கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Tuesday, August 14, 2012

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள்.500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்-மத்திய அரசு கட்டுப்பாடு

    தகவல்கள் கோரி விண்ணப்பம் செய்வோர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக இருந்தால், அவர்கள் விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர் என்பதற்கான, அரசு வழங்கிய சான்றிதழின் நகலை இணைக்க வேண்டும். பிற விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்துடன், 10 ரூபாய்க்கான நீதிமன்ற கட்டண வில்லையை இணைக்க வேண்டும்
    .இவ்வாறு பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக, மத்தியப் பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள் 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். இதில், மத்திய பொது தகவல் அலுவலர் பெயர், முகவரி, விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் இணைப்புக்கள் போன்றவை கணக்கில் எடுப்பதில்லை. இருப்பினும், 500 வார்த்தைகளுக்கு மேல் இருந்தாலும், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படாது.மேலும், மத்திய தகவல் ஆணையரிடம், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்பவர்கள், அவர்களே நேரடியாக ஆஜராக வேண்டும் அல்லது பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும். இல்லையெனில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராகலாம்.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்கப்பட்டு, பதில்கள் தபாலில் அனுப்பப்படும் போது,50 ரூபாய்க்கு மேல், செலவு ஏற்பட்டால், கூடுதலாகும் தபால் செலவை விண்ணப்பதாரரே ஏற்க வேண்டும்.

    No comments:

    Post a Comment