தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 3,600 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 4.80 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர்
தேர்வெழுத விண்ணப்பித்தவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexam.net என்ற இணையதளத்தில் இருந்து நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களைப் பெற condacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்டறிந்து கொள்ளலாம். நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாத சென்னை தேர்வு மைய விண்ணப்பதாரர்கள், தேர்வாணைய அலுவலகத்தையும், இதர தேர்வு மைய விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் அணுகி நுழைவுச் சீட்டுப் பெறலாம் என்று தமிழ்நாடு தேர்வாணையம் அறிவித்துள்ளது. தாங்கள் விண்ணப்பித்ததற்கான சான்றின் நகலை சமர்ப்பித்து அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment