கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, August 31, 2012
கல்வி உதவித்தொகை பெற ஆதிதிராவிடர் வருமான உச்ச வரம்பு உயர்வு
நரிக்குறவர் என்கிற குருவிக்காரர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ , மாணவிகள்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு: விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க செப்.7 வரை கால நீட்டிப்பு
தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 7-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 7,மற்றும் 8, தேதிகளில் சான்றிதழ் சரிபார்பு -T.R.B -அறிவிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும்
7,மற்றும் 8, தேதிகளில் சான்றிதழ் சரிபார்பு மதுரை,சேலம்,திருச்சி, சென்னை, ஆகிய மாவட்டங்களில் நடைபெறுகிறது
Paper 1 : 1735 Candidates - நேரம் - 08.09.2012 , Timing: 10.00 a.m/2.30 P.M
Paper 2 : 713 Candidates - நேரம் - 07.09.2012 , Timing: 10.00 a.m/2.30 P.M
Please Click Here Instruction for Certificate Verification
Please Click Here Bio-Data Form
Please Click Here Identification Form
7,மற்றும் 8, தேதிகளில் சான்றிதழ் சரிபார்பு மதுரை,சேலம்,திருச்சி, சென்னை, ஆகிய மாவட்டங்களில் நடைபெறுகிறது
Paper 1 : 1735 Candidates - நேரம் - 08.09.2012 , Timing: 10.00 a.m/2.30 P.M
Paper 2 : 713 Candidates - நேரம் - 07.09.2012 , Timing: 10.00 a.m/2.30 P.M
Please Click Here Instruction for Certificate Verification
Please Click Here Bio-Data Form
Please Click Here Identification Form
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வு மீது சந்தேகம் கிளப்பும் பட்டதாரிகள்
தேர்வு முடிவுகள் வெளியானதில் முதல் தாளில் 1735 பேரும், 2ம் தாளில் 713 பேரும் தேர்ச்சி பெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. மேலும், தாள் 1 மற்றும் தாள்&2 ஆகிய இரண்டிலும் 83 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இரண்டு தேர்வுகளிலும் தேர்வு எழுதியவர்களின் முடிவுகளை பார்க்கும் போது, தகுதி தேர்விலும் ஏதோ நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1ல் வெறும் 5 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவி தாள்-2ல், 113 பெற்றுள்ளார். அதேபோல தாள்-1ல் வெறும் 16 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் ஒருவர் தாள்-2ல் 114 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
நீதியரசர் திரு. S.R. சிங்காரவேலு அவர்கள் தலைமையில் அமைத்த குழு -2012 - 2013 தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் விவரம்
Thursday, August 30, 2012
பள்ளிக்கு நிலம் கொடுத்தாலும் பெயர் சூட்ட முடியாது: ஐகோர்ட் உத்தரவு
பள்ளி அமைக்க நன்கொடையாக நிலம் கொடுத்தவரின் பெயரை, அப்பள்ளிக்குச் சூட்ட முடியாது என, மதுரை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.திருச்சி மணச்சலூரை சேர்ந்த கைலாசம் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த பின் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் - தினமலர்
கடந்த 25ம் தேதி வெளியான, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை நடத்தி, இறுதிப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செப்டம்பர் இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
Wednesday, August 29, 2012
பள்ளிகளில் திங்கட்கிழமை மட்டும் பொது இறை வணக்கம்: அரசு புது உத்தரவு
பள்ளிகளில் திங்கட்கிழமை மட்டும், பொது இறைவணக்கம் நடத்தினால்போதும்' என, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் பள்ளிகளில், தினமும் காலை, பள்ளியில் இறைவணக்கம் நடைபெறும். பள்ளி துவங்கும் நேரத்திற்கு, மாணவ, மாணவியர் அனைவரும்,
Tuesday, August 28, 2012
பணி நிரவல் தந்தது பலன்: 10 ஆயிரம் ஆசிரியர்கள் அதிரடி மாற்றம் -தினமலர்
குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில், அதிகமான ஆசிரியர்களும், அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களும் பணிபுரிந்து வந்தனர். இந்த அவல நிலையை களைய, சமீபத்தில் நடந்த பணி நிரவல் மூலம்,
ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 1,134 ஆசிரியர் பயிற்றுனர்கள் நியமிக்கப்படுகிறார்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு
ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக 1,134 ஆசிரியர் பயிற்றுனர் பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு உணர்த்தும் உண்மைகள் -திணமணி
அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் சுமார் 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ள நிலையின் மூலம் சில கற்பிதங்களையும், சில உண்மைகளையும், எதிர்காலத்தில் இத்தேர்வில் செய்யவேண்டிய மாற்றங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்
Sunday, August 26, 2012
டி.இ.டி. மறு தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதால், அனைத்துப் பள்ளிகளுக்கும் அக்டோபர் 3ம் தேதி, அன்று விடுமுறை அளிக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது
