பீகாரில், பள்ளி மாணவியர், 10 லட்சம் பேருக்கு, தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படும்,'' என, அம்மாநில, கல்வி திட்ட குழு இயக்குனர் ராகுல் சிங் கூறினார்.இது குறித்து, ராகுல் சிங் கூறியதாவது:மாநிலத்தில், பெருகி வரும் குற்றங்களை தடுக்கவும், பெண்கள், தங்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளிலிருந்து, தங்களை காத்துக் கொள்ளவும், மாநிலத்தில் உள்ள அனைத்து நடுநிலை பள்ளிகளிலும், 10 லட்சம் மாணவியருக்கு கராத்தே உட்பட, தற்காப்பு கலை பயிற்சிகள், அரசின் சார்பில், இலவசமாக வழங்கப்படும்.முதல் கட்டமாக, மாநிலத்தில், 150 நடுநிலை பள்ளிகளில் உள்ள, 1,500 மாணவியருக்கு, தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டம், மாநிலத்தின் அனைத்து பள்ளிகளுக்கும், விரைவில் விரிவுபடுத்தப்படும். இதனால், மாணவியரின் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, அவர்களின் எதிர்காலமும் சிறந்து விளங்கும். இவ்வாறு, அவர் கூறினார்.கடந்த மாதம், அரசு விழா ஒன்றில் பங்கேற்று பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ""பெண்களின் பாதுகாப்புக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளை தெரிந்து கொள்வது அவசியம்'' என்றார்.
No comments:
Post a Comment