டு கஷ்டப்பட்டு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் மிக பெரிய அளவில் இடநெருக்கடி ஏற்படுகிறது. எனவே, மாணவர்களின் நலன் கருதி, புதிய பாடப் பிரிவுகளுக்கேற்ப, கூடுதல் வகுப்பறைகள், ஆய்வு வசதிகள் உள்ளிட்டவற்றை, அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

  No comments:

  Post a Comment