அக்டோபர் 3ம் தேதி,டி.இ.டி. மறு தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதால், அனைத்துப் பள்ளிகளுக்கும் அன்று விடுமுறை அளிக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.இது தொடர்பான அரசாணை, தேர்வுக்கு முன்னதாக வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் ஜாதி வாரிப் பட்டியல் தயாரிக்க உத்தரவு
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஜாதி வாரி பட்டியலை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்வோருக்கு இனச்சுழற்சியில் ஜாதி வாரி கல்வி உதவித்தொகை,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்வோருக்கு இனச்சுழற்சியில் ஜாதி வாரி கல்வி உதவித்தொகை,
Saturday, August 25, 2012
திருப்பூர் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் விடுமுறைப்பட்டியல் -2012-13
திருப்பூர் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் விடுமுறைப்பட்டியல் -2012-13 Download செய்ய இங்கே கிளிக் செய்யவும்
ஆசிரியர் தகுதி தேர்வு: அக்டோப்ர் 3 மீண்டும் தேர்வு & ஒவ்வொரு தேர்விற்கும் 3 மணி நேரம் ஒதுக்கப்படும் மேலும் தேர்வர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை
தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதால் வெற்றி பெறாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அக்டோபர் மாதம் 3-ந்தேதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மேலும் ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு -மொத்த சதவீதம்
PAPER I = 1735 / 388175 = 0.44%
PAPER II = 713 / 676763 = 0.10%
TOTAL = 2448 / 1064938 = 0.22%
PAPER II = 713 / 676763 = 0.10%
TOTAL = 2448 / 1064938 = 0.22%
ஆசிரியர் தகுதி தேர்வில்(TNTET) தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும், வரும் அக்டோபர் 3ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும், வரும் அக்டோபர் 3ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் -ஜுலை 12ம் தேதி நடைபெற்ற டெட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 1%க்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Friday, August 24, 2012
Thursday, August 23, 2012
தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது: 5-ந்தேதி ஜனாதிபதி வழங்குகிறார்
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ந்தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் நல்லாசிரியர் விருதை வழங்கி வருகின்றன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு செய்முறை பயிற்சி அந்தந்த கல்வி மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு செய்முறை பயிற்சி அந்தந்த கல்வி மாவட்டங்களில் நடைபெற உள்ளது.இவர்களுக்கான செய்முறை பயிற்சி வகுப்புகள் வரும் செப்டம்பர் 8ம் தேதி துவங்குகிறது. செப்டம்பர் 22, அக்டோபர் 6, 20, ஜனவரி 5ம் தேதி வகுப்புகள் நடக்கின்றன.
காலியாக உள்ள பகுதிநேர ஆசிரியர்களை நிரப்ப நடவடிக்கைகாலியாக உள்ள பகுதிநேர ஆசிரியர்களை நிரப்ப நடவடிக்கை
எஸ்.எஸ்.ஏ., மூலம் நியமிக்கப்பட்ட 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களில், பல்வேறு காரணங்களால் 1200 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
எஸ்.எம்.எஸ்., வரம்பு 5ல் இருந்து 20 ஆக உயர்வு
பல்க் எஸ்.எம்.எஸ்.,களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், நாள் ஒன்றிற்கு 5 எஸ்.எம்.எஸ்.,கள் மட்டுமே அனுப்ப முடியும் என்ற வரம்பை 20 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
Tuesday, August 21, 2012
கிராமப்பபுற நூலகங்களை தரம் உயர்த்தி முதல்வர் ஜெ. உத்தரவு
கிராமப்பபுற நூலகங்களை தரம் உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 96 ஊர்புற நூலகங்கள், கிளை நூலகங்களாக தரம் உயர்த்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் மாநிலம் முழுவதுமுள்ள 160 பகுதி நேர நூலகங்களை, ஊர்புற நூலகங்களாக தரம் உயர்த்தியும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
டி.ஆர்.பி., தேர்வு பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு
டி.ஆர்.பி., நடத்தி வரும் தேர்வுப் பணிகள், தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளன.பள்ளி, கல்லூரி ஆசிரியர் தேர்வு, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கான ஆசிரியர் தேர்வு போன்றவற்றை, டி.ஆர்.பி., நடத்தி வருகிறது.
Monday, August 20, 2012
Sunday, August 19, 2012
பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க கல்வி துறை கூறும் புதிய வழிமுறைகள்
தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் கூறியுள்ளதாவது: திங்கள் கிழமை மட்டும் பள்ளிகளில் காலை மைதானத்தில் கூடி நின்று இறைவணக்கம் செய்யவேண்டும்.
இதில் கூறியுள்ளதாவது: திங்கள் கிழமை மட்டும் பள்ளிகளில் காலை மைதானத்தில் கூடி நின்று இறைவணக்கம் செய்யவேண்டும்.
