பள்ளி அமைக்க நன்கொடையாக நிலம் கொடுத்தவரின் பெயரை, அப்பள்ளிக்குச் சூட்ட முடியாது என, மதுரை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.திருச்சி மணச்சலூரை சேர்ந்த கைலாசம் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: ஊரில் செயல்படும் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு, 1966ல், தாத்தா அய்யணன் செட்டியார், இரண்டு ஏக்கர் நிலமும், நான் ஓர் ஏக்கர் நிலமும் கொடுத்தோம். ஆக, மூன்று ஏக்கர் நிலமும் எங்களுக்குச் சொந்தமானது. நிலம் கொடுத்த என் தாத்தா பெயரை பள்ளிக்குச் சூட்டாமல், கேட் கொடுத்தவர்கள் பெயர்களை போட்டுள்ளனர். தாத்தா பெயர் சூட்ட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி சந்துரு:
நிலம் கொடுத்ததற்கு மட்டுமே தாத்தா பெயர் வைக்க உரிமை கோர முடியாது, இப்பள்ளிக்குத் தனியார் பெயர் வைத்தால், தனியார் பள்ளி மாதிரியாகும். கட்டடங்கள் கட்டும் போது கல்வெட்டுகள் வைக்க மட்டுமே அரசாணை உள்ளது.
நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்
No comments:
Post a Comment