கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Saturday, December 8, 2012

    வீட்டு கதவை தட்டி ஆசிரியர் வேலைக்கு அழைப்பு : 18 ஆயிரம் ஆசிரியர் நியமனத்தில் ருசிகரம்

    டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்தில், 13ம் தேதி, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட இருப்பதால், கலந்தாய்வு குறித்த தகவல்களை, பல்வேறு வகைகளில் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். பல மாவட்டங்களில், ஆசிரியர் வேலைக்கு தேர்வு பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று,..

    பணி நியமன கலந்தாய்வு அழைப்பு கடிதங்களை வழங்கினர். இதை சற்றும் எதிர்பாராமல், தேர்வு பெற்றோர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர்.டி.இ.டி., தேர்வு மூலம், 18 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான முடிவு, 4ம் தேதி வெளியிட்ட நிலையில், ஒரே வாரத்தில், 13ம் தேதி, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. எப்போதும் இல்லாத வகையில், ஒரே நேரத்தில், அதிக பணியிடங்கள் நிரப்பப்படுவது இதுவே முதல் முறை.

    கலந்தாய்வு விவரம் : குறுகிய காலத்தில், பணி நியமனம் செய்ய உத்தரவிட்டதால், அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, "ஆன்-லைன்' மூலம், பணி நியமன கலந்தாய்வை நடத்த, ஏற்பாடு செய்துள்ளனர். பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு பெற்றுள்ள, 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு இன்றும், நாளையும் நடக்கிறது.
    இன்று, மாவட்டத்திற்குள், பணி நியமனத்திற்கான கலந்தாய்வு நடக்கிறது. 32 மாவட்டங்களிலும், தேர்வு செய்யப்பட்ட மையங்களில் கலந்தாய்வு நடக்கிறது. நாளை, மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வு நடக்கும் இடங்கள் இறுதி செய்யப்பட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளன.

    இடைநிலை ஆசிரியர் : இதேபோல், தொடக்க கல்வித் துறையில், 9,000 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, 11ம் தேதி நடக்கிறது. பள்ளி கல்வித் துறை சார்பில் நடக்கும் கலந்தாய்வு இடங்களிலேயே, இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது. காலையில், மாவட்டத்திற்குள் பணி நியமனத்திற்கான கலந்தாய்வும், பிற்பகலில், வேறு மாவட்டங்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.

    "டோர் டெலிவரி' : கலந்தாய்வு நடக்கும் விவரங்களை, ஆசிரியர் வேலைக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு தெரிவிப்பதற்கு, பல்வேறு முறைகளை கல்வித் துறை அதிகாரிகள் கையாண்டு வருகின்றனர். நாளிதழ்கள், "டிவி' சேனல்கள் மூலம், கலந்தாய்வு விவரங்களை தெரிவித்ததுடன், தேர்வர்களின் அலைபேசி எண்களை பயன்படுத்தி, நேரடியாக அவர்களுக்கு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், பணிபுரியும் ஆசிரியர்களை, புதிதாக தேர்வு பெற்றவர்களின் வீடுகளுக்கு அனுப்பி, கலந்தாய்வு கடிதங்களை நேரடியாக வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, நேற்று, ஆசிரியர்கள் பல பகுதிகளுக்குச் சென்று, தேர்வு பெற்றவர்களின் வீட்டு கதவை தட்டி, "வாழ்த்துக்கள் மேடம்; வாழ்த்துக்கள் சார்' என, தெரிவித்து, கலந்தாய்வு கடிதங்களை வழங்கினர். திடீரென ஆசிரியர்கள், வீடுகளுக்கு வந்து கலந்தாய்வு அழைப்பு கடிதங்களை வழங்கியது, தேர்வு பெற்றவர்களை, மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.

    விழா நேரம் மாற்றம் : சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 13ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு விழா நடக்கும் என, முதலில் தெரிவிக்கப்பட்டது. 18 ஆயிரம் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர், இலவச திட்டங்களைப் பெறவரும் மாணவ, மாணவியர், பெற்றோர் என, 50 ஆயிரம் பேர் வரை, விழாவிற்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
    மாலையில் விழா நடத்தினால், அனைவரும், வீட்டிற்கு திரும்பிச் செல்வதில் பிரச்னை ஏற்படும் என, அதிகாரிகள் கருதினர். இதனால், பகல், 12:00 மணிக்கு, விழா மாற்றப்பட்டதாகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    No comments:

    Post a Comment