சுற்றுச் சூழல் நண்பன் திட்டத்தில் (‘பரியாவரன் மித்ரா‘) உறுப்பி னர்களை சேர்க்க, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மத்திய அரசு சார்பில் ‘பரியாவரன் மித்ரா‘ ( சுற்றுச்சூழல் நண்பன்) திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் இரண்டு கோடி பேரை சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை
10'th & +2 - பொதுத்தேர்வுகளில் 60 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற காரணமாக இருந்த ஆசிரியர்கள் கல்வித்துறைக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
10'th & +2, - பொதுத்தேர்வுகளில் மாணவ, மாணவியர் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற காரணமாக இருந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள், கல்வித்துறைக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Saturday, August 18, 2012
திருப்பூர் மாவட்டம் -ஓணம் பண்டிகை விடுமுறை அறிவிப்பு
திருப்பூர்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் மதிவாணன் வெளியிட்ட அறிக்கை:
ஓணம் பண்டிகை வரும் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அன்று விடுமுறை விடப்படுகிறது.இந்த உள்ளூர் விடு
முறைக்கு பதிலாக அடுத்த மாதம் 8ம் தேதி அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது
கலெக்டர் மதிவாணன் வெளியிட்ட அறிக்கை:
ஓணம் பண்டிகை வரும் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அன்று விடுமுறை விடப்படுகிறது.இந்த உள்ளூர் விடு
முறைக்கு பதிலாக அடுத்த மாதம் 8ம் தேதி அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு - அறிவிப்பு வெளியீடு
Last Date for Submission of
Application Form - 31st August, 2012 *
Examination in All other States and
Union Territories - 18thNovember, 2012 (Sunday)
Examination in All States and Union
Territories - 12th May, 2013 (Sunday)
விண்ணப்பிக்க வேண்டுவோர் click & download
Application Form - 31st August, 2012 *
Examination in All other States and
Union Territories - 18thNovember, 2012 (Sunday)
Examination in All States and Union
Territories - 12th May, 2013 (Sunday)
விண்ணப்பிக்க வேண்டுவோர் click & download
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கல்விக்கடன் : ப.சிதம்பரம்
புதுடில்லி : உயர் படிப்புகளுக்கு கல்விக்கடன் கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் வங்கி அதிகாரிகள் உடன் கடன் தொகை வழங்க வேண்டும்.
தனித் தேர்வர்களுக்காக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 21ம் தேதி வெளியாகிறது.
தனித் தேர்வர்களுக்காக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 21ம் தேதி வெளியாகிறது. மதிப்பெண் பட்டியல்கள் அந்த மாவட்டத்தில் உள்ள மண்டல இயக்குனர் அலுவலகம் மூலம் மாணவர்களின் முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.
ஆசிரியர் நியமனம், மாறுதல் மற்றும் துறை தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, வழக்குகள் குறித்த தகவல்களை தினசரி அறிய, தனி அலுவலர்கள் பள்ளிக் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டுள்ளனர்
பணி நியமனம், மாறுதல் குறித்து,தொடுக்கப்படும் வழக்குகள், அதிகளவில் சேர்ந்துள்ளதால், அவற்றை உடனுக் குடன் முடிக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. வழக்குகள் குறித்த தகவல்கள், அதற்கென உள்ள அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தாலும், தினசரி கோர்ட்டில் வழக்காடப்படும் வழக்குகள், அவற்றின்
உயர்கல்வியில் மொழிப்பாடங்களுக்கும் இனி செய்முறைத் தேர்வு
கல்லூரி மற்றும் பல்கலையில், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில், 25 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு முறையை அறிமுகப்படுத்த, உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
Friday, August 17, 2012
ஓணம் பண்டிகை : சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை -திணமணி
சென்னை, ஆக., 17 : சென்னை மாவட்ட ஆட்சியர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட் 29ம் தேதி புதன்கிழமை சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில், செப்டம்பர் 15ம் தேதி சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.
பள்ளிகளில் கடுக்கன், கண்களை உறுத்தும் நகைகள் அணிய தடை
பள்ளிகளில் ஸ்டைலுக்காக காதில் கடுக்கன், கையில் வித்தியாசமான பிரேஸ்லெட், மாணவிகள் தங்க நகைகள் அணிய பள்ளி கல்வித்துறை தடைவிதித்தது.மாணவர்கள் தலைமுடியை ஸ்டைலாக பங்க், போலீஸ் கட்டிங், ஸ்டெப் கட்டிங் போன்ற வித்தியாசமான ஹேர் ஸ்டைல்களுக்கு அனுமதி இல்லை.
டி.என்.பி.எஸ்.சி.குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிட ஐகோர்ட் இடைக்காலத்தடை
சென்னை : கடந்த 7ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு எந்த நேரத்திலும் வெளியாகும்: தேர்வு வாரிய தலைவர்
பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரையில், முழுக்க முழுக்க தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், இடைநிலை ஆசிரிய நியமனம், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் இருந்து பதிவுமூப்பு மூலமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவு குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியிடம் கேட்டபோது, ‘தகுதித்தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்வு முடிவு எந்த நேரத்திலும் வெளியாகும்’ என்றார்.
பள்ளி சத்துணவு திட்டத்தில் பலவகை உணவுகள் சேர்ப்பு?
