கல்வி உதவித் தொகை கையாடல் வழக்கை சிபிசிஐடி அல்லது லஞ்ச ஒழிப்புதடுப்புப் பிரிவுக்கு மாற்ற மாவட்டக் காவல் துறை திட்டமிட்டுள்ளது.சுகாதாரமற்ற தொழில் புரிவோர் குழந்தைகளுக்காக வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையை பள்ளியில் படிக்கும்
அனைத்துக் குழந்தைகளின் பெயரிலும் பட்டியல் தயாரித்து கையாடல் செய்ததாக நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 77 பேர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கல்வி உதவித் தொகை கையாடல் என்பது மிகப் பெரிய ஊழலாக நடந்துள்ளது. இதில், இப்போது 77 தலைமையாசிரியர்கள் மட்டுமே சிக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்கள், ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டவும், அனைத்து வழிகளிலும் விரிவான விசாரணை நடத்தவும் சிபிசிஐடி அல்லது லஞ்ச ஒழிப்பு தடுப்புப் பிரிவு மேற்கொண்டால் மட்டுமே சிறப்பாக இருக்கும். எனவே இந்த வழக்கை இப் பிரிவுகளுக்கு மாற்றுவது தொடர்பாக உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்று மாவட்டக் காவல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment