முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ந்தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் நல்லாசிரியர் விருதை வழங்கி வருகின்றன. கடந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு வழங்கப்பட உள்ளது. வருகிற 5-ந்தேதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி ஆசிரியர்களை கவுரவிக்கிறார்.
தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் விவரம்:-
பாண்டியன் (முதல்வர். ஸ்ரீசிவகாமி கலாலயா மேல் நிலைப்பள்ளி, மந்தை வெளி, சென்னை).
ரேவதி (உதவி தலைமை ஆசிரியை செயிண்ட் பிலோமினாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம்), முத்துராமலிங்கம் (உதவி தலைமை ஆசிரியர், சாந்தி நிகேதன் வெங்கடாசலபிள்ளை, டி.கல்லுப்பட்டி, மதுரை).
வாசுகி (தலைமை ஆசிரியை, விக்டோரியா நினைவு மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம்), பூங்காவனம் (அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, ஓசூர்), பெல் (முதல் வர் ஹில்டன் மெட்ரிக் பள்ளி, பழைய குற்றாலம், நெல்லை), மதியழகன் (முதுநிலை தமிழாசிரியர், இந்து மேல் நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி, சென்னை).
விருது பெறும் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் விவரம்:-
பானுமதி (தலைமை ஆசிரியை, காவேரி தொடக்க பள்ளி, சாலிகிராமம், சென்னை), கண்ணப்பன் (தலைமை ஆசிரியர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி, பாகசாலல், நெல்லை), பாபுதவமணி (புனித அடைக்கல அன்னை பள்ளி, முகந்தனூர், திருவாரூர்).
செல்வராஜ் (தலைமை ஆசிரியர், ஊராட்சி நடுநிலைப்பள்ளி, ஊக்கடை, தஞ்சை), திருநாவுக்கரசு (தலைமை ஆசிரியர், சிதம்பரம் நடுநிலைப்பள்ளி, சின்ன வெண்மணி, பெரம் பலூர்), வளர்மதி (தலைமை ஆசிரியை, ஊராட்சி நடுநிலைப்பள்ளி, அரியாணிப்பட்டி, புதுக் கோட்டை).
ஆரோக்கியம் (தலைமை ஆசிரியர், செயிண்ட் ஆண்டனி தொடக்க பள்ளி, தெருக்கூசந்தனூர், சிவகங்கை), பரமேஸ்வரி (ஊராட்சி நடுநிலைப்பள்ளி, கடலாடி, ராமநாதபுரம்), முருகேசன் (தலைமை ஆசிரியர் சங்கர நாராயணன் நினைவு நடுநிலைப் பள்ளி, வடுகப்பட்டி, தேனி).
சாம்குமார் (தலைமை ஆசிரியர், ஊராட்சி தொடக்க பள்ளி, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி), குமுதம் (நாடார் நடுநிலைப்பள்ளி, கோவில்பட்டி), மாடசாமி (தலைமை ஆசிரியர் (ஊராட்சி தொடக்கப்பள்ளி, மேலகரம், நெல்லை).
ஜான்செல்வராஜ் (தலைமை ஆசிரியர் ஊராட்சி தொடக்க பள்ளி, போடம்பட்டி, திண்டுக்கல்), கருப்பண்ணன் (தலைமை ஆசிரியர் காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப்பள்ளி, வரதராஜபுரம், கோவை), ராமலட்சுமி (தலைமை ஆசிரியை அம்பத்தூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, பாடி, சென்னை).
No comments:
Post a Comment