சத்துணவுத் திட்டத்தில், பல வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்த அறிவிப்பு, அண்ணாதுரை பிறந்த தினத்தன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சத்துணவில், இனி, பெப்பர் முட்டை, கறிவேப்பிலை சாதம் போன்றவை வினியோகிக்க வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
Thursday, August 16, 2012
வி.ஏ.ஓ பணிக்கு செப்டம்பர் 30ல் போட்டித் தேர்வு
சென்னை: வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 1,870 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, செப்., 30ல் போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கு, 10 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வு முடிவுகள் நாளை மாலை வெளியிடப்படுகிறது
கடந்த ஜூன், ஜூலையில் நடந்த எஸ்எஸ்எல்சி, ஓஎஸ்எல்சி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 29 மற்றும் 30&ம் தேதிகளில், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
Wednesday, August 15, 2012
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது.
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது.நடப்பாண்டு முதல், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு, பொதுத்தேர்வை போலவே, ஒரே மாதிரியான கேள்வித்தாளுடன், ஒரே நாளில், அனைத்து பள்ளிகளிலும் தேர்வு துவக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விஏஒ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை, ஆக.,15: தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி), கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 18ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Tuesday, August 14, 2012
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள்.500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்-மத்திய அரசு கட்டுப்பாடு
தகவல்கள் கோரி விண்ணப்பம் செய்வோர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக இருந்தால், அவர்கள் விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர் என்பதற்கான, அரசு வழங்கிய சான்றிதழின் நகலை இணைக்க வேண்டும். பிற விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்துடன், 10 ரூபாய்க்கான நீதிமன்ற கட்டண வில்லையை இணைக்க வேண்டும்
இரட்டை பட்டம் செல்லாது. உயர் நீதி மன்றம்
இரட்டை பட்டம் செல்லாது என்று . உயர் நீதி மன்றம் விதித்த இடைக்கால தீர்ப்பை எதிர்த்து சிவகங்கை மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களை சார்ந்த ஆசிரியர்கள் குழுவாக இணைந்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
17ல் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்துச் செய்யக் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்
சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வை ரத்துச் செய்யக் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் வரும் 17ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.
Monday, August 13, 2012
6.5 லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு: 17-ந் தேதி வெளியாகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வை 6.5 லட்சம் பேர் எழுதினார்கள். இடைநிலை ஆசிரியர்கள் 2.5 லட்சம் பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 4 லட்சம் பேரும் இத்தேர்வை எழுதினார்கள்.
புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்- அமைச்சர் தனிப்பிரிவில் புதிய வலைதளம்:முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏழை- எளிய மக்களும், சாமானியர்களும் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் அரசின் நலத்திட்டங்கள்click here http://cmcell.tn.gov.inஅனைத்தும் உரிய முறையில் அவர்களை சென்றடையும் வகையிலும்,
குரூப் 2 தேர்வு ரத்து : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி தேர்வாணைய தலைவர் நட்ராஜ் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 144 மையங்களில் 6.4 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
ஆசிரியர் கவுன்சிலிங்: வீடியோ கேமராவில் பதிவு செய்ய கோரிக்கை
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் கவுன்சிலிங் அனைத்தும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்தால், முறைகேடுகளை தவிர்க்க முடியும் என ஆசிரியர்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
Saturday, August 11, 2012
டி.இ.டி., தகுதி மதிப்பெண்களை 40 சதவீதமாக குறைக்க திட்டம்
டி.இ.டி., தேர்வில், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், வெறும், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை, 40 சதவீதமாகக் குறைக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
தபால் மூலம் நேரடியாக எம்ஏ படித்தவருக்கு அரசு பணி வழங்கியதை பறித்தது சரியானதுதான் -உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னையை சேர்ந்த ராஜேஸ்தீனா என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது.
நான் விழுப்புரம் மாவட்டம் திருவத்தூரில் கிராம நூலகத்தில் நூலகராக நியமிக்கப்பட்டேன். என்னை நூலகர் கிரேட் 3 என்ற அந்தஸ்தில் அரசு நியமித்து உத்தரவிட்டது. பின்னர் படிப்பு ஆவணங்களை மாவட்ட நூலகர் ஆய்வு செய்து எனது பதவியை பறித்து உத்தரவிட்டார்.
நான் விழுப்புரம் மாவட்டம் திருவத்தூரில் கிராம நூலகத்தில் நூலகராக நியமிக்கப்பட்டேன். என்னை நூலகர் கிரேட் 3 என்ற அந்தஸ்தில் அரசு நியமித்து உத்தரவிட்டது. பின்னர் படிப்பு ஆவணங்களை மாவட்ட நூலகர் ஆய்வு செய்து எனது பதவியை பறித்து உத்தரவிட்டார்.
Friday, August 10, 2012
பி.எட்., - எம்.எட்., தேர்வு முடிவு இன்று வெளியீடு
சென்னை:பி.எட்., - எம்.எட்., தேர்வு முடிவுகள், இன்று
வெளியிடப்படுகின்றன.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயகுமார் வெளியிட்ட அறிவிப்பு:பல்கலையின்
இணைப்புப் பெற்ற, 649 கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., - எம்.எட்.,
தேர்வு முடிவுகள், 11ம் தேதி (இன்று), பல் வெளியிடப்படும். CLICK HERE&GET RESULT
ஆசிரியர் தகுதித் தேர்வில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி!
