கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

Follow my Email

 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • Thursday, September 19, 2013

  மறைந்த மத்திய அரசு ஊழியரின் விதவைகள் மற்றும் விவாகரத்தான மகள்களும் குடும்ப ஓய்வூதியம் பெறலாம்

  மத்திய அரசின் மற்ற அமைச்சகங்களும்,துறைகளும் இது தொடர்பாக விளக்கங்கள் கேட்ட நிலையில்,இது குறித்த சுற்றறிக்கையை மத்திய பணியாளர் நலன் அமைச்சகம் கடந்த வாரம் அனுப்பியுள்ளது.அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..


  மத்திய அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரரின் வாழ்க்கைத் துணையோ அல்லது பெற்றோரைச் சார்ந்த வாரிசோ குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதியானவர் ஆவார்.அகவிலைப்படியுடன் கூடிய குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியத்துக்கு சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ வருவாய் ஈட்டாத வாரிசே பெற்றோரைச் சார்ந்தவராக கருதப்படுவார்.எனவே,அரசு ஊழியர் இறப்பின்போது அல்லது அவரது வாழ்க்கைத் துணையின் இறப்பின்போது,எது பிந்தையதோ,அதன் பின்னர் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான மற்ற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வாரிசுதாரரே குடும்ப ஓய்வூதியம் பெற முடியும்.அதேபோன்று,தனது பெற்றோர் இறந்த பின்னர் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான மற்ற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்பட்சத்தில் விதவையான அல்லது விவாகரத்து பெற்ற மகள்களும் குடும்ப ஓய்வூதியம் பெறமுடியும்.விதிமுறைகளின்படி,அரசு ஊழியர் இறந்த பின் அல்லது ஓய்வூதியதாரர் மறுமணம் புரிந்த பின், 25வயதுக்குள்பட்டஅவர்களது திருமணமாகாத வாரிசு குடும்ப ஓய்வூதியம் பெற முடியும்.மாற்றுத் திறனாளியான வாரிசுதாரருக்கு வாழ்நாள் முழுவதுமும்,அதன் பின்னர்25வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத,விதவையான,விவாகரத்து பெற்ற மகள்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.விதவைகளான அல்லது விவாகரத்து பெற்ற மகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்த விதிமுறைகள் ஏற்கெனவே உள்ளன.நிலுவையில் உள்ள மனுக்களைப் பொருத்தவரை,தகுதியானவர்களுக்கு2004ஆகஸ்ட்30-ம்தேதி முதல் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  No comments:

  Post a Comment