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு தாளிலும் 150-க்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும். மொத்தமாக 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால்,
இரண்டாம் நிலைக் காவலர் பணி: தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்
சென்னை, ஆக. 10: 2012ம் ஆண்டிற்கான 13320 இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போருக்கான எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த கட்ட தேர்வான அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்திறன் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் மற்றும் தேர்வு மையம் ஆகிய விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
CLICK HERE GET SELECTION LIST
CLICK HERE GET SELECTION LIST
முதுகலை ஆசிரியர் வேலைக்கு தமிழ் வழியில் படித்தவர் இல்லை
ஆசிரியர் தேர்வு வாரியம், 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை விரைவில் வெளியிட உள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில், தமிழ் வழியில் படித்தவருக்கு, 20 சதவீதம் பணியிடங்களை ஒதுக்க வேண்டும். ஆனால்,
Thursday, August 9, 2012
குரூப்2 தேர்வு : நுழைவுச் சீட்டுக்கு மாற்று ஏற்பாடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 3,600 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 4.80 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர்
கல்வி உதவி கையாடல் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றத் திட்டம்
கல்வி உதவித் தொகை கையாடல் வழக்கை சிபிசிஐடி அல்லது லஞ்ச ஒழிப்புதடுப்புப் பிரிவுக்கு மாற்ற மாவட்டக் காவல் துறை திட்டமிட்டுள்ளது.சுகாதாரமற்ற தொழில் புரிவோர் குழந்தைகளுக்காக வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையை பள்ளியில் படிக்கும்
R.T..I சட்டத்தின் படி மாநில அடிப்படையில் நியமனம் பெற்ற ஆசிரியர்களாள் 08.04.2011அன்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இணை இயக்குனர் அவர்களின் பதில்......
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது .ஆகவே ,வழக்கு முடியும் வரை நாங்கள் மாவட்ட மாறுதல் கொடுக்கமுடியாது .மேலும் ,மனம் ஒத்த மாறுதலும் இல்லை.
CLICK HERE Doc -1
CLICK HERE Doc -2
CLICK HERE Doc - 3
CLICK HERE Doc - 4
CLICK HERE Doc -1
CLICK HERE Doc -2
CLICK HERE Doc - 3
CLICK HERE Doc - 4
Wednesday, August 8, 2012
முப்பருவ மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை, அடுத்த கல்வியாண்டில் (2013-14) 9, 10ம் வகுப்புகளுக்கு அமல்படுத்த,குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா பிறப்பித்துள்ள அரசாணை விவரம்: வரும் 2013-14ம் கல்வியாண்டில், 9, 10ம் வகுப்புகளுக்கான பாட நூல்களை, முப்பருவ முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை உள்ளடக்கி தயாரிக்க ஏதுவாக, ஒவ்வொரு பாடத்திற்கும், ஒரு இணை இயக்குனரை, பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்ய வேண்டும்
Tuesday, August 7, 2012
தமிழக கோவில்களில் செப்டம்பர் 8-ந்தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா - தமிழக அறநிலையத்துறை அறிவிப்பு
இதுகுறித்து அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் தேதிகள் இரண்டு விதமாக உள்ளது. ஆனால் செப்டம்பர் 8ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பெருமாள் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. இதே தேதியைத்தான் அரசு விடுமுறைப்பட்டியல் மற்றும் அரசு நாள் காட்டியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேதியில் தான் ஸ்ரீரங்கம், சென்னை பார்த்தசாரதி கோவில், மதுரை திருமோக்கூர் பெருமாள் கோவில் உட்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா எடுக்கப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் தேதிகள் இரண்டு விதமாக உள்ளது. ஆனால் செப்டம்பர் 8ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பெருமாள் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. இதே தேதியைத்தான் அரசு விடுமுறைப்பட்டியல் மற்றும் அரசு நாள் காட்டியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேதியில் தான் ஸ்ரீரங்கம், சென்னை பார்த்தசாரதி கோவில், மதுரை திருமோக்கூர் பெருமாள் கோவில் உட்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா எடுக்கப்படுகிறது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்
முப்பருவ முறையின் கீழ் இரண்டு, மூன்றாம் பருவங்களுக்கான புத்தகங்களின் விலையை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட புத்தகங்கள் காரணமாக புதிய புத்தகங்களின் விலை சிறிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் பருவத்தோடு ஒப்பிடும்போது 1, 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் ரூ.10 வரையிலும், 3, 4, 5, 6 வகுப்புகளுக்கான புத்தகங்களில் ரூ.5 வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 7, 8 வகுப்புகளுக்கான புத்தகங்களில் எந்தவித மாற்றமும் இல்லை.
இரண்டு, மூன்றாம் பருவப் புத்தகங்களின் விலை
வகுப்பு புத்தக மொத்த
எண்ணிக்கை தொகுதி-1 தொகுதி-2 விலை
1 2 ரூ.30 ரூ.40 ரூ.70
2 2 ரூ.30 ரூ.40 ரூ.70
3 2 ரூ.30 ரூ.55 ரூ.85
4 2 ரூ.30 ரூ.55 ரூ.85
5 2 ரூ.40 ரூ.45 ரூ.85
6 2 ரூ.35 ரூ.50 ரூ.85
7 2 ரூ.40 ரூ.60 ரூ.100
8 2 ரூ.40 ரூ.60 ரூ.100
மேம்படுத்தப்பட்ட புத்தகங்கள் காரணமாக புதிய புத்தகங்களின் விலை சிறிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் பருவத்தோடு ஒப்பிடும்போது 1, 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் ரூ.10 வரையிலும், 3, 4, 5, 6 வகுப்புகளுக்கான புத்தகங்களில் ரூ.5 வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 7, 8 வகுப்புகளுக்கான புத்தகங்களில் எந்தவித மாற்றமும் இல்லை.
இரண்டு, மூன்றாம் பருவப் புத்தகங்களின் விலை
வகுப்பு புத்தக மொத்த
எண்ணிக்கை தொகுதி-1 தொகுதி-2 விலை
1 2 ரூ.30 ரூ.40 ரூ.70
2 2 ரூ.30 ரூ.40 ரூ.70
3 2 ரூ.30 ரூ.55 ரூ.85
4 2 ரூ.30 ரூ.55 ரூ.85
5 2 ரூ.40 ரூ.45 ரூ.85
6 2 ரூ.35 ரூ.50 ரூ.85
7 2 ரூ.40 ரூ.60 ரூ.100
8 2 ரூ.40 ரூ.60 ரூ.100
சிபிஎஸ்இ 10, 12 வகுப்புகளில் ‘திறந்த புத்தகம்’ தேர்வு முறை
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளில் ‘திறந்த புத்தகம்’ தேர்வு முறை வரும் 2013&14ம் ஆண்டு நடைமுறைக்கு வர இருக்கிறது.
மனப்பாடம் செய்து பாடம் படிக்கும் நடைமுறைக்கு ஓரளவு தீர்வு காணும் வகையில் சிபிஎஸ்இ புதிய தேர்வுமுறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. 10, 12ம் வகுப்புகளில் போர்டு தேர்வுகளுக்கு திறந்த புத்தகம் என்ற தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 2013&14 முதல் இது நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
திறந்த புத்தம் என்ற உடன் புத்தகத்தை திறந்துவைத்து தேர்வு எழுதும் நடைமுறை அல்ல. தேர்வில் எந்தெந்த பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறுமோ 4 மாதங்கள் முன்பே அது தொடர்பாக மாணவ மாணவியருக்கு தெரிவிக்கப்படும். அதனை மட்டும் படித்தால் போதும் என்ற நிலை மாணவர்களுக்கு உருவாவதால் அவர்களின் மனரீதியான அழுத்தம், தேர்வு பயம் குறையும். முடிந்த வரை நன்றாக படிக்கவும், தேர்வு எழுதவும் முடியும் என்பது இதற்கு மற்றொரு காரணம் ஆகும்.
பள்ளிகளில் தேர்வு முறையில் புனரமைப்பு செய்வது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நியமித்த குழு இதுபோன்ற பரிந்துரைகளை அளித்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் புதிய தேர்வு முறை தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது
மனப்பாடம் செய்து பாடம் படிக்கும் நடைமுறைக்கு ஓரளவு தீர்வு காணும் வகையில் சிபிஎஸ்இ புதிய தேர்வுமுறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. 10, 12ம் வகுப்புகளில் போர்டு தேர்வுகளுக்கு திறந்த புத்தகம் என்ற தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 2013&14 முதல் இது நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
திறந்த புத்தம் என்ற உடன் புத்தகத்தை திறந்துவைத்து தேர்வு எழுதும் நடைமுறை அல்ல. தேர்வில் எந்தெந்த பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறுமோ 4 மாதங்கள் முன்பே அது தொடர்பாக மாணவ மாணவியருக்கு தெரிவிக்கப்படும். அதனை மட்டும் படித்தால் போதும் என்ற நிலை மாணவர்களுக்கு உருவாவதால் அவர்களின் மனரீதியான அழுத்தம், தேர்வு பயம் குறையும். முடிந்த வரை நன்றாக படிக்கவும், தேர்வு எழுதவும் முடியும் என்பது இதற்கு மற்றொரு காரணம் ஆகும்.
பள்ளிகளில் தேர்வு முறையில் புனரமைப்பு செய்வது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நியமித்த குழு இதுபோன்ற பரிந்துரைகளை அளித்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் புதிய தேர்வு முறை தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது
Monday, August 6, 2012
Sunday, August 5, 2012
முதுகலை ஆசிரியர் இறுதி பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட முடிவு
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, சில
மாதங்களுக்கு முன், போட்டித் தேர்வு நடந்தது. மதிப்பெண் மற்றும் இன சுழற்சி
அடிப்படையில், 3,100 பேர், நேற்று மாவட்ட தலை நகரங்களில் நடந்த சான்றிதழ்
சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறும்போது, ""அனைத்து மாவட்டங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் எவ்வித பிரச்னையும் இன்றி நடந்தன. ஒரு வாரத்தில், இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்,'' என்றனர்.
டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறும்போது, ""அனைத்து மாவட்டங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் எவ்வித பிரச்னையும் இன்றி நடந்தன. ஒரு வாரத்தில், இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்,'' என்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி - விடுமுறையில் குழப்பம்
கிருஷ்ண ஜெயந்தியை பொதுமக்கள் இம்மாதம் 8ம் தேதி கொண்டாடும் நிலையில்,
கிருஷ்ண ஜெயந்திக்கான அரசு விடுமுறை அடுத்த மாதம் 8ம் தேதி
விடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பகவான் கிருஷ்ணர் ஆவணி மாதம் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். இந்தாண்டு, கிருஷ்ணஜெயந்தி வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் ஆவணி மாதத்தில் வரும் வேளையில் நிர்ணயம் செய்துள்ளனர். இதையொட்டியே அனைத்து காலண்டர்களிலும் கிருஷ்ண ஜெயந்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் விடுமுறை பட்டியலிலும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என குறிப்பிடப்பட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, ஆவணி அவிட்டத்தன்று பிராமணர்கள் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்த, எட்டாவது நாள் வரும் அஷ்டமி திதியன்று கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு, ஆவணி அவிட்டம், ஆடி மாதத்தில் 17ம் தேதி அதாவது இம்மாதம் முதல் தேதி வந்துள்ளது. இதைபின்பற்றி, பிராமணர்கள் அன்று பூணூல் மாற்றிக் கொண்டனர். இதையடுத்து, கிருஷ்ண ஜெயந்தி தற்போது இம்மாதம் 9ம் தேதியன்று அஷ்டமி திதியில் கொண்டாடப்படுகிறது. ஆனால், அரசு அறிவிப்போ, அடுத்த மாதம் 8ம் தேதி அஷ்டமி திதியாக உள்ளது.
இதுகுறித்து, ஜோதிடர் சீனிவாசன் கூறும்போது, "ஆவணி மாதத்தில் முதல் தேதி மற்றும் 30ம் தேதியில் என இரண்டுமுறை அமாவாசை வருகிறது. இதனால் தான் ஆடிமாதத்தில் ஆவணி அவிட்டம் வருகிறது. இதை அடியொற்றியே, கிருஷ்ண ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது,'' என்றார்.
இதைத் தொடர்ந்து, அரசு விடுமுறை தினம் மாற்றப்படுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பகவான் கிருஷ்ணர் ஆவணி மாதம் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். இந்தாண்டு, கிருஷ்ணஜெயந்தி வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் ஆவணி மாதத்தில் வரும் வேளையில் நிர்ணயம் செய்துள்ளனர். இதையொட்டியே அனைத்து காலண்டர்களிலும் கிருஷ்ண ஜெயந்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் விடுமுறை பட்டியலிலும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என குறிப்பிடப்பட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, ஆவணி அவிட்டத்தன்று பிராமணர்கள் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்த, எட்டாவது நாள் வரும் அஷ்டமி திதியன்று கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு, ஆவணி அவிட்டம், ஆடி மாதத்தில் 17ம் தேதி அதாவது இம்மாதம் முதல் தேதி வந்துள்ளது. இதைபின்பற்றி, பிராமணர்கள் அன்று பூணூல் மாற்றிக் கொண்டனர். இதையடுத்து, கிருஷ்ண ஜெயந்தி தற்போது இம்மாதம் 9ம் தேதியன்று அஷ்டமி திதியில் கொண்டாடப்படுகிறது. ஆனால், அரசு அறிவிப்போ, அடுத்த மாதம் 8ம் தேதி அஷ்டமி திதியாக உள்ளது.
இதுகுறித்து, ஜோதிடர் சீனிவாசன் கூறும்போது, "ஆவணி மாதத்தில் முதல் தேதி மற்றும் 30ம் தேதியில் என இரண்டுமுறை அமாவாசை வருகிறது. இதனால் தான் ஆடிமாதத்தில் ஆவணி அவிட்டம் வருகிறது. இதை அடியொற்றியே, கிருஷ்ண ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது,'' என்றார்.
இதைத் தொடர்ந்து, அரசு விடுமுறை தினம் மாற்றப்படுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Saturday, August 4, 2012
உதவித்தொகை முறைகேடு - 81 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
நாமக்கல்: கல்வி உதவித்தொகை தருவதில் முறைகேடு செய்துள்ளதாக நாமக்கல் மாவட்டத்தில் 81 தலைமை ஆசிரியர்கள் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.1850 வழங்குவதில் முறைகேடு செய்த்துள்ளதாக தலைமை ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ,ஓர் ஆசிரியர் கூறுகையில், முழுமையான விசாரணைக்கு பின்பே தவறு நடந்துள்ளதா? என அறிய முடியும் என்று கூறினார்
Friday, August 3, 2012
பள்ளிக்கல்வி இயக்குனராக திரு கே.தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வி இயக்குனராக திரு கே.தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 6ம் தேதி, புதிய பொறுப்பை ஏற்கிறார். அன்னாரின் பணி சிறக்க TNSCHOOLS-ன் மனமார்ந்த வாழ்த்துக்கள்
கணிதப்பிரிவில்30 கேள்விகளுக்கு பதிலாக 20 கேள்விகளே கேட்கப்பட்டன ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்தவேண்டும் பட்டதாரிகள் கோரிக்கை
சென்னை, ஆக.1-
பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முறைப்படி நடத்தாததால் அதை ரத்து செய்துவிட்டு மீண்டும் நடத்தவேண்டும் என்று பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு
கடந்த ஆகஸ்டு 12-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தாள்-1 என்றும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தாள்-2 என்றும் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 61/2 லட்சம் பேர் எழுதினார்கள்.
இந்த தேர்வுகளில் விடைத்தாள் நகலை தேர்வு எழுதியவர்களே வீடுகளுக்கு எடுத்துச்சென்றனர்.
சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்று கல்வியாளர்கள், தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் (கீ-ஆன்சர்) விடைகளை வெளியிட்டது. அதில் ஏதாவது சந்தேகம் இருந்தாலோ விடைகள் தவறாக தெரிந்தாலோ ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தவறான விடைகள்
அந்த விடைகளில் சில தவறாக இருந்ததாக ஆசிரியர்கள் புகார் செய்தனர்.
நிபுணர்களை அழைத்து சரியான பதிலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிந்து அதை இணையதளத்தில் வெளியிடுவதுதான் சரியானது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் மேலப்பட்டியை சேர்ந்த உதவி பேராசிரியர் செல்வராசு தெரிவித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
கணிதத்தில் 20 கேள்விகள் மட்டுமே...
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 தேர்வில் கணிதப்பிரிவில் 30 கேள்விகள் கேட்பதற்கு பதிலாக 20 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. இதனால் கணிதம் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என்.சி.டி.இ. தெரிவித்த விதிமுறைப்படி கணிதத்தில் 30 கேள்விகள் கேட்கப்படவேண்டும். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் அதை கடைப்பிடிக்காமல் 20 கேள்விகளை மட்டுமே கேட்கப்பட்டுள்ளது.
எனவே கணித ஆசிரியர்களின் நலன் கருதி ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்துவிட்டு சரி சமமாக கேள்விகள் எடுத்து தேர்வை நடத்தவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது போல பல பட்டதாரிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் தேர்ச்சி சதவீத மார்க்கை குறைக்கவேண்டும் என்றும் ஏராளமான ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Thursday, August 2, 2012
2012 - 2013ஆம் ஆண்டிற்கான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணிமாற்றத்திற்கான பட்டியல் தயாரிக்க நடுநிலை தலைமை ஆசிரியர்களின் விவரங்களை இயக்ககத்திற்கு அனுப்ப வரும் 6ஆம் தேதிக்குள் உத்தரவு.
2012 - 2013ஆம் ஆண்டிற்கான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணிமாற்றத்திற்கான பட்டியல் தயாரிக்க நடுநிலை தலைமை ஆசிரியர்களின் விவரங்களை தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு வரும் 6ஆம் தேதிக்குள் அனுப்ப அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதில் ஆசிரியர்களின் பெயர், பள்ளி, ஒன்றியம், பணியில் சேர்ந்த தேதி, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவியேற்ற நாள், கல்வித்தகுதி, துறைத் தேர்வு முடித்த விவரம், தண்டனை ஏதேனும் நிலுவையில் இருப்பின் அவற்றின் விவரங்களை அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்கக் கல்வி - RTE 2009ன்படி பள்ளிகளில் நலிந்த பிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு 25 விழுக்காடு, மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு செய்த விவரம் அனுப்ப உத்தரவு.
தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 1 / எச் / எப் / 2011 , நாள். 08.2012 பதிவிறக்கம் செய்ய... CLICK DOWNLOAD
எஸ்பிஐ வங்கிகளில் 7,740 கிளார்க் பணி ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 13 கடைசி நாள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அசோசியேட் வங்கிகளில் கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 13ம் தேதி கடைசி நாள். ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிக்கானீர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்,
CLICK HERE TO APPLY ON LINE SBI CLERK...
CLICK HERE TO APPLY ON LINE SBI CLERK...
பி.ஏ., நடைமுறை ஆங்கிலம் (Functional English) மற்றும் ஆங்கில இலக்கியம் சமமானதே: ஐகோர்ட்
பி.ஏ., நடைமுறை ஆங்கிலம் மற்றும் ஆங்கில இலக்கிய பாடங்களை வேறுபடுத்தி பார்க்கக்கூடாது எனவும், நடைமுறை ஆங்கிலம் படித்தவர்களுக்கு பட்டதாரி உதவி ஆசிரியர் பணி வழங்க வேண்டும் எனவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
சென்னை, ஆக.2: பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவுகள் நாளை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட உள்ளது.
பொதுத்தேர்வு எழுதிய 7.56 லட்சம் மாணவர்களில் 1 லட்சம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். இவர்களுக்கான தேர்வுகள் கடந்த ஜூன், ஜூலையில் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Wednesday, August 1, 2012
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து வழக்கு
மூன்று ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . வழக்கு எண்:MP(MD)No:2 of 2012 in W.P.(MP)No:9218/2012.Date:11.07.2012
Subscribe to:
Posts (Atom)